Virat Kohli Breaks Sachin Tendulkar: விராட் கோலி புதன்கிழமை தனது பெயரில் ஒரு பெரிய சாதனையை படைத்தார். ஒரு நாள் சர்வதேச கிரிக்கெட்டில் வெளிநாட்டு அணிகளின் மண்ணில் அதிக ரன் குவித்த இந்திய வீரர் என்ற சாதனையை கோலி படைத்துள்ளார். தென்னாப்பிரிக்காவுக்கு எதிராக பார்ல் மைதானத்தில் புதன்கிழமை கோலி 51 ரன்கள் எடுத்தார். இந்த இன்னிங்ஸின் போது, ​​கோலி சச்சின் டெண்டுல்கரின் சாதனையை முடியடித்தார்.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

வெளிநாட்டு அணிகளின் சொந்த மண்ணில் ஒருநாள் போட்டிகளில் அதிக ரன் குவித்த இந்திய வீரர் என்ற பெருமையை கோலி பெற்றுள்ளார். கோலிக்கு (Virat Kohli) முன், இந்த சாதனை 146 இன்னிங்சில் 5065 ரன்கள் எடுத்த சச்சின் (Sachin Tendulkar) பெயரில் இருந்தது. இந்தப் (IND vs SA) போட்டிக்கு முன்பு கோலி 103 இன்னிங்ஸ்களில் 5057 ரன்கள் எடுத்திருந்தார். பார்லில் தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இன்னிங்ஸில் 9வது ரன் எடுத்த உடனேயே சச்சினின் சாதனையை முறியடித்தார்.


ALSO READ | இந்திய அணியில் இடம்பிடித்த இளம் வீரர்..! எதிர்பார்ப்பை பூர்த்தி செய்வாரா?


மகேந்திர சிங் தோனி, 124 இன்னிங்ஸ்களில் 4520 ரன்கள் குவித்துள்ள வெளிநாட்டு அணிகளால், உள்நாட்டில் இந்தியாவுக்காக அதிக ஒருநாள் போட்டிகளில் ரன் குவித்த மூன்றாவது வீரர் ஆவார்.


கோலி தற்போது 104 இன்னிங்ஸ்களில் 5108 ரன்கள் எடுத்துள்ளார். இதில் நடுநிலையான மைதானங்களில் நடைபெறும் போட்டிகள் அடங்காது என்பது இங்கு குறிப்பிடத்தக்கது.


இந்தியா மற்றும் தென்னாப்பிரிக்கா இடையேயான ஒருநாள் கிரிக்கெட்டில் அதிக ரன்கள் குவித்த சாதனையும் சச்சினின் பெயர்தான் உள்ளது. இரு நாடுகளுக்கு இடையேயான ஒருநாள் போட்டிகளில் சச்சின் 2001 ரன்கள் எடுத்துள்ளார். விராட் தற்போது இரண்டாவது இடத்திற்கு வந்துள்ளார். தற்போது அவர் 1338 ரன்கள் எடுத்துள்ளார். கோலி தனது இன்னிங்ஸில் முன்னாள் கேப்டன்களான சவுரவ் கங்குலி மற்றும் ராகுல் டிராவிட் ஆகியோரை பின்னுக்குத் தள்ளியுள்ளார். கங்குலி 1313 ரன்களும், டிராவிட் 1309 ரன்களும் எடுத்துள்ளனர்.


ALSO READ | 2022-ல் கிரிக்கெட்டில் ஆதிக்கம் செலுத்தும் கத்துக்குட்டி அணிகள்..!


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.


முகநூலில் @ZEETamilNews மற்றும் டிவிட்டரில் @ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!


Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR