பழனி முருகன் கோவிலில் கெட்டுப்போன பிரசாதங்கள் விற்பனை! ஆய்வில் வெளியான அதிர்ச்சி!

Palani Murugan Prasadam: தைப்பூசத் திருவிழாவை முன்னிட்டு தயாரிக்கப்பட்ட பஞ்சாமிர்தம் உட்பட பிரசாதங்கள் விற்பனை ஆகாமல் தேக்கமடைந்ததால், அதை விற்பனை செய்து வருவதாக புகார் எழுந்தது...

Written by - Malathi Tamilselvan | Last Updated : Feb 9, 2024, 06:34 PM IST
  • பழனி கோவிலில் கெட்டு போன பிரசாதங்கள் விற்பனை
  • கெட்டுப் போன பழனி பஞ்சாமிர்தம்
  • காலாவதியான பிரசாதங்கள் விற்பனை
பழனி முருகன் கோவிலில் கெட்டுப்போன பிரசாதங்கள் விற்பனை! ஆய்வில் வெளியான அதிர்ச்சி! title=

பழனி முருகன் கோவிலில் கெட்டுப்போன பிரசாதங்கள் விற்பனை செய்யப்பட்டதாக எழுந்த புகாரில் உணவு பாதுகாப்புத்துறை அதிகாரிகள் ஆய்வு செய்தனர். இந்த ஆய்வில், பிரசாதங்களில் எண்ணெய் சிக்கு வாடை அடிப்பதாக உணவு பாதுகாப்பு துறை அதிகாரி கலைவாணி தெரிவித்துள்ளார்.

அறுபடை வீடுகளில் மூன்றாம் படை வீடான பழனி தண்டாயுதபாணி சுவாமி கோவில் நாள்தோறும் ஆயிரக்கணக்கான பக்தர்களும் திருவிழா மற்றும் விசேஷ காலங்களில் லட்சக்கணக்கான பக்தர்கள் வருகை தரும் நிலையில் திருக்கோவில் தேவஸ்தான நிர்வாகம் சார்பில் பஞ்சாமிர்தம், லட்டு, அதிரசம், முறுக்கு உள்ளிட்டவை தயாரிக்கப்பட்டு திருக்கோவில் ஊழியர்கள் வைத்து ஆங்காங்கே கடைகள் அமைக்கப்பட்டு விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

இந்நிலையில் தைப்பூசத் திருவிழாவை முன்னிட்டு தயாரிக்கப்பட்ட பஞ்சாமிர்தம் உட்பட பிரசாதங்கள் அனைத்தும் இன்று வரை விற்பனை ஆகாமல் தேக்கமடைந்துள்ளதாகவும் , இதனை கோவில் நிர்வாகம் கண்டு கொள்ளாமல் தொடர்ந்து இரவு பகலாக விற்பனை செய்து வருவதால் கெட்டுப் போன பிரசாதங்களை பக்தர்கள் பணம் கொடுத்து விலைக்கு வாங்கி செல்லும் சூழல் ஏற்பட்டுள்ளது.

மேலும் படிக்க | இன்னும் 3 நாட்களில் இந்த ராசிகளுக்கு ராஜவாழ்க்கை ஆரம்பம்: அள்ளித்தருவார் சுக்கிரன்

கடந்த 26 ஆம் தேதி தயாரிக்கப்பட்ட பஞ்சாமிர்தங்கள் 15 நாட்களுக்குள் விற்கப்பட வேண்டும். ஆனால் அவையும், தயாரிப்பு தேதி இல்லாமலும் விற்கப்படும்  லட்டு ,முறுக்கு, அதிரசம் போன்ற பிரசாதங்கள் கெட்டுப்போன வாசனை அடிப்பதாக பக்தர்கள் மற்றும் ஞான தண்டாயுதபாணி சுவாமி பக்தர்கள் பேரவையின் செந்தில் குமார் குற்றம் சாட்டினார்.

இதனால் பிரசாதங்கள் விற்பனை செய்யும் ஊழியர்கள், பக்தர்களிடம் பணத்தை திருப்பிக் கொடுத்தனர். பழனி உணவுத்துறை அதிகாரிகள் கோவில் நிர்வாகம் சார்பில் தயாரிக்கப்படும் பிரசாதங்களின் தரம் குறித்து உணவுத்துறை அதிகாரிகள் ஆய்வு செய்ய வேண்டுமென பரபரப்பு குற்றச்சாட்டை தெரிவித்துள்ளனர்.

இந்நிலையில் பத்திரிகையாளர்கள் தொலைக்காட்சியில் செய்தி வெளியிட்டது பொய் என கோவில் நிர்வாகம் சார்பில் பத்திரிக்கை செய்தி வெளியிட்டனர். இதனையடுத்து பஞ்சாமிர்தம் தயாரிக்கும் நிலையங்களில் திண்டுக்கல் மாவட்ட உணவு பாதுகாப்புத் துறை அதிகாரி கலைவாணி தலைமையில் ஏழு அதிகாரிகள் கெட்டுப்போன பிரசாதம் விற்பனை செய்த கடைகளில் ஆய்வு மேற்கண்டனர்.

ஆய்வில், லட்டு எண்ணை சிக்கு வாடை அடிப்பதாகவும், மேலும் லட்டு காய்ந்து விட்டதாகவும் ஆய்வகத்திற்கு எடுத்துச் செல்கிறோம் என்றும் தெரிவித்தனர்.பஞ்சாமிர்தக் குடோனை ஆய்வு செய்யாமல் பிரசாதங்கள் தயாரிக்கும் நிலையத்தை மட்டும் ஆய்வு செய்தனர். அப்போதும் கூட பத்திரிகையாளர்கள் உள்ளே அனுமதி இல்லை என்றும் ஒரு சிலர் மட்டும் வரலாம் என்று பழனி காவல் கண்காணிப்பாளர் சுப்பையா தெரிவித்தார்.

இதனை அடுத்து மூன்று செய்தியாளர்கள் மட்டும் உள்ளே சென்றனர். உள்ளே சென்ற உணவு பாதுகாப்பு அதிகாரிகள் பேக்கிங் செய்யும் கவர்கள் மாற்றப்பட வேண்டும் என்றும், எண்ணையை நன்றாக வடிகட்டி பயன்படுத்த வேண்டும் என்றும் அறிவுரை வழங்கினர். மேலும் காலாவதி தேதி பதிவு செய்து விற்பனை வேண்டும் என்றும் தெரிவித்து சென்றனர்.

மேலும் படிக்க | சனியின் ராசியில் சூரியன்: இந்த ராசிகளுக்கு நம்ப முடியாத நற்பலன்கள்... கோடீஸ்வர யோகம்

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..

முகநூல் - @ZEETamilNews

ட்விட்டர் - @ZeeTamilNews

டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 

வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r

அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News