நாளை முதல் அனைத்து கல்லூரிகளும் திறக்கப்படும்.. அரசு அதிரடி!!
புதுச்சேரியில் டிசம்பர் 17 ஆம் தேதி முதல் அனைத்து கல்லூரிகளும் திறக்கப்படும் என அம்மாநில உயர்கல்வித்துறை அறிவித்துள்ளார்.
புதுச்சேரியில் டிசம்பர் 17 ஆம் தேதி முதல் அனைத்து கல்லூரிகளும் திறக்கப்படும் என அம்மாநில உயர்கல்வித்துறை அறிவித்துள்ளார்.
கடந்த மார்ச் மாதத்தில் இருந்து கொரோனா வைரஸ் (CoronaVirus) அச்சம்ம காரணமாக பள்ளி, கல்லூரிகள் (College) மூடியபடி உள்ளது. இதை தொடர்ந்து, செமஸ்டர் தேர்வுகள் ரத்து செய்யப்பட்டு இறுதியாண்டு மாணவர்களுக்கு மட்டும் ஆன்லைன் வாயிலாக தேர்வுகள் நடத்தப்பட்டது. நடப்பு கல்வியாண்டு வகுப்புகளும் தற்போது ஆன்லைனிலேயே (Online Class) தொடருகிறது. இந்நிலையில், தமிழகத்தில் இறுதியாண்டு மாணவர்களுக்கு டிசம்பர் 7 ஆம் தேதி கல்லூரிகள் திறக்கப்பட்டது.
இந்நிலையில் புதுச்சேரியில் (Puducherry) வரும் (டிச.17) நாளை முதல் அனைத்து கல்லூரிகளும் திறக்கப்படும் என உயர் கல்வித்துறை அறிவித்துள்ளது. புதுச்சேரியில் இளநிலை மற்றும் முதுநிலை படிப்பிற்கான இறுதியாண்டு வகுப்புகள் வரும் 17 ஆம் தேதி முதல் திறக்கப்படவுள்ளதாகவும், கல்லூரிகள் மத்திய சுகாதார அமைச்சகத்தின் கொரோனா தடுப்பு விதிமுறைகளை பின்பற்றுமாறும் அறிவுறுத்தியுள்ளது.
ALSO READ | தனியார் பள்ளிகள் அரையாண்டு தேர்வை நடத்தலாம்: செங்கோட்டையன்
இதற்க்கு முன்னதாக கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் கூறுகையில்... “தனியார் பள்ளிள் ஆன்லைனில் அரையாண்டு தேர்வை நடத்தலாம். அதற்கு ஆட்சேபம் இல்லை. அரசு பள்ளிகளில் அரையாண்டு தேர்வை தமிழக அரசு (TN Govt) ஒத்திவைத்துள்ளது. அரசு சரியாக செயல் படுவதால் பள்ளிக்கல்வித்துறை பற்றி வெள்ளை அறிக்கை வெளியிட தேவையில்லை. 50 சதவீதம் பாடங்கள் குறைப்பு மட்டுமின்றி நடத்தப்படும் பாடங்களில் இருந்து மட்டும் தான் கேள்விகள் கேட்கப்படும் கூறியுள்ளது குறிப்பிடதக்கது.
உலக நிகழ்வுகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள ZEE இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்...
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR