பொல்லார்டு ஓய்வு


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

ஐபிஎல் தொடரில் 13 ஆண்டுகளாக மும்பை இந்தியன்ஸ் அணிக்காக விளையாடிய பொல்லார்டு, திடீரென ஐபிஎல் போட்டிகளில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளார். 35 வயதான அவர் மும்பை இந்தியன்ஸ் அணிக்காக தொடக்கம் முதல் விளையாடி வரும் நிலையில், அடுத்த ஐபிஎல் போட்டிக்கு மும்பை அணி அவரை ரீட்டெயின் செய்யவில்லை. 


இதனால் மனமுடைந்த பொல்லார்டு, மும்பை அணிக்கு விளையாடிய நான், அந்த அணிக்கு எதிராக விளையாட விரும்பவில்லை, எப்போதும் மும்பை இந்தியன்ஸூக்காகவே இருக்க விரும்புகிறேன் எனக் கூறி ஐபிஎல் ஓய்வை அறிவித்தார். அவரின் இந்த முடிவுக்கு சக வீரர்கள் அதிர்ச்சியையும், வாழ்த்துகளையும் தெரிவித்தனர். மும்பை இந்தியன்ஸ் அணியும் பொல்லார்டின் பங்களிப்பை கவுரவிக்கும் விதமாக, தங்கள் அணியின் பேட்டிங் பயிற்சியாளராக உடனடியாக நியமித்துள்ளது.


மேலும் படிக்க | நான் என்னடா பண்ணேன்? அருகில் இருந்தவரது மண்டையை உடைத்த ரெய்னா, கோலி!


மும்பைக்கு பாதிப்பா?


ஆல்ரவுண்டராக இருந்த பொல்லார்டு ஐபிஎல் போட்டிகளில் இருந்து ஓய்வு பெற்றிருக்கும் நிலையில், மும்பை இந்தியன்ஸ் அணிக்கு அவர் இல்லாதது பெரும் இழப்பாக பார்க்கப்படுகிறது. அதேநேரத்தில் அவருடைய இடத்தை நிரப்ப டிம் டேவிட், டெவால்ட் ப்ரீவிஸ் ஆகியோர் இருக்கின்றனர். அவர்களை மனதில் வைத்தே மும்பை அணி பொல்லார்டு இந்த முறை அணியில் இருந்து கழற்றிவிட்டது. 


ஹனுமா விஹாரியின் கணிப்பு


இது குறித்து கருத்து தெரிவித்துள்ள ஹனுமா விஹாரி, மும்பை இந்தியன்ஸ் அணியில் பொல்லார்டு இல்லாதது மிகப்பெரிய இழப்பு என கூறியுள்ளார். அவரது இடத்தை அணியில் நிரப்புவது கடினம் என்றாலும், அந்த வாய்ப்பு டிம் டேவிட்டுக்கு இருப்பதாக தெரிவித்துள்ளார். டிம் டேவிட்டுக்கு போதுமான வாய்ப்பு கொடுத்தால் பொல்லார்டு செய்த பணியை நிச்சயம் செய்வார் என தெரிவித்துள்ளார். 


மேலும் படிக்க | தோனி போட்ட மாஸ்டர் பிளானால் சிஎஸ்கேவில் மீண்டும் ஜடேஜா!


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.


முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ