India vs England: கிரிக்கெட் வரலாற்றில் தொடர்ந்து 13 டி20 போட்டிகளில் வெற்றி பெற்ற முதல் கேப்டன் என்ற பெருமையை இந்திய கேப்டன் ரோகித் சர்மா பெற்றார்.  இங்கிலாந்துக்கு எதிரான மூன்று போட்டிகள் கொண்ட தொடரின் முதல் டி20 போட்டி சவுத்தாம்ப்டனில் நடைபெற்றது.  இந்த போட்டியில் இந்திய அணியை ரோஹித் வழிநடத்தினார்.  இந்த போட்டியில் இந்திய அணி 50 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றதை அடுத்து இந்த சாதனையை நிகழ்த்தினார். விராட் கோலியிடம் இருந்து கேப்டன் பொறுப்பை ஏற்ற பிறகு, ரோஹித் ஷர்மா நியூசிலாந்து, வெஸ்ட் இண்டீஸ், இலங்கை மற்றும் தற்போது இங்கிலாந்துக்கு எதிராக வெற்றிக்கு அழைத்துச் சென்றார்.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING


மேலும் படிக்க | ஹர்திக்கின் அதிரடியில் இங்கிலாந்தை துவம்சம் செய்த இந்திய அணி!


பர்மிங்காமில் இங்கிலாந்துக்கு எதிரான இந்தியாவின் ஐந்தாவது டெஸ்டில் கேப்டன் ரோஹித் சர்மா கோவிட்-19 தொற்றுக்கு ஆளானதால் போட்டியில் பங்கேற்கவில்லை.  அவருக்கு பதிலாக பும்ரா கேப்டனாக செயல்பட்டார்.  இங்கிலாந்து அணிக்கு எதிரான முதல் டி20 போட்டியில் இந்திய அணி அபாரமாக விளையாடி போட்டியை வென்றது.  ​​ஹர்திக் பாண்டியாவின் ஆல்ரவுண்ட் ஆட்டம் இந்திய அணியின் வெற்றியை சாத்தியப்படுத்தியது.  ரோகித் சர்மா, சூர்யகுமார் யாதவ், தீபக் ஹூடா ஆகியோர் முறையே 24, 39 மற்றும் 33 ரன்கள் எடுத்தனர்.



இங்கிலாந்து தரப்பில் மொயீன் அலி, கிறிஸ் ஜோர்டான் ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளையும், டாப்லி, டைமல் மில்ஸ், பார்கின்சன் ஆகியோர் தலா ஒரு விக்கெட்டையும் வீழ்த்தினர். பின்னர், அறிமுக வீரர் அர்ஷ்தீப் சிங் மற்றும் சுழற்பந்து வீச்சாளர் யுஸ்வேந்திர சாஹல் ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளையும், புவனேஷ்வர் குமார் மற்றும் ஹர்ஷல் படேல் தலா ஒரு விக்கெட்டையும் வீழ்த்தி இங்கிலாந்து 148 ரன்களுக்கு சுருட்டினர்.  மொயீன் அலி மற்றும் கிறிஸ் ஜோர்டன் ஆகியோர் முறையே 36 மற்றும் 26* ரன்கள் எடுத்தனர். பர்மிங்காமில் சனிக்கிழமை நடைபெறும் இரண்டாவது டி20 போட்டியில் இரு அணிகளும் மோதுகின்றன.


மேலும் படிக்க | டிராவிட் இருக்கும்போது நான் பயிற்சியாளர் ஆகியிருக்கக்கூடாது - ரவிசாஸ்திரி ஓபன்டாக்


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.


முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link - https://bit.ly/3hDyh4G


Apple Link - https://apple.co/3loQYeR