வில்லன் கொரோனாவுடன் மருத்துவமனையில் போராடும் நடிகர் அமிதாப் பச்சன்

நடிகர் அமிதாப் பச்சன் மற்றும் அவரது மகன் அபிஷேக் பச்சன் கொரோனா தொற்று பாதித்து மருத்துவமனையில் அனுமதி

Written by - Malathi Tamilselvan | Last Updated : Jul 13, 2020, 03:20 PM IST
  • பாலிவுட் நடிகர் அமிதாப் பச்சன் கொரோனா நோய்தொற்றால் பாதிக்கப்பட்டு மருத்துமனையில் அனுமதி
  • அமிதாப்பின் மகனும், நடிகருமான அபிஷேக் பச்சனுக்கும் கொரோனா பாதிப்பு உறுதி
  • அபிஷேக் பச்சனின் மனைவி, உலக அழகி ஐஸ்வர்யா ராய்க்கும் கொரோனா பரிசோதனை செய்யப்பட்டது
  • அமிதாப்பின் மனைவி ஜெயாபச்சனுக்கும் கொரோனா பரிசோதனை செய்யப்பட்டுள்ளது
  • குடும்ப உறுப்பினர்கள் மற்றும் பணியாளர்களுக்கும் பரிசோதனை செய்யப்பட்டுள்ளன, முடிவுகள் இன்று வந்துவிடும்
வில்லன் கொரோனாவுடன் மருத்துவமனையில் போராடும் நடிகர் அமிதாப் பச்சன் title=

புதுடெல்லி: அமிதாப் பச்சனுக்கு மட்டுமல்ல, அவரது மகன் அபிஷேக் பச்சனுக்கும் கொரோனா தொற்று இருப்பது கண்டறியப்பட்டுள்ளது

நடிகர் அமிதாப் பச்சனுக்கு கொரோனா வைரஸ் தொற்று ஏற்பட்டுள்ளது. தனக்கு கொரோனா பரிசோதனை  முடிவுகள் பாஸிட்வ் என்று அமிதாப் பச்சன் ட்வீட் செய்து தெரிவித்தார். சம்பந்தப்பட்ட அனைத்து அதிகாரிகளுக்கும் மருத்துவமனை தகவல் அளித்துள்ளது. குடும்பத்தினர் மற்றும் ஊழியர்களும் பரிசோதிக்கப்பட்டுள்ளனர் என்று அமிதாப் தெரிவித்துள்ளார்.
கடந்த 10 நாட்களாக தன்னுடன் தொடர்பு கொண்டவர்களும், கொரோனா பரிசோதனையை செய்துக் கொள்ளுமாறு அவர் கேட்டுக்கொண்டுள்ளார். 

அமிதாப் பச்சனும், கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ள அவரது மகனும் நடிகருமான அபிஷேக் பச்சனும் மும்பையில் உள்ள நானாவதி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

Also Read | உலக அளவில் கொரோனா பாதிப்பு நிலவரம் புதுப்பிப்பு

77 வயதான அமிதாப் பச்சன் சுமார் ஐம்பது ஆண்டுகளாக திரையுலகில் கோலோச்சி வருகிறார். இதுவரை 200க்கும் மேற்பட்ட திரைப்படங்களில் நடித்துள்ள அவர் பாலிவுட்டின் சூப்பர் ஸ்டார், பிக் பி என்று அழைக்கப்படுகிறார்.

நான்கு தேசிய திரைப்பட விருதுகள் மற்றும் 15 பிலிம்பேர் விருதுகள் உட்பட பல தேசிய, சர்வதேச விருதுகளை வென்றுள்ளார். திரைப்படத் துறைக்கு அவரின் பங்களிப்புக்காக பிரான்ஸ் நாட்டின் மிக உயர்ந்த சிவில் விருதான லெஜியன் ஆப் ஹானர் (Legion of Honor) விருதை வழங்கி அந்நாடு சிறப்பு செய்துள்ளது.  

கொரோனா பாதிப்பு பரவலான பிறகு, கொரோனா வைரஸுக்கு எதிரான போரில், அரசின் அறிவுறுத்தல்களையும், விழிப்புணர்வையும் மக்களுக்கு எடுத்துச் சொல்லி விழிப்புணர்வூட்டும் உன்னதமான பணியில் ஈடுபட்டிருந்த அமிதாப் பச்சனுக்கும் அவரது மகனுக்கும் கோவிட்-19 நோய் ஏற்பட்டிருப்பது அனைவருக்கும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

அமிதாப் பச்சன் மற்றும் அபிஷேக் பச்சன் ஆகியோரின் பரிசோதனை அறிக்கைகள் மட்டுமே வந்துள்ளன என்று மகாராஷ்டிரா மாநில சுகாதார அமைச்சர் ராஜேஷ் டோப் Zee News இடம் தெரிவித்தார்.  இவர்கள் இருவரைத் தவிர பச்சன் குடும்பத்தின் மீதமுள்ள உறுப்பினர்கள், பணியாளர்கள் மற்றும் வாகன ஓட்டுநர்களுக்கும் கொரோனா பரிசோதனை நானாவதி மருத்துவமனையில் செய்யப்பட்டுள்ளது. அவர்களின் அறிக்கை இன்று வந்துவிடும்.

அமிதாப் பச்சனுக்கு கொரொனா பாதிப்பு என்ற செய்தி பரவியவுடன், பாலிவுட், கோலிவுட், டோலிவுட் மட்டுமல்ல, உலகம் முழுவதிலும் உள்ள பிக் பி-யின் ரசிகர்கள் அவர் விரைவில் குணமடைய வேண்டும் என்று வேண்டுகின்றனர். அமிதாப் பச்சனின் குடும்பத்தினர் வேறு யாருக்கும் கொரோனா தொற்று இருக்கக்கூடாதென்றும், தந்தையும் மகனும் விரைவில் குணமடைந்து வீடு திரும்ப வேண்டும் என்றும் ZEE குடும்பம் பிரார்த்திகிறது.

Also Read | கொரோனா வைரஸ் சிகிச்சைக்கான முதல் மருந்து... விரைவில் இந்தியாவில்!

அமிதாப் பச்சனுக்கு கோவிட்-19 பாதிப்பு இருப்பதை அறிந்த மத்திய சுகாதார அமைச்சர் டாக்டர் ஹர்ஷ் வர்தன், “விரைவில் நீங்கள் குணமடைந்து திரும்ப வேண்டும் என்று நாங்கள் அனைவரும் வேண்டுகிறோம்” என்று மத்திய அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர் தனது டிவிட்டர் செய்தியில் தெரிவித்துள்ளார்.

நானும், அப்பாவும் கொரோனா நோய்த்தொற்றின் லேசான அறிகுறிகள் இருப்பதால் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறோம் என்று அபிஷேக் பச்சன் தெரிவித்துள்ளார்.

”உங்கள் மன உறுதியால் வாழ்க்கையில் உள்ள ஒவ்வொரு சிரமத்தையும், ஒவ்வொரு தடையையும் நீங்கள் வென்றுள்ளீர்கள். கொரோனாவுக்கு எதிரான போரில் நீங்கள் சக்தியுடன் போராடி, பாதுகாப்பாகவும் ஆரோக்கியமாகவும் வீடு திரும்புவீர்கள் என்று நானும் முழு தேசமும் நம்பிக்கை கொண்டுள்ளோம். நாங்கள் அனைவரும் உங்களுடன் எங்கள் பிரார்த்தனைகளை வைத்திருக்கிறோம்” என்று நடிகர் அனுபம் கெர் தெரிவித்துள்ளார்.

Also Read | கொரோனா நோயாளிகளுக்கான சிகிச்சையில் Itolizumab ஊசி மருந்து பலனளிக்குமா...
சையத் ஷாஹனாவாஸ் உசேன், நடிகர் சஞ்சய் தத், திவ்யா தத்தா, சோனம் கபூர், நேஹா துபியா, யாமி கெளதம், ரவீனா டாண்டன் உட்பட பலரும் பச்சன் விரைவில் ஆரோக்கியத்துடன் வீடு திரும்ப வேண்டும் என்று வாழ்த்தினார்கள்.

அமிதாப் பச்சனின் சமீபத்திய திரைப்படமான 'குலாபோ சீதாபோ'வில் ஆயுஷ்மான் குரானாவுடன் நடித்திருந்தார். முன்னதாக இந்த படம் பெரிய திரையில் வெளியிடப்பட இருந்தது, ஆனால் பின்னர் கொரோனா தொற்றுநோய் காரணமாக, இது அமேசான் பிரைம் வீடியோவில் வெளியிடப்பட்டது. இந்த நகைச்சுவை திரைப்படத்தை ஷூஜித் சர்க்கார் தயாரித்தார்.

செஹ்ரா, பிரம்மஸ்திரா மற்றும் ஜூண்ட் என சில திரைப்படங்களில் அமிதாப் பச்சன் நடித்துக் கொண்டிருந்தார்.  இதைத் தவிர, கோன் பனேகா கரோட்பதியின் 12 வது சீசனையும் அமிதாப் நடத்துவதாக திட்டமிடப்பட்டுள்ளது. இந்த நிகழ்ச்சிக்கான முதல்கட்ட தேர்வு மே மாதம் நடைபெற்றது

Trending News