பல்லாவரத்தில் உள்ள தனியார் பல்கலைக்கழக மாணவி ஒருவர் தற்கொலை செய்து இறந்திருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

சென்னை பல்லாவரத்தில் பிரபலமான தனியார் பல்கலைக்கழகம் இயங்கி வருகிறது. இந்த பல்கலையில் இரண்டாம் ஆண்டு பொருளாதாரம் படிக்கும் மாணவி ஒருவர் அவருடைய தாம்பரம் வீட்டில் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. 


மேலும் படிக்க | ‘நடுநிலை’ என்ற ஒன்று இல்லை! - இயக்குநர் வெற்றிமாறன்


தலைமை ஆசிரியர் ஆடை குறித்து ஆபாசமாக விமர்சித்ததால் மாணவி தற்கொலை செய்து கொண்டதாக முதற்கட்ட தகவல் கிடைத்துள்ளது. கல்லூரியில் ஜீன்ஸ், லெக்கின்ஸ் உள்ளிட்ட ஆடைகளை அணியக் கூடாது என்ற சட்டம் இருந்து மாணவி ஜீன்ஸ் அணிந்து வந்ததாக சொல்லப்படுகிறது. இதனை தலைமை பேராசிரியர் கண்டித்துள்ளதால் மாணவி தற்கொலை செய்து கொண்டதாக தெரிகிறது.


ஆனால் பல்கலைக்கழக நிர்வாகம் அந்த தகவலை மறுத்துள்ளது. காதல் விவகாரம் காரணமாக மாணவியின் பெற்றோர் திட்டியதாகவும் அதனால் மாணவி மனமுடைந்து இருந்ததாகவும் கல்லூரி நிர்வாகம் தெரிவித்துள்ளது. இந்த அழுத்தம் தாங்க முடியாததால் மாணவி தற்கொலை செய்து கொண்டதாகவும் நிர்வாகம் தெரிவித்துள்ளது. இந்த விவகாரம் தொடர்பாக காவல்துறை வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


மேலும் படிக்க | மாணவர்களை அவமதித்தால்..! எச்சரிக்கும் வகையில் நடவடிக்கை


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.


முகநூலில் @ZEETamilNews, டிவிட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!


Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR