திருட்டு, வழிப்பறி குற்றங்களை கண்காணிக்க சென்னை போலிசின் ஒருங்கிணைந்த தனிப்படை

சென்னை குற்ற வழக்குகளில் கைப்பற்றப்பட்ட சுமார்  ரூ.5 கோடியே 56 லட்சம் மதிப்புள்ள நகைகள், செல்போன்கள் மற்றும் வாகனங்கள் கண்டுபிடிக்கப்பட்டு உரிமையாளர்களிடம் ஒப்படைக்கப்பட்டது.

Written by - JAFFER MOHAIDEEN | Edited by - Sripriya Sambathkumar | Last Updated : Dec 29, 2021, 07:28 PM IST
திருட்டு, வழிப்பறி குற்றங்களை கண்காணிக்க சென்னை போலிசின் ஒருங்கிணைந்த தனிப்படை title=

சென்னை பெருநகர காவல் எல்லைக்குட்பட்ட காவல் நிலையங்களில் பதிவு செய்யப்பட்ட திருட்டு, வழிப்பறி, செல்போன் பறிப்பு, செல்போன் திருட்டு மற்றும் செல்போன் காணாமல்  போன வழக்குகளை விரைந்து விசாரித்து குற்றவாளிகளை கைது செய்து, செல்போன்களை மீட்க சென்னை பெருநகர காவல் ஆணையாளர் சங்கர் ஜிவால் உத்தரவின் பேரில் காவல் குழுவினர் ஒருங்கிணைந்த தனிப்படை அமைக்கப்பட்டது. 

மேற்படி காவல் குழுவினர் 12 காவல் மாவட்டங்களில் செயல்பட்டு வரும் சைபர் குற்றப்பிரிவு குழுவினருடன் இணைந்து, அவர்களது காவல் மாவட்டங்களில் உள்ள
 காணாமல் மற்றும் திருட்டு போன செல்போன்கள் தொடர்பான புகார்கள் மீது உரிய சட்டபூர்வமாகவும், இணையதள குற்ற தடயவியல் முறையிலும் விசாரணை மேற்கொண்டும், அவர்களிடமிருந்தும் செல்போன்கள் பறிமுதல் செய்யப்பட்டு வருகின்றது. 

மேலும் திருட்டு வழக்குகளில் சம்பந்தப்பட்ட நபர்களிடமிருந்து தங்க  நகைகள் மற்றும் இருசக்கர வாகனங்கள் மற்றும் நான்கு சக்கர வாகனங்களும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. இவ்வாறு மேற்படி காவல் குழுவினர் சென்னை பெருநகர காவல், 4 காவல் மண்டலங்களிலும், திருட்டு, கொள்ளை, செல்போன் திருட்டு மற்றும் செல்போன் காணாமல் போன வழக்குகளில் திறம்பட செயல்பட்டு, வடக்கு மண்டலத்தில் 272,78 கிராம் தங்க நகைகள், 262 செல்போன்கள், 7 இருசக்கர வாகனங்கள் மற்றும் 3 நான்கு சக்கர வாகனங்கள் மேற்கு மண்டலத்தில் 712.44 கிராம் தங்க நகைகள், 297 செல்போன்கள், 46 இருசக்கர வாகனங்கள், 9 ஆட்டோக்கள், 15 நான்கு சக்கர வாகனங்கள், தெற்கு மண்டலத்தில் 1,115 கிராம் தங்க நகைகள், 654 செல்போன்கள், 45 இருசக்கர வாகனங்கள் மற்றும் 12 நான்கு சக்கர வாகனங்ள் மற்றும் கிழக்கு மண்டலத்தில் 320 கிராம் தங்க நகைகள், 250 செல்போன்கள் 85 இருசக்கர வாகனங்கள், 3 ஆட்டோக்கள், 16 நான்கு சக்கர வாகனங்கள் என மொத்தம் சுமார் ரூ.5 கோடியே 56 லட்சம் மதிப்புள்ள 2419.72 கிராம் தங்க நகைகள், 1,463 செல்போன்கள், 183 இருசக்கர வாகனங்கள், 12 ஆட்டோக்கள், மற்றும் 46 நான்கு சக்கர வாகனங்கள் கண்டுபிடிக்கப்பட்டு பறிமுதல் செய்யப்பட்டது.

இவற்றில் பெரும்பாலான, தங்கநகைகள், இரு சக்கர வாகனங்கள், செல்போன்கள் சென்னை மட்டுமல்லாது, தமிழகத்தில் உள்ள பிற மாவட்டங்கள் மற்றும் பல்வேறு மாநிலங்களில் இருந்து கைப்பற்றப்பட்டு கொண்டு வரப்பட்டன என்பது குறிப்பிடத்தக்கது.

ALSO READ | கடவுளை உணர்வது எப்படி? என ஆன்மீக பயிற்சி வழங்கி வருகிறேன் - அன்னபூரணி! 

சென்னை பெருநகர காவல் ஆணையாளர் சங்கர்ஜிவால் அவர்கள் இன்று சென்னை எழும்பூர், ராஜரத்தினம் மைதானத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் கலந்து கொண்டு மீட்கப்பட்ட 1,463 செல்போன்களை உரிமையாளர்களிடம் ஒப்படைக்கும் நிகழ்ச்சியின் அடையாளமாக 40 செல்போன்களை உரிமையாளர்களிடம் ஒப்படைத்தார்.

மேலும் சென்னை பெருநகரில் தொடர்ந்து திருட்டு, கொள்ளை, கூட்டுக்கொள்ளை, வழிப்பறி மற்றும் கொடுங்குற்றச் செயல்களில் ஈடுபடும் தலைமறைவாக உள்ள குற்றவாளிகளை கண்டுபிடித்து கைது செய்யவும், திருட்டு குற்றச்செயல்கள் நடவாமல் தடுக்கவும் கடந்த சில தினங்களுக்கு முன்பு காவல் ஆணையாளரின் உத்தரவின் பேரில் "Drive Against Crime Offenders" (DACO) என்ற புதிய திட்டத்தினை செயல்படுத்தி திருட்டு, கொள்ளை, கூட்டுக்கொள்ளை, வழிப்பறி மற்றும் கொடுங்குற்றங்களில் ஈடுபட்ட சரித்திரப்பதிவேடு குற்றவாளிகளில் மொத்தம் 2,283 குற்றவாளிகள் தணிக்கை செய்யப்பட்டனர். 

இதில் சந்தேக நபர்கள் 1,689 பேரும், ஊரறிந்த குற்றவாளிகள் (KD) 491 நபர்களும், கைச்சுவடி குற்றவாளிகள் (Dossier Criminal) 17 நபர்களும், Modus Operand (MOB) குற்றவாளிகள் 37 நபர்களும் அடங்குவர். இந்த சிறப்பு சோதனையின் மூலம் தலைமறைவாகயிருந்த 141 குற்றவாளிகள் கண்டுபிடிக்கப்பட்டு, 52 குற்றவாளிகள் குற்ற வழக்குகளில் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டும், நீதிமன்றம் பிறப்பித்த பிடி ஆணையின்படி (NBW), சம்பந்தப்பட்ட நீதிமன்றத்தில் விசாரணைக்கு ஆஜராகமல் தலைமறைவாகயிருந்த 24 குற்றவாளிகள் கைது செய்தும், 418 குற்றவாளிகளிடம் நன்னடத்தை பிணை ஆவணம் பெற்றும் (Bind Over), 617 குற்றவாளிகளை பிடித்து, மீண்டும் குற்றச்செயல்களில் ஈடுபடக்கூடாது என எச்சரிக்கை (Warning) செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. 

மேலும் தொடர்ந்து குற்றச்செயல்களில் ஈடுபட்ட 168 குற்றவாளிகளுக்கு புதிதாக சரித்திரப்பதிவேடு தொடங்கப்பட்டு கண்காணித்துவரப்படுகிறது. இந்த சிறப்பு சோதனை சென்னை பெருநகரில் தொடர்ந்து நடத்தப்பட்டு திருட்டு, கொள்ளை, கூட்டுக்கொள்ளை, வழிப்பறி மற்றும் கொடுங் குற்றச்செயல்களில் ஈடுபடும் குற்றவாளிகள் தொடர்ந்து
கண்காணிக்கப்பட்டு, குற்றச்செயல்கள் நடைபெறாமல் தடுத்தும், மேலும் தொடர்ந்து குற்றச் செயல்களில் ஈடுபடும் நபர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என சென்னை பெருநகர காவல் ஆணையாளர் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

இந்நிகழ்ச்சியில் கூடுதல் காவல் ஆணையாளர்கள் டி.செந்தில்குமார், மருத்துவர் என்.கண்ணன், இணை ஆணையாளர்கள், துணை ஆணையாளர்கள் , காவல் அதிகாரிகள் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டனர்.

ALSO READ | ‘நான் தற்கொலை செய்துகொள்ளப் போகிறேன்' உதவி ஆய்வாளர் வெளியிட்ட ஆடியோவால் பரபரப்பு

உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!

Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR

Trending News