இப்படி ஒரு அவமானத்தை சந்தித்த ரோஹித் சர்மா!
மும்பை இந்த வருட பிளே ஆப் சுற்றில் இருந்து முதல் அணியாக வெளியேறியது.
ஐபிஎல் 2022ன் லீக் ஆட்டங்கள் இன்றுடன் நிறைவடைகிறது. பிளே ஆப்பிற்கு குஜராத், லக்னோ, ராஜஸ்தான் மற்றும் பெங்களூரு அணிகள் தகுதி பெற்றுள்ளன. நேற்று நடைபெற்ற மும்பைக்கு எதிரான போட்டியில் டெல்லி அணி தோல்வியை சந்தித்ததால் பிளே ஆப் போட்டியில் இருந்து வெளியேறியது. மும்பை அணி வெற்றி பெற்றதால் ஆர்சிபி 4வது அணியாக பிளே ஆப்பிற்கு தகுதி பெற்றுள்ளது. வரும் 25ம் தேதி எலிமினேட்டரில் லக்னோ அணியுடன் விளையாட உள்ளது.
மேலும் படிக்க | அடுத்த ஆண்டு விளையாடுவேனா? தோனியின் அசரவைக்கும் பதில்!
5 முறை சாம்பியன் பட்டம் வென்ற மும்பை அணி இந்த ஆண்டு மிகவும் மோசமான ஒரு அணியாக விளையாடியது. தொடர்ந்து 8 போட்டிகளில் தோல்வியுற்று முதல் அணியாக பிளே ஆப்பில் இருந்து வெளியேறியது. தனது முக்கியமான வீரர்களை ஏலத்தில் எடுக்க தவறியது தோல்விக்கு முக்கிய காரணமாக பார்க்கப்படுகிறது. இந்திய அணியின் அனைத்து வித கிரிக்கெட்டிற்கும் கேப்டனாக இருக்கும் ரோஹித் சர்மா இந்த ஆண்டு ஐபிஎல்-ல் கேப்டனாகவும், பேட்ஸ்மேனாகவும் சொதப்பி உள்ளார். ஐபிஎல் 2022-ல் 14 போட்டிகளில் மொத்தமாக 268 ரன்கள் மட்டுமே அடித்துள்ளார். அதிகபடச்சமாக 48 ரன்களுடன் 19.14 சராசரியாக கொண்டுள்ளார்.
2008ம் ஆண்டில் இருந்து நடைபெற்று வரும் ஐபிஎல்-ல் இந்த ஆண்டு மட்டும் தான் ரோஹித் சர்மா ஒரு அரைசதம் கூட அடிக்காமல் இருந்து உள்ளார். இது ரோஹித் சர்மாவிற்கு மிகப்பெரிய பின்னடைவாக பார்க்கப்படுகிறது. இந்த ஆண்டு டி20 உலக கோப்பை நடைபெற உள்ள நிலையில் இந்திய அணியின் கேப்டன் ரோஹித் சர்மாவின் மோசமான பார்ம் ரசிகர்களை அதிர்ச்சிக்குள்ளாக்கியது. இருப்பினும், வரும் போட்டிகளில் மீண்டும் பேட்டிங்கில் பழைய பார்மிற்கு திரும்புவார் என்று ரசிகர்கள் நம்பிக்கை தெரிவித்து உள்ளனர்.
மேலும் படிக்க | அந்தரத்தில் பறந்த பேட் - ஷாக்கான ஹர்த்திக் பாண்டியா மனைவி
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, டிவிட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியை பதிவிறக்குங்கள்!!
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR