15வது ஐபிஎல் லீக் போட்டியில் கே.எல்.ராகுல் தலைமையிலான லக்னோ சூப்பர் ஜெயண்ட் அணியும், ரிஷப் பன்ட் தலைமையிலான டெல்லி கேப்பிட்டல்ஸ் அணியும் மோதின. மும்பை டி.ஓய் பாட்டீல் மைதானத்தில் நடைபெற்ற இப்போட்டியில் டாஸ் வென்ற லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணி, பவுலிங்கை தேர்ந்தெடுத்தது. கட்டுக்கோப்பாக பந்துவீசிய லக்னோ அணி, 149 ரன்களுக்குள் டெல்லியை கட்டுப்படுத்தியது.
மேலும் படிக்க | ’இந்த வீரரை இந்திய கேப்டனாக்குங்கள்’ சோயிப் அக்தர் சொல்லும் அந்த வீரர் யார்?
3 விக்கெட்டுகளை மட்டுமே இழந்திருந்த டெல்லி அணி, கடைசி கட்டத்தில் அதிரடியாக விளையாடாததால் 150 ரன்கள் கூட எடுக்கவில்லை. இது லக்னோ அணிக்கு மிகப்பெரிய சாதகமாக அமைந்தது. இலக்கை நோக்கி களமிறங்கிய லக்னோ அணியின் தொடக்க ஆட்டக்காரர்கள் முதலில் நிதானமாக ஆடினர். கே.எல்.ராகுல் 25 பந்துகளில் 24 ரன்கள் மட்டுமே எடுத்து அவுட்டாக, குயின்டன் டிகாக் அதிரடியாக விளையாடி 80 ரன்கள் குவித்தார்.
கடைசி கட்டத்தில் எவின் லீவிஸ் மற்றும் தீபக் ஹூடா ஆகியோர் அடுத்தடுத்து ஆட்டமிழந்ததால் ஆட்டத்தில் பரபரப்பு ஏற்பட்டது. குருணால் பாண்டியாவும், ஆயுஷ் பதோனியும் சிறப்பாக விளையாடி லக்னோவை வெற்றிப் பாதைக்கு அழைத்துச் சென்றனர். இப்போட்டியை குருணால் பாண்டியாவின் மனைவி பங்குரி சர்மா நேரடியாக கண்டுகளித்தார். பந்துவீச்சிலும் கட்டுக்கோப்பாக வீசிய குருணால் பாண்டியா, பேட்டிங்கிலும் ஜொலித்ததால், அவர் மிகுந்த மகிழ்ச்சியடைந்தார். போட்டியின்போது குருணால் பாண்டியாவை அவரது மனைவி உற்சாகப்படுத்துவதற்காக கைத்தட்டி ஆரவாரம் எழுப்பினார். இந்த புகைப்படங்கள் இணையவாசிகளின் கவனத்தை ஈர்த்துள்ளது.
மேலும் படிக்க | மும்பை அணி ஹாட்ரிக் தோல்வி: மோசமான ஆட்டத்துக்கு என்ன காரணம்?
உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, டிவிட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR