2023 ODI உலகக் கோப்பை போட்டிகளில் கலந்து கொள்ள வாய்ப்பிருக்கும் 5 இளம் வீரர்கள்
Ravi Shastri On 2023 ODI Players: 2023 ICC ODI உலகக் கோப்பை இந்திய வீரர்களில் யாரெல்லாம் கலந்துக் கொள்ளலாம் என்று இந்திய முன்னாள் தலைமைப் பயிற்சியாளர் ரவி சாஸ்திரி ஊகத்தை வெளியிட்டுள்ளார்
IPL 2023: அக்டோபர்-நவம்பரில் இந்தியாவில் நடைபெறவுள்ள ICC ODI உலகக் கோப்பை 2023இல் யாரெல்லாம் கலந்துக் கொள்ளலாம் என்று இந்திய முன்னாள் தலைமைப் பயிற்சியாளர் ரவி சாஸ்திரி ஊகத்தை வெளியிட்டுள்ளார். தற்போதைய ஐபிஎல் சீசனில் தன்னை மிகவும் கவர்ந்த இளம் கிரிக்கெட் வீரர்களின் பெயர்களை குறிப்பிட்ட்டார்.
சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (International Cricket Council) நிகழ்ச்சி ஒன்றில் பேசிய அவர், ஐசிசி ஒரு நாள் கிரிக்கெட் போட்டிகளின் உலகக்கோப்பை அணியில் இல்லாவிட்டாலும், அதில் விளையாட தகுதி பெற்ற ஐந்து வீரர்களின் பெயரை பரிந்துரைத்தார்.
சாய் சுதர்சன்
சாஸ்திரியை கவனிக்க வைத்த வீரர் சாய் சுதர்சன். இந்த ஐபிஎல் சீசனில் அவரைப் பற்றி பெருமையாகப் பேசும் அளவுக்குப் பெரிய சாதனை செய்யாமல் இருக்கலாம் ஆனால் உண்மை என்னவென்றால் சுதர்சன் தாக்கத்தை ஏற்படுத்தும் வீரராக இருக்கிறார். விரைவில் இந்தியாவுக்காக சாஸ்திரி விளையாடலாம் என்று சாஸ்திரி நினைக்கிறார். அவர் இதுவரை ஐபிஎல் 2023 இல் இரண்டு அரைசதங்களுடன் 44.60 சராசரியுடன் 6 போட்டிகளில் 223 ரன்கள் எடுத்துள்ளார்.
மேலும் படிக்க | IPL Records: ஐபிஎல் வரலாற்றில் 5 விக்கெட்டுகளை வீழ்த்திய பெளலர்கள்
ரிங்கு சிங்
ரிங்கு சிங் ஐபிஎல் 2023 இன் மற்றொரு சிறந்த வீரர், அவர் சாஸ்திரியைக் கவர்ந்தார். "நான் அவரைப் பார்க்கும்போது, அவர் ஒரு அற்புதமான குணத்தைப் பெற்றிருக்கிறார். அவர் மிகவும் நன்றாக விளையாடக்கூடியவர்" என்று சாஸ்திரி கூறினார். KKRக்காக இதுவரை 13 ஆட்டங்களில் 400 ரன்களுக்கு மேல் எடுத்துள்ள ரிங்கு, பிசிசிஐ தேர்வாளர்களின் கவனத்தை பிடிக்கும் அளவுக்கு பல போட்டிகளில் அபாரமாக விளையாடியுள்ளார்.
யஷஸ்வி ஜெய்ஸ்வால்
இந்த ஐபிஎல்லில் யஷஸ்வி ஜெய்ஸ்வால் சிறந்த ஃபார்மில் உள்ளார். ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்காக இதுவரை 13 போட்டிகளில், ஜெய்ஸ்வால் 47.92 சராசரி மற்றும் 166.18 ஸ்ட்ரைக் ரேட்டில் 575 ரன்கள் எடுத்துள்ளார். அவர் மீது நல்ல நம்பிக்கை உள்ளது. அவர் ஐபிஎல் 2023 இல் கொல்கத்தா நைட் ரைட்ஸ்க்கு எதிரான ஆட்டத்தில் வெறும் 2 ரன்களில் தனது இரண்டாவது சதத்தை தவறவிட்டார்.
ஜிதேஷ் சர்மா
பஞ்சாப் கிங்ஸ் விக்கெட் கீப்பரும் பேட்டருமான ஜிதேஷ் சர்மாவும் சாஸ்திரியை மிகவும் கவர்ந்துள்ளார். 22.08 சராசரியில் 265 ரன்கள் மற்றும் 155 க்கு மேல் ஸ்ட்ரைக் ரேட், ஜிதேஷ் மிகவும் சிறப்பாக விளையாடுகிறார்.
திலக் வர்மா
மும்பை இந்தியன்ஸ் அணிக்காக கடந்த ஆண்டு நடைபெற்ற சீசனில் அதிக ரன் குவித்தவர் திலக் வர்மா. இந்த ஆண்டு, காயத்தால் சிரமப்பட்ட திலக் வர்மா, ஒன்பது போட்டிகளில் 45.66 சராசரியுடன் ஒரு அரைசதத்துடன் 274 ரன்கள் எடுத்தார். உலகக் கோப்பை அணியில் இடம்பிடிக்கக் கூடிய சில தகுதியான வீரர்களில் அவரும் ஒருவன் என்று சாஸ்திரி கூறினார்.
ருதுராஜ் கெய்க்வாட்
ருதுராஜ் கெய்க்வாட் நன்றாக விளையாடக்கூடிய சிறந்த வீரர் என்றும், இந்திய அணியில் நீண்ட காலம் விளையாடத் தகுதியானவர் என்றும் ரவி சாஸ்திரி கூறினார்.
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ