தனது கருத்தை நேர்மையாக பதிவு செய்வதில் எந்த அச்சமும் இல்லாதவர் வெற்றிமாறன். கொஞ்ச நாட்களுக்கு முன்பு துணை இயக்குநர்கள் உடனான உரையாடலில் பெண்களின் ஆடை தொடர்பாக ஒரு விவாதம் நடைபெற்றது. அதில், ஒரு ஆண் நபர் எழுந்து வெற்றிமாறனிடம் ஒரு கேள்வி எழுப்பினார். ‘பெண்கள் அணியும் அரைகுறை ஆடைகளால் வளரும் குழந்தைகள் அதைப்பார்த்து கெட்டுப்போய்விடாதா’ என்று கேள்வி எழுப்பினார். இதற்குப் பதில் அளித்த வெற்றிமாறன், ‘அவர்கள் எந்த ஆடை அணிந்தாலும் உங்களுக்கென்ன பிரச்சனை ; அது அவர்களின் தேர்வு ; குழந்தைகள் கெட்டுப்போய்விடும் என்று நீங்கள் அச்சப்படும் இதுபோன்ற காட்சிகளைப் பார்த்துத்தான் குழந்தைகள் வளரட்டுமே.! என்ன ஆகிவிடப்போகிறது இப்போது.?!. உடை விவகாரத்தில் இப்படி நினைக்க கூடாது. உடை சார்ந்த பார்வை நம்ம யார்னு சொல்றது ; நாம எங்கிருந்து வரோம்னு சொல்றது. பெண்கள் அவர்களின் வசதிக்கு உடை அணிகிறார்கள். நமக்கு அது டிஸ்டர்பே பண்ணக்கூடாது. ஒருவேள நமக்கு அது டிஸ்டர்ப்பே பண்ணாலும். அத தவிர்க்கணுமே தவிர, விமர்சனம் பண்ணக்கூடாது’ என்று பேசினார். இந்தக் காணொலி இணையதளத்தில் வைரலானது. பல்வேறு இடங்களில் மிகச் சிக்கலான விஷயங்கள் குறித்து வெற்றிமாறன் தைரியமாக தனது கருத்தை முன்வைத்துப் பேசி வரும் நிலையில், தற்போது வலதுசாரி, இடதுசாரி தத்துவங்கள் குறித்து கேரளாவில் பேசியுள்ளதும் இணையத்தில் விவாதத்தைக் கிளப்பியுள்ளது.
மேலும் படிக்க | விஜய் - வெற்றிமாறன் கூட்டணி எப்போது? சஸ்பென்ஸ் உடைத்த ஜீவி பிரகாஷ்!
கேரளாவில் சர்வதேச திரைப்பட விழாவில் கலந்துகொண்ட வெற்றிமாறன், ‘நடுநிலைக்’ குறித்து பேசியுள்ளார். அதாவது, ‘தற்போது உலகம் பல்வேறு விவகாரங்களால் பிளவு பட்டுக்கிடக்கிறது. உங்கள் பாதையை நீங்கள்தான் தேர்வு செய்ய வேண்டும். அந்தப் பாதை இடது அல்லது வலதாக இருக்கலாம். ஆனால் நடுநிலை என்ற ஒன்று இல்லை. ஒருவேளை நீங்கள் நடுநிலையை தேர்ந்தெடுத்தால் நீங்கள் வலதுசாரியே.!’ என்று தெரிவித்துள்ளார். இதையடுத்து, வெற்றிமாறனின் இந்த கருத்தை முன்வைத்து வலதுசாரி, இடதுசாரி தத்துவ உரையாடல்கள் கமெண்டுகளில் குவிந்து வருகிறது.
உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, டிவிட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR