வீட்டின் பூட்டை உடைத்து நகை - வெள்ளி பொருட்கள் திருட்டு
ராமநாதபுரத்தில் நள்ளிரவு 4 மர்ம நபர்கள் ஆளில்லாத 2 வீடுகளில் புகுந்து கடப்பாரை கொண்டு வீட்டின் கதவை உடைத்து நகை பணத்தை கொள்ளையடித்துள்ளனர்.
ராமநாதபுரம் அருகே உள்ள மாட கோட்டான் ஊராட்சிக்குட்பட்ட மேலக்கோட்டை கிராமத்தில் சுமார் 100 க்கும் மேற்பட்ட வீடுகள் உள்ளது. இங்கு நேற்று நள்ளிரவு 4 மர்ம நபர்கள் ஆளில்லாத 2 வீடுகளில் புகுந்துள்ளனர். அந்த நபர்கள் கடப்பாரை கொண்டு வீட்டின் கதவை உடைத்து நகை பணத்தை கொள்ளையடித்து சென்றுள்ளனர்.
மேலக்கோட்டை கிராமத்தைச் சேர்ந்தவர் சீனி முகம்மது இவர் மலேசியாவில் இருக்கிறார். இவரது வீட்டில் உள்ளவர்கள் மதுரையில் (Madurai) உள்ள உறவினர் வீட்டுக்குச் சென்ற நிலையில் பூட்டியிருந்த இவரது வீட்டை உடைத்து பீரோவில் இருந்த நகை பணத்தை கொள்ளையடித்து (Robbery) சென்றனர். அதேபோல் அதே பகுதியை சேர்ந்த அகமது அலி இவரது குடும்பமும் மலேசியாவில் வசித்து வருவதாக கூறப்படுகிறது.
ALSO READ | ஐந்து வயது பெண்குழந்தையை பாலியல் வன்கொடுமை செய்த 10 வயது சிறுவர்கள்
இந்த நிலையில் இவரது வீட்டையும் உடைத்து வீட்டு அறையில் இருந்த பீரோவை உடைத்து உள்ளே இருந்த 40 பவுன் நகை மற்றும் 50 ஆயிரம் ரொக்கம் கொள்ளை போயிருக்கிறது மேலும் சீனி முகம்மது வீட்டில் 15 ஆயிரம் பணம் மற்றும் மதினாவில் இருந்து எடுத்து வரப்பட்ட தங்க காசுகள் அனைத்தும் கொள்ளை போயிள்ளது.
இந்த சம்பவம் குறித்து இன்று காலை வீட்டின் கேட்டு உடைக்கப்பட்டு இருப்பதை அறிந்த ஊர் மக்கள் கேணிக்கரை காவல் நிலையத்திற்கு தகவல் அளித்துள்ளனர். அதன் அடிப்படையில் வழக்குப்பதிவு செய்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த துணை காவல் (TN Police) கண்காணிப்பாளர் மற்றும் கைரேகை நிபுணர்கள் தடயங்களை சேகரித்து மர்ம ஆசாமிகள் குறித்து விசாரித்து வருகின்றனர்.
அத்துடன் அருகிலுள்ள கண்காணிப்பு கேமராக்களை பார்த்தபோது 4 மர்ம நபர்கள் தெருவில் அங்கும் இங்குமாக ஓடியது கண்டறியப்பட்டுள்ளது. இந்த சிசிடிவி காட்சிகளை வைத்து வழக்குப்பதிவு செய்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். அடுத்தடுத்து இரண்டு வீடுகளில் திருடு போன சம்பவம் அந்த பகுதி பொதுமக்களிடையே பெரும் பரபரப்பையும் அச்சத்தையும் ஏற்படுத்தி இருக்கிறது.
ALSO READ | பெண்களை குறிவைத்து மோசடி செய்த ’கில்லாடி’ கொள்ளையன் கைது..!
உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.
முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR