சென்னையை அடுத்த பெரும்பாக்கத்தில் உள்ள தனியார் மருத்துவமனையில் முதன்மை ஆஞ்சியோபிளாஸ்டி பற்றிய விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது.
இந்நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராக தமிழ்நாடு காவல்துறை டிஜிபி சைலேந்திரபாபு கலந்து கொண்டு இதய ஆரோகியத்தின் முக்கியத்துவத்தை உணரும் வகையிலும், ஊக்குவிக்கும் வகையிலும் விழிப்புணர்வு ஏற்படுத்தினார்.
இந்நிகழ்ச்சியில் சோழிங்கநல்லூர் திமுக சட்டமன்ற உறுப்பினர் எஸ்.அரவிந்த் ரமேஷ் மற்றும் மருத்துவர்கள், செவிலியர்கள் என ஏராளமானோர் கலந்து கொண்டனர்.
பின்னர் மேடையில் பேசிய டிஜிபி சைலேந்திரபாபு,
மேலும் படிக்க | Viral News: இந்த நாட்டில் தங்கத்தை விட ஆணுறையின் விலை அதிகம்; விலை ரூ.60,000 மட்டுமே
நான் ஒரு காலத்தில் மருத்துவராக ஆசைப்பட்டேன். இப்போதும் நான் டாக்டர் தான்... ஆராய்ச்சி மருத்துவர்.
அப்போது மருத்துவத்துறை எனக்கு வாய்ப்பு கொடுக்கவில்லை. ஆனால் தற்போது மருத்துவமனைக்கு சிறப்பு விருந்தினராக அழைப்பு விடுத்துள்ளார்கள்.
அலோபதி மருத்துவம் கடந்த 400 ஆண்டுகளாக பெரிய வளர்ச்சியை கண்டுள்ளது.
நமது சென்னை காவல் ஆணையர் அவர்களுக்கு மாரடைப்பு ஏற்பட்டது. ஆனால் குறிப்பிட்ட மருத்துவருக்கு தொடர்பு கொண்டு அவர் வந்து சிகிச்சை பெற்று மறுநாளே அவர் பணிக்கு சென்றார்.
ஜாதகத்தை நம்பி என் அலுவலகத்தில் வேலை பார்த்த அதிகாரி ஒருவர் உரிய நேரத்தில் அறுவை சிகிச்சை செய்து கொள்ளததால் உயிரிழந்தார்.
எனவே மருத்துவம் முறையாக படித்த மருத்துவர்களிடம் மட்டுமே அறிவுரையை கேட்க வேண்டும்.
ஜாதகம் மற்றும் ஜோசியத்தை நம்பாதீர்கள். மருத்துவர்களை நம்புங்கள் என்றும் கேட்டுக் கொண்டார்.
தற்போது நம் நாட்டில் அனைவரும் மருத்துவர்கள் என நினைத்து மருத்துவம் பார்த்து வருகிறார்கள்.
தற்போது உள்ள தொழில்நுட்பம் 1991ம் ஆண்டில் இல்லை அப்போது இருந்திருந்தால் எனது தந்தையை காப்பாற்றியிருக்கலாம் என்றும் பேசினார்.
உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, டிவிட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் செயலியை பதிவிறக்குங்கள்!!
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR