ஷிவம் துபே செய்த காரியம்! கடுப்பாகி தொப்பியை வீசிய ஜடேஜா!

குஜராத் அணிக்கு எதிரான போட்டியில் மைதானத்தில் ஜடேஜா கோபமடைந்து தொப்பியை தூக்கி வீச முயன்றார்.  

Written by - RK Spark | Last Updated : Apr 18, 2022, 05:46 PM IST
  • குஜராத்-க்கு எதிராக சென்னை அணி தோல்வி அடைந்தது.
  • மோசமான பவுலிங் காரணமாக சென்னை தோல்வியை சந்தித்தது.
  • டேவிட் மில்லர் சிறப்பாக பேட்டிங் செய்தார்.
ஷிவம் துபே செய்த காரியம்! கடுப்பாகி தொப்பியை வீசிய ஜடேஜா! title=

சென்னை மற்றும் குஜராத் அணிகள் நேற்றைய ஐபிஎல் போட்டியில் விளையாடினர்.  இந்த போட்டியில் குஜராத் அணி 3 விக்கெட் வித்தியாசத்தில் சென்னையை வீழ்த்தி வெற்றி பெற்றது.  பரபரப்பாக நடைபெற்ற இந்த ஆட்டத்தில் சென்னை அணியின் பக்கமிருந்த வெற்றிக் கடைசி சில ஓவரில் மோசமான பவுலிங் காரணமாக குஜராத் அணி வெற்றி பெற்றது.  169 ரன்கள் அடித்து பவுலிங்கில் சொதப்பி இந்த போட்டியையும் தோல்வியுற்றது சென்னை.

மேலும் படிக்க | இதை செய்தால் மும்பை சென்னை அணிகள் பிளேஆப்பிற்கு தகுதி பெறலாம்!

ஓவருக்கு கிட்டத்தட்ட 12 ரன்கள் தேவைப்பட்ட நிலையில் 17வது ஓவரை பிராவோ வீசினார். குஜராத் அணியின் பேட்ஸ்மேன்கள் அனைவரும் விக்கெட்டை பறிகொடுத்து வெளியேற, டேவிட் மில்லர் மட்டும் சிறப்பாக விளையாடிக் கொண்டிருந்தார்.  அந்த ஓவரில் டேவிட் மில்லர் அடித்த பந்து ஷிவம் துபேவிடம் சென்றது. ஆனால் ஷிவம் துபே அதனை பிடிக்காமல் பந்து வரும்வரை காத்திருந்தார்.  இதனால் பிராவோவும், கேப்டன் ஜடேஜாவும் கோபம் அடைந்தனர்.  துபே மீது கோபமடைந்த ஜடேஜா தலையில் இருந்து தொப்பியை கழட்டி தூக்கி வீச முயன்றார்.  இது போட்டியில் சிறிது நேரம் சலசலப்பை ஏற்படுத்தியது.

 

இதற்கு முன்பு சென்னை ஜெயிக்க வேண்டிய ஒரு போட்டியில் ஷிவம் துபேவின் ஒரு ஓவர் சென்னை அணியை தோல்வி பெற செய்தது.  அடுத்தடுத்த போட்டிகளில் ஷிவம் துபே சிறப்பாக பேட்டிங் செய்து இருந்தாலும், நேற்றைய போட்டியில் அவரது ஃபீல்டிங் அனைவரையும் கோபமடையச் செய்தது.  சிறப்பாக விளையாடிய டேவிட் மில்லர் கடைசி வரை ஆட்டமிழக்காமல் 94 ரன்கள் அடித்திருந்தார்.  மேலும் ஜோர்டானின் மோசமான பவுலிங்கில் சென்னை அணியின் தோல்விக்கு முக்கிய காரணமாக இருந்தது.  ஐபிஎல் 2022-ல் 6 போட்டிகளில் விளையாடியுள்ள சென்னை அணி அதில் 5-ல் தோல்வியை தழுவி உள்ளது.

மேலும் படிக்க | மீண்டும் பவுலிங்கில் சொதப்பல்! சிஎஸ்கே-விற்கு எமனாக வந்த ரஷித் கான், மில்லர்!

உடனுக்குடன் செய்திகளை தெரிந்துகொள்ளவும், உங்கள் கருத்துகளை பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைதளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

ஃபேஸ்புக்கில் @ZEETamilNews, டிவிட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!

Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR

Trending News