ஐபிஎல் போட்டியின் இன்றைய ஆட்டத்தில் சிஎஸ்கே அணி பெங்களூரு அணியுடன் பலப்பரீட்சை நடத்த உள்ளது. இன்றைய போட்டியில் வெற்றி பெற்று தொடர் தோல்வியில் இருந்து சிஎஸ்கே மீள தீவிரம் காட்டும் என்பதால் விறுவிறுப்புக்கு பஞ்சமிருக்காது.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

ஐபிஎல் சீசன் 15 கடந்த மார்ச் 26-ம் தேதி தொடங்கியது. முதல் போட்டியில் கொல்கத்தாவிடம் தோல்வியை சந்தித்தது சிஎஸ்கே. முதல்முறையாக புதிய கேப்டன் ஜடேஜா தலைமையில் சிஎஸ்கே களம் கண்டு வருகிறது. இதுவரை 4 போட்டிகளில் விளையாடி அனைத்திலும் தோல்வியை சந்தித்துள்ளது. சென்னையும், மும்பையும் இதுவரை இந்த சீசனில் ஒரு போட்டியிலும் வெற்றி பெறவில்லை. 



மேலும் படிக்க | மீண்டும் கேப்டனாக களமிறங்கும் தோனி? சிஎஸ்கே அணிக்குள் வெடிக்கும் சர்ச்சை!


புள்ளிப்பட்டியலில் கடைசி இடத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் உள்ளதால், வெற்றி பெற வேண்டிய கட்டாயத்தில் உள்ளனர். பெங்களூரு அணியோ இதுவரை ஆடிய 4 போட்டிகளில் மூன்றில் வெற்றி பெற்று புள்ளிப்பட்டியலில் மூன்றாவது இடத்தில் உள்ளது. முதல் இடத்தில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணியும், இரண்டாவது இடத்தில் கொல்கத்தா அணியும் உள்ளது.



இந்நிலையில் இன்றைய போட்டியில் பெங்களூரு அணியின் முன்னாள் கேப்டன் விராட் கோலி, 53 ரன்களை அடித்தால் சென்னை அணிக்கு எதிராக 1000 ரன்களை கடந்த இரண்டாவது வீரர் என்ற பெருமையை பெறுவார். இதற்கு முன்பு ரோஹித் சர்மா சென்னைக்கு எதிரான விளையாடி 1000 ரன்களை கடந்துள்ளார். சென்னை அணியுடன் இதுவரை விளையாடிய 27 போட்டிகளில் 948 ரன்கள் அடித்துள்ள விராட் கோலி இன்றைய போட்டியில் 53 ரன்கள் அடித்தால் ஐபிஎல்லில் ஒரு அணிக்கு எதிராக விளையாடி 1000 ரன்களை கடந்த வீரர் என்ற சாதனையை படைப்பார். 



மேலும் படிக்க | CSKவுக்கு ஜடேஜாவைக் கேப்டனாக்குனதுதான் தப்பாம்!- சொன்னது யார் தெரியுமா!?


அதேபோல டேவிட் வார்னர் ஒரு அணிக்கு எதிராக அதிக ரன்களை குவித்த மூன்றாவது வீரராக உள்ளார். அவர் கொல்கத்தா அணியுடன் விளையாடி இதுவரை 976 ரன்கள் குவித்துள்ளார். ரோஹித் சர்மா கொல்கத்தா அணிக்கு எதிராக விளையாடி இதுவரை 1018 ரன்கள் குவித்துள்ளார். 


விராட் கோலி தான் ஐபிஎல்லில் 6000 ரன்களை கடந்த ஒரே வீரர். இதுவரை 211 ஐபிஎல் போட்டிகளில் விளையாடியுள்ள இவர் 6389 ரன்களை குவித்துள்ளார். ரோஹித் சர்மா மற்றும் ஷிகர் தவான் விராட்டின் ரன்களை நெருங்கி வருகின்றனர். ஐபிஎல் 2022வில் இதுவரை விளையாடிய 4 போட்டிகளில் விராட் கோலி 106 ரன்களை அடித்துள்ளார். இன்றைய போட்டியில் 53 ரன்களை அடித்து சிஎஸ்கேவுக்கு எதிராக 1000 ரன்களை கடந்த இரண்டாவது வீரர் என்ற சாதனையை படைப்பாரா விராட்? இன்றைய போட்டியில் தெரிந்துவிடும். 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துக்களைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.


முகநூலில் @ZEETamilNews, டிவிட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!


Android Link - https://bit.ly/3hDyh4G


Apple Link - https://apple.co/3loQYeR