முதல்வர், கலைஞர், குடும்பத்தினரை அவதூறாக பேசிய எடப்பாடி பழனிச்சாமி வருத்தம் தெரிவித்து விட்டு பொது செயலாளர் பதவியை ராஜினாமா செய்தால், நானும் வருத்தம்  தெரிவித்து திமுகவில் துணை பொதுசெயலாளர் பதவியை ராஜினாமா செய்கின்றேன் என கோவையில் திமுக துணை பொதுச்செயலாளர் ஆ.ராசா தெரிவித்துள்ளார்.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

வரும் 11ஆம் தேதி அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் , பில்லூர் 3 வது  திட்டத்தை துவக்கி வைத்து நலத்திட்ட உதவிகள் வழங்குகிறார். இதனிடையே கோவை சரவணம்பட்டி பகுதியில் பில்லூர் கூட்டுக் குடிநீர் திட்ட துவக்க விழா நடைபெறும் இடத்தை அமைச்சர்  கே. என்.நேரு ஆய்வு செய்தார்.அவருடன் அமைச்சர் முத்துசாமி , நீலகிரி நாடாளுமன்ற உறுப்பினர் ஆ.ராசா ஆகியோர் பங்கேற்றனர் . 


மேலும் படிக்க | பழனி முருகன் கோவிலில் கெட்டுப்போன பிரசாதங்கள் விற்பனை! ஆய்வில் வெளியான அதிர்ச்சி!


இதனைத் தொடர்ந்து நீலகிரி எம்.பி. ஆ.ராசா  செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது பேசிய அவர், "தேசிய பேரிடர் நிவாரணத்திற்கும், மாநில பேரிடர் நிவாரணத்திற்கும் வித்தியாசம் தெரியாமல் பா.ஜ.கவினர் குழப்பிக்கொண்டு இருக்கின்றனர்.கவுண்டமணி வாழைப்பழ கதை மாதிரி பேசுகின்றனர்.எனக்கு என்ன தகுதி இருக்கின்றது என பேச எடப்பாடி பழனிச்சாமிக்கு யோக்கியதை இல்லை.நான் அந்த வார்த்தை பயன்படுத்தியதற்கு பதிலாக, வேறு வார்த்தை பயன்படுத்திருக்க வேண்டும் என்று சொன்னால் அவரிடம் திரும்பி கேட்கின்றேன். உங்கள் கேபினட்டில் இருந்த ஒரு அமைச்சர், முதல்வர், கலைஞர், முதல்வரின் குடும்பத்தினரை அவதூறாக பேசி உயர்நீதிமன்றத்தில் இரு வழக்கு இருக்கின்றது.


அதற்கு பின்னர் ஒரு பெரிய மாநாடு நடைபெற்றது. மாநாட்டில் கலை நிகழ்ச்சி என்ற பெயரில் முதல்வர் குடும்பத்தை கேவலப்படுத்தீர்கள் .இதற்கெல்லாம் வருத்தம் தெரிவித்து விட்டு, பொது செயலாளர் பதவியை ராஜினாமா செய்தால், நானும் வருத்தம்  தெரிவித்து திமுகவில் துணை பொதுசெயலாளர் பதவியை ராஜினாமா செய்கின்றேன்.எம்ஜிஆர் முகத்தை வைத்து திமுக ஆட்சிக்கு வந்ததாக கூறுவது குறித்த கேள்விக்கு , அது தனி கதை அதை தனியாக பேசுவோம்" என தெரிவித்தார்.


அமைச்சர் முத்துசாமி பேசுகையில், “கோவையில் மாஸ்டர் பிளான் தயாராக உள்ளது. விரைவில் வெளியிடபடும். 30 வருடத்திற்கு தேவையான பணிகள் அதில் செய்து இருக்கின்றோம்” என தெரிவித்தார்.


மேலும் படிக்க | கொடூர சம்பவம்.. அழுகிய நிலையில் மீட்கப்பட்ட சடலம், 5 பேர் கைது


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..


முகநூல் - @ZEETamilNews


ட்விட்டர் - @ZeeTamilNews


டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 


வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r


அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ