சென்னை: எழும்பூரில் அமைந்துள்ள தனியார் நட்சத்திர விடுதியில் மல்டிபில் சிகிளீரோசிஸ் சொசைட்டி ஆப் இந்தியா நடத்திய மால்டிபில் சிகிளீரோசிஸ் தொடர்பான விழிப்புணர்வு கலந்தாய்வு கூட்டம் நடைப்பெற்றது.  மால்டிபில் சிகிளீரோசிஸ் மருத்துவர் ஆன் கோன்சால்வேஸ் தலைமையில் நடைபெற்ற இந்த கலந்தாய்வு நிகழ்ச்சியில் சிபெயின் நாட்டின் கவுரவ தூதர் அந்தோனி லோபோ சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார்.  இந்த நிகழ்ச்சியில் மால்டிபில் சிகிளீரோசிஸ் நோயை ஆராய்ந்து வரும் மூத்த மருத்துவர்கள்  டாக்டர் தீபக் அர்ஜூன் தாஸ், டாக்டர் வெங்கடராமன் கார்த்திகேயின் , டாக்டர் டிடிபியா ஆகியோர் கலந்தாய்வு கூட்டத்தில் கலந்து கொண்டு உரையாற்றினர்.  இந்த நிகழ்ச்சியில் மால்டிபில் சிகிளீரோசிஸ் நோயின் அறிகுறிகள், அதன் பக்கவிளைவுகள் மற்றும் விளைவுகள் , நோயின் மருத்துவங்கள் மற்றும் அதன் பயன்பாடு தொடர்பாக கருத்துகள் பரிமாறப்பட்டது, இந்த நோயினால் பாதிக்கப்பட்டவர்கள் அவர்களது வாழ்க்கையை சுலபமாக்க நோயாளிகள் எடுக்கக்கூடிய முயற்சிகளும் மருந்துகளும் தொடர்பாக இந்த நிகழ்ச்சியில் பகிரபட்டது. 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

மேலும் படிக்க | தமிழகத்தில் பள்ளிகள் திறப்பு எப்போது? அமைச்சர் அன்பில் மகேஸ் தகவல்!


நிகழ்ச்சிக்கு பின்னர் செய்தியர்களை சந்தித்த மருத்துவர் வெங்கட்ராமன் கார்த்திகேயன், தற்போது தமிழகத்தை பொறுத்தவரை மல்டிபில் சிகிளீரோசிஸ் நோய் மக்களிடம் பரவலாக காணப்படுகிறது ,மல்டிபில் சிகிளீரோசிஸ் என்னும் நோயுக்கு தமிழகத்தில் அரசு சார்பில் பல சலுகைகளும் மருத்துவ சிகிச்சை மையங்களும் பல்வேறு அமைக்கப்பட்டுள்ளது. இந்த நோய் தொடர்பான விழிப்புணர்வை அரசு தலையிட்டு மக்களிடம் எடுத்த செல்வது பல நபர்களின் வாழ்வாதாரத்தை சரி செய்யும் என தெரிவித்தார். மேலும், அரசு சார்பில் மிக உடல் நலம் ஊனமுற்றோர்களுக்கு தகுந்தபடி 3 அல்லது 5 கிலோ மீட்டர்ருக்கு ஒரு பொது கழிவறை அமைத்தால் வீட்டுக்குள் நோயாளிகள் முடங்கி இருக்காமல் வெளியிடுகத்தை சந்திக்கும் தைரியம் அவர்களுக்கு வரும் என தெரிவித்தார்.


மேலும், கோவையில் பிரபல மருத்துவமனையான குப்புசாமி நாயுடு மருத்துவமனையில் பிரதான தண்ணீர் தொட்டியில் மாசு கலந்த நிலையில் தண்ணீரை அருந்திய ஊழியர்களுக்கு வாந்தி மயக்கம் ஏற்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. கோவை பாப்பநாயக்கன்பாளையம் பகுதியில் அமைந்துள்ள கோவையின் பிரபல மருத்துவமனையான குப்புசாமி நாயுடு நினைவு மருத்துவமனையில் தினசரி ஆயிரத்துக்கும் மேற்பட்ட நோயாளிகள் வெளி நோயாளிகளாகவும் உள் நோயாளிகளாகவும் சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்த நிலையில் கடந்த இரண்டு தினங்களுக்கு முன்பு மருத்துவமனை வளாகத்தில் உள்ள சுமார் 60,000 லிட்டர் கொள்ளளவு கொண்ட பிரதான தண்ணீர் தொட்டியில் பூனை ஒன்று விழுந்து இறந்துள்ளதாக கூறப்படுகிறது. 


இதனால் தண்ணீர் மாசடைந்த சூழலில் இரண்டு மூன்று தினங்களாக அந்த தண்ணீர் மருத்துவமனையில் நோயாளிகள் மற்றும் ஊழியர்களுக்கு குடிநீராக விநியோகிக்கப்பட்டு வந்துள்ளது. இதனிடையே நேற்றைய தினம் மருத்துவமனையில் செவிலியர்கள் பலருக்கு வாந்தி மயக்கம் ஏற்பட்டதால் பரபரப்பு நிலவியது. இதை அடுத்து பாதிக்கப்பட்ட ஊழியர்கள் மற்றும் நோயாளிகள், உறவினர்களுக்கு அதே மருத்துவமனையில் வைத்து மருத்துவர்கள் சிகிச்சை அளித்துள்ளனர். இதுகுறித்து மாவட்ட சுகாதாரத் துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டதை தொடர்ந்து இன்று சுகாதாரத்துறை துணை இயக்குனர் அருணா தலைமையிலான சுகாதாரத் துறையினர் மருத்துவமனையில் சிறப்பு முகாம் அமைத்து அங்குள்ள சுமார் 300 செவிலியர்கள் மற்றும் ஊழியர்களுக்கு உடல் நலன் பரிசோதனை செய்து அவர்களுக்கு மருந்து மாத்திரைகள் வழங்கி வருகின்றனர். இது குறித்து  பேட்டி அளித்த சுகாதாரத் துறை துணை இயக்குனர் அருணா, தண்ணீரில் மாசு கலந்ததாக தங்களுக்கு வந்த தகவலின் அடிப்படையில் அந்த தண்ணீரை எடுத்து ஆய்வுக்கு அனுப்பியுள்ளதாகவும் தண்ணீரை அருந்திய செவிலியர்களுக்கும் ஊழியர்களுக்கும் தற்போது உடல் பரிசோதனை செய்து சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாகவும் கூறியதுடன்  ஆய்வு முடிவு வந்த பிறகே  உரிய காரணம் தெரியவரும் என கூறியுள்ளார்.


இதேபோல் பூனை தண்ணீர் தொட்டிக்குள் விழுந்து உயிரிழந்தது என்று தவறான தகவல்கள் பரப்பப்பட்டு வருவதாகவும் தண்ணீரில் மாசு கலந்ததன் காரணமாகவே ஊழியர்களுக்கு உடல் நலக்குறைவு ஏற்பட்டதாகவும் தெரிவித்துள்ள  மருத்துவமனையின் முதன்மை மருத்துவர் சுந்தர்ராஜன், தண்ணீர் தொட்டியில் இருந்த குடிநீர் முழுமையாக அப்புறப்படுத்தப்பட்டு நேற்று முதல் ஊழியர்கள் மற்றும் நோயாளிகள், அவர்களது உறவினர்கள் ஆகியோருக்கு சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் பாட்டில்கள் வழங்கப்பட்டு வருவதாகவும் மாசடைந்த குடிநீர் குடித்ததால் 60 பேர் பாதிக்கப்பட்டு அவர்களுக்கு உரிய சிகிச்சை அளிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளார். கோவையில் பிரபலமான மருத்துவமனையான குப்புசாமி நாயுடு மருத்துவமனையில் குடிநீரில் மாசு கலந்து செவிலியர்கள் மற்றும் ஊழியர்கள் பாதிக்கப்பட்ட சம்பவம் கோவையில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.


மேலும் படிக்க | ஒடிசாவுக்கான விமான டிக்கெட் தாறுமாறு விலை உயர்வு - மதுரை எம்பி சு.வெங்கடேசன் கடும் கண்டனம்


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.


முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ