இந்தியாவில் கொரோனா தொற்றுநோய் அதிகளவில் பரவி வருகிறது. நாட்டில் 315,802 பேருக்கு புதிதாக கொரோனா வைரஸ் தொற்றுநோய் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இந்தியாவில் ஒரே நாளில் 2,102 இறப்புகள் ஏற்பட்டுள்ளது. இந்த கொடிய தொற்றுநோயால் இறந்தவர்களின் எண்ணிக்கை 184,672 ஆக உள்ளது. நாட்டில் இப்போது கிட்டத்தட்ட 2.3 மில்லியன் பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு உள்ளனர். 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

மறுபுறம்  பொதுமக்களுக்கு தடுப்பூசியை (Vaccination) செலுத்தும் பணிகளை மத்திய அரசு தீவிரப்படுத்தி வருகிறது. அந்தவகையில் கடந்த சில நாட்களுக்கு முன், மாநில அரசுகளுக்கு கொரோனா (Coronavirus) தடுப்பூசிகளை நேரடியாகக் கொள்முதல் செய்து கொள்ளலாம் என அறிவித்திருந்தது. அதன்படி மத்திய அரசுக்கு 150 ரூபாய்க்கும் மாநில அரசுகளுக்கு 400 ரூபாய்க்கும் கோவிஷீல்டு தடுப்பூசி விற்பனை செய்யப்படும் என அறிவிக்கப்பட்டிருந்தது.


இந்நிலையில் தற்போது தமிழகத்தில் 18 வயதுக்கு மேற்பட்ட அனைவருக்கும் இலவசமாக கொரோனா தடுப்பூசி (Corona Vaccine) போடப்படும் என்றும் மாநிலம் முழுவதும் சிறப்பு முகாம்கள் நடத்தப்படும் என்றும் தமிழக அரசு அறிவித்துள்ளது. இது தொடர்பாக வெளியிட்ட அறிக்கையில் கூறியதாவது.,


ALSO READ | பீதியைக் கிளப்பும் சென்னையின் 'COVID Positivity Rate', நிலைமை மோசமாகலாம்: எச்சரிக்கும் நிபுணர்கள்


மே 1 முதல் 18 வயதுக்கு மேற்பட்டவர்களுக்குத் தடுப்பூசி செலுத்த மத்திய அரசு அனுமதித்துள்ளது. ஏற்கெனவே அறிவித்தபடி இலவசமாகப் பொதுமக்களுக்குத் தடுப்பூசி வழங்கப்படும். இதற்கான முழுவ செலவுகளையும் மாநில அரசே ஏற்றுக்கொள்ளும். மாநிலத்தில் கொரோனா காரணமாக அதிகம் பாதிக்கப்பட்டுள்ள மாவட்டங்களில் முன்னுரிமை அடிப்படையில் இந்த சிறப்புத் தடுப்பூசி முகாம்கள் நடத்தப்படும்.


தற்போது 45-60 வயதுள்ள 13 சதவீதம் பேருக்கும், 60 வயதுக்கு மேல் உள்ள 18 சதவீத பேருக்கும் கொரோனா தடுப்பூசி போடப்பட்டுள்ளது. தற்போது 45 வயதிற்கு மேற்பட்ட அனைவருக்கும் கொரோனா தடுப்பூசி போடும் பணிகளைத் தீவிரப்படுத்தியுள்ளோம். அனைத்து மாவட்டங்களிலும் தேவைக்கு ஏற்ப, மருத்துவ கட்டமைப்பு வசதிகள், ஆக்சிஜன் வசதி ஏற்படுத்த மாவட்ட நிர்வாகத்திற்கு உத்தரவிடப்பட்டுள்ளது.


மாநிலத்தில் கொரோனா பரிசோதனைகளும் தேவைக்கு ஏற்ப உயர்த்தப்படும். மேலும், பொதுமக்களிடம் நோய் எதிர்ப்புச் சக்தி 60 சதவீதத்திற்கு மேல் உருவாக்க, சிறப்பு முகாம்கள் நடத்தப்படும். அனைவருக்கும் நோயெதிர்ப்பு சக்தியை 60 சதவீதத்திற்கு மேல் ஏற்படுத்துவதே அரசின் முக்கிய குறிக்கோள்" எனத் தமிழக அரசின் அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.


அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, கல்வி, பொழுதுபோக்கு, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!


Android Link - https://bit.ly/3hDyh4G


Apple Link - https://apple.co/3loQYeR