சிங்கப்பூர் ஓபன் 2022 இறுதிப் போட்டியில் பிவி சிந்து மகுடம் சூடினார்
PV Sindhu wins singapore open badminton Title: சிங்கப்பூர் ஓபன் 2022 இறுதிப் போட்டியில் இந்தியாவின் முதல்தர பேட்மிண்டன் நட்சத்திரம் பிவி சிந்து சீனாவின் வாங் ஷியை வீழ்த்தி பட்டத்தை வென்றார்
பிவி சிந்து 2022 சிங்கப்பூர் ஓபன் பட்டத்தை வென்று வெற்றிக்கொடி நாட்டினார். இன்று நடைபெற்ற சிங்கப்பூர் ஓபன் பேட்மிண்டன் பட்டப் போட்டிகளின் இறுதிச் சுற்றில் வாங் ஷியை வீழ்த்தி சாதனை படைத்தார் இந்தியாவின் தங்க மங்கை சிந்து. இந்த உச்சக்கட்ட மோதலில் இந்திய வீராங்கனையிடம் வாங் ஷி, 21-9, 11-21, 21-15 என்ற செட் கணக்கில் தோற்றுப் போனார்.
இன்று (2022, ஜூலை 17) ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற சிங்கப்பூர் ஓபன் 2022 இறுதிப் போட்டியில் இந்தியாவின் முதல்தர பேட்மிண்டன் நட்சத்திரம் பிவி சிந்து, சீனாவின் வாங் ஷியை வீழ்த்தினார். ஷியை 21-9, 11-21, 21-15 என்ற செட் கணக்கில் தோற்கடித்து வாகை சூடிய சிந்துவுக்கு பலரும் பாராட்டுக்களை தெரிவித்து வருகின்றனர்.
சிந்து சிங்கப்பூர் ஓபன் பட்டத்தை வென்ற இரண்டாவது இந்திய மகளிர் ஷட்லர் மற்றும் ஒட்டுமொத்தமாக மூன்றாவது இந்திய வீராங்கனை ஆவார். சாய்னா நேவால் (2010) மற்றும் பி சாய் பிரனீத் (2017) முறையே பெண்கள் மற்றும் ஆண்கள் ஒற்றையர் பிரிவுகளில் பட்டம் வென்றுள்ளனர்.
மேலும் படிக்க | சுவிஸ் ஓபன் 2022 பெண்கள் ஒற்றையர் பிரிவில் பட்டத்தை வென்றார் பிவி சிந்து
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR