சென்ட்ரல் ரயில் நிலையத்தில் இருந்து திருப்பதி செல்லும் சப்தகிரி ரயிலில் மாநில கல்லூரி மாணவர்கள் 20க்கும் மேற்பட்டோர் நேற்று ஏறினர். இதேபோல், சென்னை சென்ட்ரலில் இருந்து அரக்கோணம் சென்றுகொண்டிருந்த ரயிலில் பச்சையப்பன் கல்லூரி மாணவர்கள் 20க்கும் மேற்பட்டோர் பயணம் செய்தனர். இந்த இரு ரயில்களும் ஒரே திசையில் சென்று கொண்டிருந்தன. அப்போது இவர்கள் ஒருவரை ஒருவர் கிண்டலடித்து சென்றுள்ளனர்.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

பெரம்பூர் ரயில் நிலையம் தாண்டியதும் மாநில கல்லூரி மாணவர்கள் திருப்பதி எக்ஸ்பிரஸ் ரயிலில் பயணிகளுக்கு இடையூறு செய்து கொண்டிருந்தனர். பொறுமையிழந்த பயணிகள் அபாய சங்கிலியை பிடித்து இழுத்தனர். இதையடுத்து ரயில் நிறுத்தப்பட்டது.


மேலும் படிக்க | 27 ஆண்டுகளுக்கும் மேலாக சாராய சாம்ராஜ்யத்தை நடத்தி வரும் மகேஸ்வரி..!


அதன்படி திருப்பதி எக்ஸ்பிரஸ் ரயிலில் இருந்து கீழே இறங்கிய மாநில கல்லூரி மாணவர்கள் பச்சையப்பன் கல்லூரி மாணவர்கள் சென்ற மின்சார ரயில் மீது கற்களை வீசி தாக்குதல் நடத்தினர். இதையடுத்து அரக்கோணம் சென்ற மின்சார ரயிலும் நிறுத்தப்பட்டது. பின்னர் மாநில கல்லூரி மாணவர்கள் பச்சையப்பன் கல்லூரி மாணவர்கள் மீது தாக்குதல் நடத்தத் தொடங்கினர். பதிலுக்கு பச்சையப்பன் கல்லூரி மாணவர்களும் தாக்க முற்பட்டனர்.


அப்போது அந்தப் பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்த செம்பியம் போலீசார், மாநில கல்லூரி மாணவர்கள் 15 பேரை பிடித்து தற்போது காவல் நிலையத்தில் வைத்து விசாரணை நடத்தி வருகின்றனர். இதுதொடர்பாக சம்பந்தப்பட்ட கல்லூரி நிர்வாகங்களுக்கும் மாணவர்களின் பெற்றோர்களுக்கும் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது். இந்த சம்பவம் காரணமாக சிறிது நேரம் நின்ற இரண்டு ரயில்களும் பின்னர் புறப்பட்டன.



சம்பவம் குறித்து ரயில்வே போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். இதனால் இரண்டு ரயில்கள் பயணம் செய்த பயணிகளும் பெரும் பீதியடைந்தனர். 2 ரயில்களும் காலதாமதமாக சென்றது. இதனால் பெரம்பூர் ரயில் நிலையம் அருகே பெரும் பரபரப்பு காணப்பட்டது. மேலும் இந்த இரு கல்லூரி மாணவர்கள் மோதிக்கொண்ட வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி வருகின்றது.


மேலும் படிக்க | மாணவர்களை மயக்கி ஆசிரியை உல்லாசம் - கசிந்த வீடியோ..!


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.


முகநூலில் @ZEETamilNews, டிவிட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!


Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR