கொரோனா வைரஸ் கோவிட் -19 பரவுவதைத் தடுக்க தமிழகம் முழுவதும் இன்று தளர்வு இல்லா முழு ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்படுகிறது. கொரோனாவின் தாக்கம் நமது நாட்டில் நாளுக்கு நாள் அதிகரித்துக்கொண்டே வருகிறது. தமிழகத்திலும் அதன் தாக்கம் காணப்பட்டு வருகிறது. 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

கொரோனா வைரஸ் கோவிட் -19 பரவுவதைத் தடுக்க நாடு முழுவதும் கடந்த மார்ச் 25-ஆம் தேதி முதல் ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டு வருகிறது.


 


READ | கோவிட் நோயாளிகளுக்கு சிக்கன் பிரியாணி: ரெஸ்டாரண்டுகளிலிருந்து வரும் உணவு


இந்நிலையில் சென்னை (Chennai Lockdown) , செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவள்ளூர் மாவட்டங்களில் கொரோனா தாக்கம் அதிகரித்து காணப்பட்டதால் முழு ஊரடங்கு உத்தரவு ஜூன் 31-ஆம் தேதி வரை அமல்படுத்தப்பட்டது. இந்த காலக்கட்டத்தில் ஞாயிற்றுக்கிழமைகளில் மேற்கூறப்பட்ட 4 மாவட்டங்களிலும் தளர்வுகள் இல்லாத முழு ஊரடங்கு உத்தரவு கடைபிடிக்கப்பட்டது. பின்னர், ஜூலை மாதமும் 1-ஆம் தேதி முதல் 5-ஆம் தேதி வரை சென்னை (Chennai Lockdown) , செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவள்ளூர் மாவட்டங்களில் முழு ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டது.


இந்த நிலையில், மீண்டும் தமிழகம் முழுவதும் ஜூலை 1-ஆம் தேதி முதல் 31-ஆம் தேதி வரை ஊரடங்கு உத்தரவு அறிவிக்கப்பட்டது. இந்த காலகட்டத்தில் வரும் அனைத்து ஞாயிற்றுக்கிழமைகளிலும் தளர்வு இல்லாத ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்படுவதாகவும் அறிவிக்கப்பட்டது. அதன்படி இன்று (ஞாயிற்றுக்கிழமை) தமிழகம் முழுவதும் தளர்வு இல்லாத முழு ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்படுகிறது. 


 


READ | வில்லன் கொரோனாவுடன் மருத்துவமனையில் போராடும் நடிகர் அமிதாப் பச்சன்


இதற்காக போலீசார் தீவிர பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். மேலும் “ட்ரோன்” காமிரா மூலம்  அனைத்து தெருக்களும் கண்காணிக்கப்படுகிறது.


இதற்கிடையில் நேற்றைய புள்ளிவிரவம் படி, தமிழகத்தில் மேலும் 3,965 பேருக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. தமிழகத்தில் கொரோனா பாதித்தவர்களின் மொத்த எண்ணிக்கை  1,34,226 ஆக உயர்ந்துள்ளது. கொரோனா பாதிப்பால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 1,898 ஆக உயர்ந்துள்ளது.