அந்தரத்தில் பறந்த பேட் - ஷாக்கான ஹர்த்திக் பாண்டியா மனைவி

பெங்களூரு அணிக்கு எதிரான போட்டியில் பாண்டியாவின் பேட் அந்தரத்தில் பறக்க, மனைவி நடாஷா கொடுத்த ரியாக்ஷன் வைரலாகியுள்ளது.

Written by - S.Karthikeyan | Last Updated : May 20, 2022, 11:01 AM IST
  • கை நழுவிய ஹர்திக் பாண்டியா பேட்
  • கேலரியில் நின்று ஷாக்கான மனைவி
  • டிவிட்டரில் வைரலாகும் நடாஷா ரியாக்ஷன்
அந்தரத்தில் பறந்த பேட் - ஷாக்கான ஹர்த்திக் பாண்டியா மனைவி title=

ஐபிஎல் போட்டியில் பெங்களூரு மற்றும் குஜராத் டைட்டன்ஸ் அணிகள் மோதின. இப்போட்டியில் வெற்றி பெற்ற பெங்களுரு அணி பிளே ஆஃப் சுற்றுக்கான வாய்ப்பில் நீடிக்கிறது. மும்பை மற்றும் டெல்லி அணிகள் மோதும் போட்டியில் மும்பை அணி வெற்றி பெற்றால் பெங்களுரு அணி, பிளே ஆஃப் சுற்றுக்கு செல்லும். ஒருவேளை டெல்லி வெற்றி பெற்றால் பெங்களுரு அணியின் வாய்ப்பு கிட்டத்தட்ட காலியாகிவிடும். இந்நிலையில், நேற்றைய போட்டியின்போது ஹர்திக் பாண்டியா பேட்டை மிஸ் செய்தபோது, அவரின் மனைவி கொடுத்த ரியாக்ஷன் வீடியோ நெட்டிசன்களின் கவனத்தை ஈர்த்துள்ளது. 

மேலும் படிக்க | Virat Kholi: ஒத்த ஆட்டம் 2 அணிகளை காலி செய்த கோலி

பெங்களூரு அணிக்கு எதிராக குஜராத் அணி முதலில் களமிறங்கியபோது, கேப்டன் ஹர்திக் பாண்டியா சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினார். 47 பந்துகளில் 62 ரன்கள் விளாசி கடைசி வரை ஆட்டமிழக்காமல் களத்தில் இருந்தார். 10வது ஓவரில் ஹர்திக் பாண்டியா பேட்டிங் செய்து கொண்டிருந்தபோது, அவரது கையில் இருந்து பேட் நழுவி, வெகு தொலைவில் சென்று விழுந்தது. மேக்ஸ்வேல் வீசிய பந்தை பாண்டியா அடிக்க முயற்சி செய்தபோது, கை நழுவிய பேட் ஸ்கொயர் லெக்கில் நின்று கொண்டிருந்த அம்பயருக்கு அருகாமையில் சென்று விழுந்தது. 

இதனை மைதானத்தில் கேலரியில் நின்று கொண்டு வேடிக்கை பார்த்த பாண்டியாவின் மனைவி நடாஷா ஸ்டான்கோவிச் ஷாக்கானார். உடனே என்ன ஆச்சு? என சைகை மூலம் தன்னுடைய வியப்பை வெளிப்படுத்தினார்.அந்த ரியாக்ஷன் வீடியோ தான் இன்றைய ஹைலைட் வைரல் வீடியோவாக உலா வருகிறது. 

இப்போட்டியில் விராட் கோலியின் அதிரடியில் பெங்களுரு அணி வெற்றி பெற்றது. வெற்றி பேற்றால் மட்டுமே பிளே ஆஃப் வாய்ப்பில் நீடிக்க முடியும் என்ற இக்கட்டான சூழலில் களமிறங்கிய பெங்களூரு அணிக்கு நங்கூரமாக நின்று வெற்றியை தேடித் தந்துள்ளார் கோலி. சீசன் முழுவதும் ஃபாரம் அவுட்டில் சிக்கித் தவித்த அவருக்கு, குஜராத் அணிக்கு எதிரான கடைசி போட்டி நம்பிக்கை அளிக்கும் விதமாக அமைந்தது. அவர் மீண்டும் ஃபார்முக்கு திரும்பியது உண்மையிலேயே கிரிக்கெட் ரசிகர்களுக்கும் மகிழ்ச்சியை கொடுத்துள்ளது. 

மேலும் படிக்க | மீண்டும் சொதப்பிய அம்பயர்! கடுப்பாகி பேட்டை உடைத்த மேத்யூ வேட்!

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link - https://bit.ly/3hDyh4G

Apple Link - https://apple.co/3loQYeR

Trending News