சென்னை: நாட்டின் COVID-19 தொற்று பாதிப்பு இன்று (புதன்கிழமை) 7,42,417 ஆக அதிகரித்துள்ளது. ஒரே நாளில் 22,752 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டு உள்ளது. அதே நேரத்தில் இறப்பு எண்ணிக்கை 20,642 ஆக உயர்ந்தது. கடந்த 24 மணி நேரத்தில் 482 பேர் இந்த நோயால் இறந்துள்ளனர். 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

இந்தியாவில் ஒரு மில்லியனுக்கு 315.8 என்ற அடிப்படையில் மீட்பு விகிதம் உள்ளது என்று மத்திய அமைச்சகம் (National Health Mission) வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.


அதேபோல தமிழக (Health and Family Welfare Department Tamilnadu) சுகாதாரத்துறை வெளியிட்டுள்ள அறிக்கையில், இன்று தமிழகத்தில் மட்டும் 3756 பேருக்கு புதிதாக கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது. அதில் சென்னையில் மட்டும் 1261 பேர் பாதிப்படைந்துள்ளனர். அதே நேரத்தில் மாநிலத்தில் இதுவரை ஏற்பட்ட இறப்பு எண்ணிக்கையை பார்த்தால், 1700 ஆக உள்ளது. இன்று மட்டும் 64 பேர் இறந்துள்ளனர். 


READ MORE | திருச்சியில் அதிர்ச்சி!! 104 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று நோயை பரப்பிய துரையூர் வாலிபர்


இதுவரை கொரோனா தொற்று (Coronavirus) நோயால் பாதிக்கப்பட்ட 74,167 பேர் குணமடைந்து வெளியேற்றப்பட்டனர். தற்போது நிலவரப்படி 46,480 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். 


இன்றைய நிலவரம் பார்த்தால், குணமடைந்து வெளியேறியவர்கள் 3051 பேர் ஆவார்கள். அதேபோல 3051 பேருக்கு இன்று சோதனை மேற்கொள்ளப்பட்டது.


இதுவரை தமிழகத்தில் 14,49,414 பேருக்கு சோதனை செய்யப்பட்டு உள்ளது. அதில் 74,167 பேர் வெளியேற்றப்பட்டனர். செயலில் 46,480 பேர் உள்ளனர். அவர்களை தொடர்ந்து கண்காணிப்பில் வைக்கப்பட்டு உள்ளனர்.


READ MORE | பொதுமக்கள் நலன் கருதி நடமாடும் காய்கறி அங்காடி சேவை தொடரும் - சென்னை மாநகராட்சி அறிவிப்பு


இன்றைய நிலவரம்: 08 ஜூலை 2020
மாநிலத்தில் - 3756 
சென்னை - 1261 
மரணம் - 64
வெளியேற்றம் - 3051
சோதனை எண் - 35,979


மொத்தம் விவரம்:
செயலில் உள்ள வழக்குகள் - 46,480
நேர்மறை வழக்கு - 1,22,350
சென்னை வழக்கு - 72,500
இறப்பு எண்ணிக்கை - 1,700
வெளியேற்றம் - 74,167
சோதனை எண் - 14,49,414


READ MORE | தமிழகத்தில் கொரோனா தொற்று சமூகப் பரவலாக மாறவில்லை: EPS


இதற்கிடையில், டெல்லி அரசு (Delhi News Corona Cases) கொரோனா நோயாளிகளிடமிருந்து பிளாஸ்மா பெறுவது குறித்து பேசி வருகிறது மற்றும் மருத்துவமனையில் நியமிக்கப்பட்ட COVID நோயாளிகள் குணமடைந்து வெளியேறும் போது இரத்த பிளாஸ்மாவை தானம் செய்ய வேண்டும் என கோரிக்கை வைத்துள்ளது. அதற்கு பலர் ஆதரவு தெரிவித்துள்ளனர்.