புள்ளி பட்டியலில் ஒன்பதாம் இடத்தில் சிஎஸ்கே வீழுமா இல்லை மீளுமா
புள்ளி பட்டியலில் ஒன்பதாம் இடத்தில் உள்ள சிஎஸ்கேவுக்கு தொடரும் சிக்கல்கள்
MI vs CSK IPL 2022: சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு இந்த ஆண்டு பின்னடைவு தொடர்கிறது. அணியின் நம்பிக்கை நட்சத்திரமான டெவோன் கான்வே திருமணம் செய்து கொள்வதற்காக அணியிலிருந்து விடைபெறுகிறர்.
சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் தொடக்க ஆட்டக்காரர் டெவோன் கான்வே, மும்பை இந்தியன்ஸுக்கு எதிரான ஐபிஎல் 2022 போட்டிக்கு முன்னதாக தென்னாப்பிரிக்காவுக்குச் சென்றுவிட்டார்.
திங்கள்கிழமை (2022, ஏப்ரல் 25) பஞ்சாப் கிங்ஸுக்கு எதிரான அடுத்த போட்டிக்கு முன்னதாக சிஎஸ்கே அணியில் மீண்டும் இணைவார்.
சக வீரரின் திருமணத்தை சென்னை அணி கோலாகலமாக கொண்டாடியது. ஐபிஎல் போட்டிகளுக்கு நடுவே டெவோன் கான்வாய் ப்ரீ வெட்டிங் திருமண நிகழ்ச்சி நடைபெற்றது. விமரிசையாக ஏற்பாடு செய்யப்பட்டிருந்த இந்த நிகழ்ச்சியில் சென்னை வீரர்கள் உற்சாகமாக கலந்து கொண்டனர்.
வியாழக்கிழமை (2022 ஏப்ரல் 21) மும்பை இந்தியன்ஸுக்கு எதிரான ஐபிஎல்லின் ‘எல் கிளாசிகோ’ (‘El Clasico’) மோதலுக்கு முன்னதாக நியூசிலாந்து தொடக்க ஆட்டக்காரர் டெவோன் கான்வே, இப்போது திருமணம் செய்து கொள்ள டி20 லீக்கில் இருந்து விடுமுறை எடுத்திருப்பது சிஎஸ்கேவுக்கு மற்றுமொரு பின்னடைவாக பார்க்கப்படுகிறது.
ஐபிஎல் 2021இல் வெற்றி வாகை சூடி, நடப்பு சாம்பியனாக இருக்கும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி (Chennai Super Kings), ஐபிஎல் 2022 புள்ளிகள் பட்டியலில் தற்போது 9வது இடத்தில் உள்ளது.
கொல்கத்தா நைட் ரைடர்ஸுக்கு எதிரான ஐபிஎல் 2022 இன் தொடக்க ஆட்டத்தில் சிஎஸ்கேக்காக கான்வே ஐபிஎல் போட்டிகளில் அறிமுகமானார். முதல் போட்டியில் 3 ரன்களில் ஆட்டமிழந்தார், அதன்பிறகு ஐபிஎல் 2022 இல் அவர் இடம்பெறவில்லை. ரவீந்திர ஜடேஜா அணியில் ருதுராஜ் கெய்க்வாட் மற்றும் ராபின் உத்தப்பா ஆகியோர் தொடக்க ஆட்டக்காரர்களாக களமிறங்கினர்.
மேலும் படிக்க | Viral Video: ‘முட்டை இட’ கடற்கரைக்கு படையெடுக்கும் லட்சக்கணக்கான கடல் ஆமைகள்
சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் தொடக்க ஆட்டக்காரர் ருதுராஜ் கெய்க்வாட் ஃபார்முக்கு திரும்பியிருப்பது அணிக்கு நல்லதாக பார்க்கப்படுகிறது. கெய்க்வாட் கடந்த ஆண்டு CSK இன் வெற்றிக்கு அதிக ரன்களை எடுத்து சிறப்பாக பங்காற்றினார்.
மொத்தம் 16 போட்டிகளில் விளையாடி 635 ரன்கள் எடுத்த ருதுராஜ்,. 2021 ஆம் ஆண்டில் ஆரஞ்சு தொப்பியை பெற்றார். ஆனால் இந்த ஆண்டு, 25 வயதான சிஎஸ்கே கேப்டன் ரவீந்திர ஜடேஜாவுடன் ஃபார்மிற்காக போராடிக்கொண்டிருக்கிறார்.
2022, ஏப்ரல் 17 அன்று MCA ஸ்டேடியத்தில் நடந்த முந்தைய ஆட்டத்தில் குஜராத் டைட்டன்ஸ் அணிக்கு எதிராக, கெய்க்வாட் 48 பந்துகளில் 73 ரன்களை எடுத்தார். விறுவிறுப்பான போட்டியில் CSK ஆட்டத்தின் இறுதி பந்தில் தோல்வியடைந்தது.
உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, டிவிட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR