Arakkonam Tamil Nadu Lok Sabha Election Result 2024: 2024 மக்களவைத் தேர்தல் ஜூன் 1 ஆம் தேதி 7ஆம் கட்ட வாக்குப்பதிவுடன் நிறைவடைந்தது. முதல் கட்ட வாக்குப்பதிவு ஏப்ரல் 19 ஆம் தேதி 102 தொகுதிகளில் நடந்தது. வாக்குப்பதிவு எண்ணிக்கை 66.14 சதவீதமாக இருந்தது. இரண்டாம் கட்ட வாக்குப்பதிவு ஏப்ரல் 26 ஆம் தேதி 89 தொகுதிகளில் நடைபெற்றது. இதில் 66.71 சதவீத வாக்குகள் பதிவாகின. மே 7ஆம் தேதி 94 நாடாளுமன்றத் தொகுதிகளில் நடைபெற்ற மூன்றாம் கட்டத் தேர்தலில் 65.68 சதவீத வாக்குகள் பதிவாகின. 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

தற்போதைய நிலவரம் என்ன?


அரக்கோணம்: அரக்கோணம் மக்களவைத் தொகுதியில் 3 முறை வெற்றி பெற்ற முன்னாள் மத்திய அமைச்சரும் திமுகவின் மூத்த தலைவர்களில் ஒருவருமான ஜெகத்ரட்சகன் 4-வது முறையாக வெற்றிபெறும் நிலையில் உள்ளார். தேர்தல் ஆணையத்தின் சமீபத்திய தரவுகளின் படி, திமுக -வின் ஜெகத்ரட்சகன் 85992 முதலிடத்திலும் அதிமுக -வின் விஜயன் இரண்டாம் இடத்திலும் பாட்டாளி மக்கள் கட்சியின் கே பாலு மூன்றாவது இடத்திலும் உள்ளனர்.


மே 13 ஆம் தேதி நடைபெற்ற நான்காம் கட்டத் தேர்தலில் 96 நாடாளுமன்றத் தொகுதிகளுக்கு 69.16 சதவீத வாக்குகள் பதிவாகின. 6 மாநிலங்கள் மற்றும் இரண்டு யூனியன் பிரதேசங்களில் 49 நாடாளுமன்றத் தொகுதிகளுக்கு நடந்த ஐந்தாம் கட்ட வாக்குப்பதிவு மே 20ஆம் தேதி நடைபெற்றது, இதில், 62.2 சதவீத வாக்குகள் பதிவாகியிருந்தன. ஆறாவது கட்ட வாக்குப்பதிவு மே 25ஆம் தேதி 58 மக்களவைத் தொகுதிகளில் நிறைவடைந்தது. இதன் ஒட்டுமொத்த வாக்குப்பதிவு 63.36 சதவீதமாக இருந்தது. ஏழாம் கட்ட வாக்குப்பதிவு ஜூன் 1 ஆம் தேதி நடந்தது. 57 தொகுதிகளில் நடந்த வாக்குப்பதிவில் 59.5% வாக்குகள் பதிவாகின.


தமிழ் நாட்டின் 39 மக்களவைத் தொகுதிகளில் முதல் கட்டத்தில் வாக்குப்பதிவு நடந்தது. பல்வேறு அம்சங்களில் முக்கியத்துவம் வாய்ந்த நாடாளுமன்ற தொகுதிகளைக் கொண்டுள்ள தமிழ்நாட்டின் அரக்கோணம் தொகுதி பற்றிய முழுமையான விவரங்களை  இங்கே காணலாம். 


அரக்கோணம் தொகுதியின் தற்போதைய நாடாளுமன்ற உறுப்பினர் - திமுக வேட்பாளர் எஸ்.ஜெகத்ரட்சகன் 


அரக்கோணத்தில் உள்ள சட்டமன்ற தொகுதிகள் - அரக்கோணம் (தனி), சோளிங்கர்,  திருத்தணி, ஆற்காடு, இராணிப்பேட்டை, காட்பாடி 


அரக்கோணம் தொகுதியின் மொத்த வாக்காளர்கள் எண்ணிக்கை - 15,62,871, இதில் ஆண் வாக்காளர்கள்-7,60,345, பெண் வாக்காளர்கள்- 8,02,361, மூன்றாம் பாலின வாக்காளர்கள்-165 ஆவார்கள். 


மேலும் படிக்க | EVM வாக்கு எண்ணிக்கை... அவசியம் தெரிந்து கொள்ள வேண்டிய சில தகவல்கள்..!!


2024 மக்களவைத் தேர்தலில் பதிவான வாக்கு சதவிகிதம் - 74.19% 


2024 மக்களவைத் தேர்தலில் போட்டியிடும் மொத்த வேட்பாளர்கள் 26.


திமுக: எஸ். ஜெகத்ரட்சகன், உதயசூரியன் சின்னம்
அதிமுக: எல். விஜயன், இரட்டை இலை சின்னம்
எண்டிஏ: கே.பாலு, பா.ம.க, மாம்பழம் சின்னம்
நாம் தமிழர் கட்சி: எஸ். அஃப்ஷியா நஸ்ரின், மைக் சின்னம்
பகுஜன் சமாஜ் கட்சி: டி. பாண்டியன், யானை சின்னம்


கள நிலவரம் கூறுவது என்ன? 


இம்முறையும் அரக்கோணத்தில் திமுக வேட்பாளர் எஸ். ஜெகத்ரட்சகனுக்கே வெற்றிக்கான அதிக வாய்ப்புகள் உள்ளதாக எமது கள ஆய்வுகள் தெரிவிக்கின்றன. 


அரக்கோணம் தொகுதி 2019 மக்களவைத் தேர்தல் நிலவரம்


மொத்த வாக்காளர்கள் 1179712
வாக்கு சதவீதம் 78.65 %
சிட்டிங் எம்.பி: எஸ்.ஜெகத்ரக்ஷகன்
எஸ்.ஜெகத்ரக்ஷகன் பெற்ற வாக்குகள்: 672190
இரண்டாம் இட வேட்பாளர்: ஏ.கே. மூர்த்தி
ஏ.கே. மூர்த்தி பெற்ற வாக்குகள்: 343234
வாக்கு வித்தியாசம்: எஸ்.ஜெகத்ரக்ஷகன் 328956 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார்.


மேலும் படிக்க | NDA vs INDIA: பிரதமரை தீர்மானிக்கும் 'இந்த 6 மாநிலங்கள்' - நாளைக்கு இதுதான் ரொம்ப முக்கியம்


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..


முகநூல் - @ZEETamilNews


ட்விட்டர் - @ZeeTamilNews


டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 


வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r


அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ