ஐபிஎல் 2022-ன் இன்றைய போட்டியில் லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணியும், பஞ்சாப் கிங்ஸ் அணியும் மோதின. புனேவில் இன்று 7.30 மணிக்கு தொடங்கியது.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

டாஸ் வென்ற பஞ்சாப் கிங்ஸ் பவுலிங்கை தேர்ந்தெடுக்க லக்னோ அணிக்கு குயிண்டன் டி காக்கும், கே.எல். ராகுலும் தொடக்கம் தந்தனர். இந்த சீசனில் முரட்டு ஃபார்மில் இருக்கும் ராகுலை 6 ரன்களில் ரபாடோ மூன்றாவது ஓவரிலேயே வெளியேற்றி அதிர்ச்சி அளித்தார்.



அதனையடுத்து டிகாக்குடன் தீபக் ஹூடா இணைந்தார். இந்த ஜோடி பஞ்சாப்பின் பந்துவீச்சை அதிரடியாக எதிர்கொண்டது. ஐந்தாவது ஓவரில் டி காக் ரபாடோ பந்துவீச்சில் அடுத்தடுத்து இரண்டு சிக்சர்கள் அடித்து அசத்தினார்.


பவர் ப்ளே முடிவில் லாகூர் அணி ஒரு விக்கெட் இழப்புக்கு 39 ரன்களை சேர்த்தது. தொடர்ந்து அதிரடியாக ஆடிய டி காக் - ஹூடா ஜோடி 50 ரன்களை சேர்த்தது. 13ஆவது ஓவரில் தொடர்ந்து இரண்டு பவுண்டரிகளை அடித்து டி காக் ஆட்டமிழந்தார்.



அவரைத் தொடர்ந்து களமிறங்கிய க்ருனால் பாண்டியா தீபக் ஹூடாவுடன் இணைந்தார். இந்த ஜோடி நிலைத்து நின்று ஆடும் என எதிர்பார்த்திருந்த சூழலில் 14ஆவது ஓவரில் 34 ரன்கள் எடுத்திருந்த தீபக் ஹூடா ரன் அவுட் ஆனார். இதனால் அந்த அணி 104 ரன்களுக்கு மூன்றாவது விக்கெட்டை இழந்தது.


ஹூடா வெளியேறியதை அடுத்து மார்க் ஸ்டாய்னிஸ் களம் புகுந்தார். அவர் உள்ளே வந்த சில நிமிடங்களிலேயே க்ருனால் பாண்டியா 7 ரன்களுக்கு ராபாடோ பந்துவீச்சில் ஆட்டமிழந்தார். க்ருனால் ஆட்டமிழந்ததை அடுத்து அந்த அணி 104 ரன்களுக்கு 4 விக்கெட்டுகளை இழந்து தத்தளித்தது. 


க்ருனாலுக்கு அடுத்ததாக களமிறங்கிய இளம் வீரர் பதோனியும் வந்தவேகத்திலேயே ரபாடோ பந்துவீச்சில் 4 ரன்களுக்கு ஆட்டமிழந்தார். இக்கட்டான நிலையில் ஜேசன் ஹோல்டரும், மார்கஸ் ஸ்டாய்னிஸும் ஜோடி சேர இதனையும் பஞ்சாப் அணி எளிதாக பிரித்தது. ராகுல் சஹார் ஓவரில் அவரிடமே கேட்ச் கொடுத்து ஸ்டாய்னிஸ் ஒரு ரன்னில் ஆட்டமிழக்க அணியின் ஸ்கோர் 111/6 என்ற நிலைக்கு சென்றது. இதனால் லக்னோ அணி ரசிகர்கள் கவலையடைந்தனர்.



தொடர்ந்து ஹேசன் ஹோல்டரும் ஆட்டமிழக்க லக்னோ அணி 150 ரன்களை எட்டுமா என்ற சந்தேகம் எழுந்தது. ரபாடா வீசிய 19ஆவது ஓவரில் சமீரா அடுத்தடுத்து இரண்டு சிக்சர்கள் அடிக்க ரசிகர்கள் உற்சாகமடைந்தனர். ஆனால் அந்த ஓவரின் மூன்றாவது பந்தில் 17 ரன்களுக்கு அவரும் ஆட்டமிழந்தார். கடைசி ஓவரில் 9 ரன்கள் எடுக்கப்பட்டதால் லக்னோ அணி 20 ஓவர்கள் முடிவில் 8 விக்கெட் இழப்புக்கு 153 ரன்களை எடுத்தது.


154 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் பஞ்சாப் அணி களமிறங்கியது. அந்த அணிக்கு மயாங்க் அகர்வாலும், ஷிகர் தவானும் தொடக்கம் தந்தனர்.பஞ்சாப் தரப்பில் முதல் ஓவரை வீசிய மொசின் மெய்டன் ஓவராக வீசினார். அடுத்த ஓவரிலும் பஞ்சாப் தொடக்க ஆட்டக்காரர்கள் திணற மூன்றாவது ஓவரை பயன்படுத்தி 15 ரன்கள் எடுத்தனர்.


அதனைத் தொடர்ந்து உருவான மொமண்ட்டத்தை தக்க வைத்த அகர்வாலும், தவானும் லக்னோ பந்துவீச்சை பொறுமையாக எதிர்கொண்டனர். ஆனால் மாயாங்க் அகர்வால் துரதிர்ஷ்டவசமாக 25 ரன்களில் வெளியேறினார்.



அவர் வெளியேறியதை அடுத்து தவானும் ஐந்து ரன்களில் பெவிலியன் திரும்பினார். தொடக்க ஜோடி வெளியேறிய பிறகு பேர்ஸ்டோவும், ராஜபக்‌ஷே இணைந்தனர்.


மேலும் படிக்க | மும்பை இந்தியன்ஸ் ஏலத்தில் தவறவிட்ட 3 ஸ்டார் பிளேயர்கள்


இந்த ஜோடி நிலைத்து நின்று ஆடும் என நினைத்திருந்த நேரத்தில் ராஜபக்‌ஷே 9 ரன்களில் க்ருனால் பாண்டியா ஓவரில் தனது விக்கெட்டை இழந்தார்.இதனால் அந்த அணி 8 ஓவர்களில் 58 ரன்களுக்கு மூன்று விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது.


இதனையடுத்து பேர்ஸ்டோவும், லிவிங்ஸ்டனும் ஜோடி சேர்ந்தனர். லக்னோ பந்துவீச்சை நிதானமாக எதிர்கொண்ட இவர்கள் பிஷ்னோய் வீசிய 11ஆவது ஓவரில் இரண்டு சிக்சர்கள் ஒரு பவுண்டரி என மொத்தம் 11 ரன்கள் அடித்தனர்.



தொடர்ந்து விளையாடிய இந்த ஜோடி அணியை இக்கட்டான நிலையிலிருந்து காப்பாற்றும் என்ற ரசிகர்கள் நினைத்திருந்த சமயத்தில் லிவிங்ஸ்டன் மொசின் ஓவரில் 18 ரன்களுக்கு நடையை கட்டினார்.


47 பந்துகளுக்கு 65 ரன்கள் தேவை என்ற சூழலில் பேர்ஸ்டோவுடன் ஜிதேஷ் ஜோடி சேர்ந்தார். ஜிதேஷும் வந்தவுடன் இரண்டு ரன்களில் வெளியேறி பஞ்சாப் ரசிகர்களை சோகத்தில் ஆழ்த்தினார்.


மேலும் படிக்க | ’கொல்கத்தாவுக்குள் ஏதோ சரியில்லை’ போட்டுடைத்த வீரர்


அவரைத் தொடர்ந்து ரிஷி தவான் களமிறங்கினார். ஒருபுறம் தொடர்ந்து விக்கெட் சரிந்தாலும் நிலைத்து நின்று ஆடிய பேர்ஸ்டோவும் 32 ரன்களில் ஆட்டமிழந்தார். இதனால் அந்த அணியின் தோல்வி உறுதியானது. அவரைத் தொடர்ந்து வந்த வீரர்களும் அடுத்தடுத்து சோபிக்காமல் போக பஞ்சாப் 20 ஓவர்கள் முடிவில் 8 விக்கெட்டுகள் இழப்புக்கு 133 ரன்கள் மட்டுமே எடுத்தது. இதன் மூலம் லக்னோ அணி 20 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.


முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link - https://bit.ly/3hDyh4G


Apple Link - https://apple.co/3loQYeR