சென்னையில் இன்று மறைந்த VP ராமன் அவர்களின் புத்தக வெளியிட்டு விழா நடைபெற்றது.  இந்த நிகழ்ச்சியில் முதல்வர் முக ஸ்டாலின் கலந்து கொள்வதாக இருந்தது.  கடைசி நேரத்தில் நீர்வளத்துறை துரை அமைச்சர் துரைமுருகன் கலந்து கொண்டு பேசினார்.  அவர் பேசுகையில், " முதலமைச்சர் உடல்நிலை  சரியில்லாத காரணத்தினால் மருத்துவர்களின் பரிந்துரைப்படி அவர் இந்த நிகழ்ச்சியில் பங்கேற்கவில்லை, அவருக்கு பதிலாக அவரது உரையை என்னை கொடுத்து விட்டு வருமாறு  முதல்வர் அனுப்பி உள்ளார். 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING


மேலும் படிக்க | அதிமுகவில் முற்றும் அதிகார மோதல்: நீதிமன்ற செல்ல தயாராகும் ஓபிஸ்


விபி ராமன் குடும்பம் லாயிட்ஸ் கார்னர் என்று சொல்லித்தான் பழக்கம், அதே கோபாலபுரம் பகுதியில் வாசிக்க கூடியவர்கள் தான் நாங்கள்.  நீங்கள் ஒரு கார்னர், நாங்கள் ஒரு கார்னர்.  இப்படி ஒரு சுயசரிதை நூலை வி பி ராமன் எழுதியிருந்தால், அதனை அப்போது கலைஞரே வெளியிட்டு இருப்பார்.   தற்போது அவரது மகன் எழுதியுள்ளதால், கலைஞரின் மகனான நான் வெளியிடும் வாய்ப்பை பெற்றுள்ளேன்.



மகுடம் மருத்துவராக இருந்தாலும், வாழ்நாள் முழுவதும் முடிசூடா மன்னனாக இருந்து மறைந்தவர் VP ராமன்.  பேரறிஞர் அண்ணா அவர்களின் இறுதி ஊர்வலத்தில் VP ராமன் சென்றது இந்த நூலில் பதிவிடபட்டு உள்ளது.  எம்ஜிஆர் VP இராமனை அவரது கட்சியில் சேர அழைத்த போது அவர் சேரவில்லை, அதற்கான காரணத்தை PS ராமன் இந்த புத்தகத்தில் குறிப்பிட்டு இருக்கிறார்" என்று துரைமுருகன் இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டு பேசினார்.


முதல்வர் முக ஸ்டாலின்க்கு லேசான காய்ச்சல் இருப்பதால் அடுத்த இரண்டு நாட்களுக்கு முதல்வர் கலந்து கொள்ளும் நிகழ்ச்சிகள் அனைத்தும் ரத்து செய்யப்படுவதாக செய்தி குறிப்பு வெளிவந்துள்ளது.


மேலும் படிக்க | ஜாதகத்தை நம்பினால் இதான் நடக்கும்! - டிஜிபி சைலேந்திர பாபு எச்சரிக்கை


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.


முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link - https://bit.ly/3hDyh4G


Apple Link - https://apple.co/3loQYeR