ஐபிஎல் போட்டிகள் இந்தியாவில் 2008ம் ஆண்டில் இருந்து நடைபெற்று வருகின்றன.  முதலில் 8 அணிகளுடன் களமிறங்கிய ஐபிஎல் போட்டிகள், இடையில் 10 அணிகளாக மாறியது.  பிறகு மீண்டும் 8 ஆக குறைக்கப்பட்டு, இந்த ஆண்டு முதல் மீண்டும் 10 அணிகளாக மாற்றப்பட்டுள்ளன.  இதுவரை நடைபெற்ற 14 ஐபிஎல் சீசன்களில் மும்பை அணி 5 முறையும், சென்னை அணி 4 முறையும் கோப்பைகளை வென்றுள்ளது.  வேறு எந்த அணியும் தொட முடியாத ஒரு உயரத்தில் சென்னை மற்றும் மும்பை அணிகள் உள்ளன.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING


மேலும் படிக்க | மும்பை இந்தியன்ஸ் வீரரின் காதலியா இவர்?


ரோஹித் சர்மா தலைமையில் மும்பை அணி 2013, 2015, 2017, 2019, 2020 ஆகிய ஆண்டுகளில் கோப்பைகளை வென்றுள்ளது.  தோனி தலைமையில் சென்னை அணி 2010, 2011, 2018, 2021 ஆகிய ஆண்டுகளில் கோப்பைகளை வென்றுள்ளது.  டேவிட் வார்னர், ஆடம் கில்கிறிஸ்ட் மற்றும் ஷேன் வார்னே ஆகிய வெளிநாட்டு வீரர்கள் மட்டுமே கேப்டனாக ஐபிஎல் கோப்பைகளை வென்றுள்ளனர்.  இவர்கள் மூன்று பேரும் ஆஸ்திரேலியாவை சேர்ந்தவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது. ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் கேப்டனாக இருந்து 2008ம் ஆண்டு ஷேன் வார்னே கோப்பையை வென்றார்.  2009ம் ஆண்டு டெக்கான் அணியின் கேப்டனாக ஆடம் கில்கிறிஸ்ட் கோப்பையை வென்றார்.  2016ம் ஆண்டு சன்ரைசஸ் ஹைதராபாத் அணியின் கேப்டனாக டேவிட் வார்னர் கோப்பையை வென்றுள்ளார். 



இவர்களை தவிர வேறு எந்த வெளிநாட்டு வீரரும் ஐபிஎல் அணியின் கேப்டனாக இருந்து கோப்பையை வெல்லவில்லை.  மேலும் ஒரு அணியின் கேப்டனாக இருந்து அதிக வெற்றிகளை பெற்று தந்த கேப்டன்களின் வரிசையில் தோனி முதல் இடத்தில் உள்ளார்.  204 போட்டிகளில் சென்னை அணியின் கேப்டனாக இருந்து 121 வெற்றிகளை பதிவு செய்துள்ளார்.  தோனிக்கு அடுத்தபடியாக விராட் கோலி 140 போட்டிகளில் 64 வெற்றிகளை பெற்றுள்ளார்.  மூன்றாவது மற்றும் 4வது இடங்களில் ரோஹித் சர்மா மற்றும் கவுதம் கம்பீர் உள்ளனர்.  


மேலும் படிக்க | டெஸ்ட் அணியில் 2வது முறையாக நீக்கம் - முடிவுக்கு வரும் இந்திய வீரரின் கிரிக்கெட் வாழ்க்கை


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.


முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link - https://bit.ly/3hDyh4G


Apple Link - https://apple.co/3loQYeR