என்.எல்.சி விவகாரம் - பிரதமருக்கு முதலமைச்சர் கடிதம்
என்.எல்.சி பணியாளர் தேர்வு விவகாரத்தில் பிரதமர் நரேந்திர மோடி தமிழகத்திற்கு சாதகமான முடிவெடுக்க வேண்டுமென்று முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளார்.
இதுதொடர்பாக முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் பிரதமர் மோடிக்கு எழுதியிருக்கும் கடிதத்தில், “தமிழகத்தில் உள்ள இந்திய அரசின் நவரத்னா பொதுத்துறை நிறுவனமான என்.எல்.சி திட்டங்கள் மற்றும் சுரங்கங்களுக்கு நிலம் வழங்கிய குடும்பங்களைச் சேர்ந்த உள்ளூர் விண்ணப்பதாரர்களுக்கு உரிய முக்கியத்துவம் அளிக்கும் சிறப்புத் தேர்வின் மூலம் நியமிக்கப்பட வேண்டும். கேட் (GATE) தேர்வு மதிப்பெண் அடிப்படையில் பயிற்சிப் பட்டதாரி பொறியாளர்களை நியமிக்கக் கூடாது எனவும் உத்தரவிட வேண்டும் என்று 2022 ஆம் ஆண்டு மே மாதம் 5 ஆம் தேதி, ஏற்கெனவே எழுதிய கடிதத்தில் கூறியிருந்தேன்.
மேலும் படிக்க | ஊரெல்லாம் விக்குது மதுபானம், ஆனால் டெண்டரை காணோம் - பார் உரிமையாளர்கள் புலம்பல்
தமிழ்நாட்டைச் சேர்ந்த விண்ணப்பதாரர்களுக்கு பயிற்சிப் பட்டதாரி பொறியாளர் பணிக்குத் தேர்வு செய்வதில் முன்னுரிமை அளிக்க வேண்டும் என்ற கோரிக்கையில் அழுத்தமான நியாயம் இருப்பதால், இந்த விஷயத்தில் பிரதமர் தலையிட்டு விரைவில் சாதகமானதாக முடிவு எடுக்க வேண்டும்” என குறிப்பிட்டுள்ளார்.
முன்னதாக, என்.எல்.சி-யின் வேலைவாய்ப்பில், தமிழர்களை முற்றிலுமாகப் புறக்கணித்துவிட்டு 299 பொறியாளர் பணியிடங்களுக்கும் வட மாநிலத்தவர்களையே தேர்ந்தெடுத்திருக்கும் சம்பவம் பெரும் அதிர்ச்சியையும், கடும் கொந்தளிப்பையும் ஏற்படுத்தியது.
மேலும் படிக்க | பிரதமர் மோடியின் ஆசையை நிறைவேற்றிய முதலமைச்சர் ஸ்டாலின் - ஆனால் ஒரு ட்விஸ்ட்
இதனையடுத்து தமிழகத்தைச் சேர்ந்த அரசியல் தலைவர்கள் உள்ளிட்டோ ஒன்றிய அரசுக்கு தங்களது கடுமையான எதிர்ப்பை தெரிவித்தது குறிப்பிடத்தக்கது.
மேலும் படிக்க | எந்தெந்த மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு?... வானிலை ஆய்வு மையம் அறிவிப்பு
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ