தோனியை இப்படி அழைப்பது மிகவும் கடினம் - காரணம் இதுதான்!
ஐபிஎல் 2022: எம்எஸ் தோனியை `மஹி பாய்` என்று அழைப்பது எளிதானது அல்ல என்று இந்திய மூத்த வீரர் கூறியுள்ளார்.
இந்திய அணியின் முன்னாள் கேப்டன் எம்எஸ் தோனி பல செல்ல பெயர்களால் அனைவராலும் கூப்பிடப்படுகிறார். எம்எஸ், மஹி, கேப்டன் கூல், தி ஃபினிஷர் என்று பல பெயர்கள் உண்டு. ஆனால் பெரும்பாலும் தோனியை அழைக்க அவரது சகாக்கள் மற்றும் ஜுனியர்கள் விரும்பப்படும் ஒரு பெயர் 'மஹி பாய்'. தோனியுடன் விளையாடி வரும் இளம் வீரர் அல்லது வீராங்கனைகள் அவரைப் பற்றி பேசும் போதெல்லாம், அவரை 'மஹி பாய்' என்று அன்புடன் அழைப்பார்கள். இருப்பினும், முன்னாள் இந்திய வீரர், தோனியை 'மஹி பாய்' என்று அழைப்பது எளிதானது அல்ல என்று கூறியுள்ளார். கடந்த 18 ஆண்டுகளாக தோனியுடன் சக வீரர்களாக இருந்து தற்போது சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்காக விளையாடி வரும் ராபின் உத்தப்பா தான் அவ்வாறு கூறியுள்ளார். பல ஆண்டுகளாக இருவருக்கும் இடையேயான நட்பு தற்போது வளர்ச்சியடைந்து உள்ளதாக கூறினார்.
மேலும் படிக்க | ’இந்த வீரரை இந்திய கேப்டனாக்குங்கள்’ சோயிப் அக்தர் சொல்லும் அந்த வீரர் யார்?
இன்று அவரை மஹி பாய் என்று அழைப்பது எனக்கு மிகவும் கடினமாக உள்ளது, ஏனென்றால் நான் அவரை முதலில் சந்தித்த போது, அவரை மஹி, எம்.எஸ் என்று அழைத்தேன். நான் அவருடன் 10-12 ஆண்டுகளுக்கு மேலாக விளையாடினேன். அதனால், நான் அவரிடம் நான் எப்படி உங்களை அழைப்பது என்று கேட்டேன்.
நான் உன்னை மஹி பாய் என்று அழைக்க வேண்டுமா? ஏனென்றால் என்னைச் சுற்றியுள்ள அனைவரும் உன்னை அப்படித்தான் அழைக்கிறார்கள் என்று கேட்டேன். அதற்கு தோனி, என்னை எம்.எஸ் அல்லது மஹி என்று அழைக்கவும் அல்லது நீங்கள் எப்படி வேண்டுமானாலும் அழைக்கவும் என்று கூறினார். \
"நான் 2004-ல் தோனியை முதன்முதலில் சந்தித்தேன். நான் எனது முதல் சேலஞ்சர்ஸ் கோப்பையை அப்போது விளையாடினேன், அது மும்பையில் நடந்தது. அந்தத் தொடரின் போது ஸ்ரீதரன் ஸ்ரீராம் கூட இருந்தார், நான் அவருடன் மிகவும் நெருக்கமாக இருந்தேன். ஸ்ரீ பாய் MS தோனியுடன் நெருக்கமாக இருந்தார். அவர்களும் நன்றாகப் பழகினார்கள். அவர் மூலமாக நான் எம்.எஸ்.ஸைச் சந்தித்தேன், பிறகு நாங்கள் ஒன்றாகச் சுற்றித் திரிந்தோம். ஆனால் அந்தச் சந்திப்பு மிகவும் சுருக்கமாக இருந்தது. 2006ஆம் ஆண்டு மேற்கிந்தியத் தீவுகளுக்கு எதிரான ஒருநாள் போட்டியில் நான் இந்திய அணியில் அறிமுகமானேன். நான் இந்திய அணியில் சேர்ந்தபோது, இந்தியாவிற்கு வெளியே எனது முதல் சுற்றுப்பயணம் மேற்கிந்திய தீவுகள் தான். எம்.எஸ்யுடன் அந்த தொடரின் போது நல்ல நண்பரானேன்" என்று கூறினார்.
மேலும் படிக்க | மைதானத்துக்கு வந்த மனைவி - வெற்றியை பரிசளித்த குருணால் பாண்டியா
உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, டிவிட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR