அடுத்த 3 நாட்களில் கொரோனா பாதிப்பின் உண்மை நிலைமை தெரியவரும்: அமைச்சர் மா.சுப்பிரமணியம்
பொங்கல் பண்டிகைக்கு சொந்த ஊர் சென்றவர்கள் சென்னை திரும்பி உள்ள நிலையில் சென்னையில் அடுத்த 3 நாட்களில் கொரோனா பாதிப்பின் உண்மை நிலைமை தெரியவரும் என்றார் அமைச்சர் மா. சுப்பிரமணியன்.
தமிழகத்தில் சமீபத்திய கொரோனா தொற்று நிலை பற்றி சுகாதார அமைச்சர் மா. சுப்பிரமணியன் சில முக்கிய அறிவிப்புகளை வெளியிட்டுள்ளார்.
கொரோனா இறப்பு விகிதம் அதிகரிக்கவில்லை, குறைவாகவே உள்ளது என்று அமைச்சர் கூறியுள்ளார். ஒமிக்ரான் மற்றும் டெல்டாவால் ஏற்படும் இறப்பு எண்ணிக்கையும் குறைவாகவே உள்ளது என்றார் அவர்.
பொங்கல் பண்டிகைக்கு சொந்த ஊர் சென்றவர்கள் சென்னை திரும்பி உள்ள நிலையில் சென்னையில் அடுத்த 3 நாட்களில் கொரோனா பாதிப்பின் (Coronavirus Numbers) உண்மை நிலைமை தெரியவரும் என்பதையும் அமைச்சர் தெளிவுபடுத்தினார்.
ஊரடங்கு (Lockdown) பற்றி தெரிவித்த அமைச்சர், தொற்றின் எண்ணிக்கை தொடர்ந்து குறையும் பட்சத்தில் ஊரடங்கு தேவையில்லை என்றார்.
கொரோனா தொற்று பரிசோதனை குறித்து பேசிய அவர் கொரோனா பரிசோதனை மேற்கொள்ளும் நபர்கள் அவர்களை தொடர்பு கொள்ள உண்மையான முகவரி, தொலைபேசி எண்ணை அளிக்க வேண்டும் என்றார். தவறான தகவல்களை அளிப்பதற்கான அவசியம் இல்லை என்பதையும் தெளிபவு படுத்தினார் அமைச்சர்.
ALSO READ | Corona: கொரோனாவுக்கும் ஒமிக்ரானுக்கும் தொடர்பு இல்லை! இது வேறொரு தொற்று!
இதற்கிடையில், மத்திய சுகாதார அமைச்சர் மன்சுக் மாண்டவியா செவ்வாயன்று ஒன்பது மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களின் சுகாதார அமைச்சர்களுடன் ஒரு மெய்நிகர் சந்திப்பை நடத்தவுள்ளார்.
ஜம்மு-காஷ்மீர், இமாச்சலப் பிரதேசம், பஞ்சாப், ஹரியானா, உத்தரகாண்ட், டெல்லி, லடாக், உத்தரப் பிரதேசம் மற்றும் சண்டிகர் ஆகிய மாநிலங்களின் சுகாதார அமைச்சர்களுடன் மாண்டவியா கலந்துரையாடுவார் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த கூட்டத்தில், தற்போதைய கோவிட் நிலைமை மற்றும் இந்த மாநிலங்களில் தொற்றுநோயைக் கட்டுப்படுத்துவதற்கும் நிர்வகிப்பதற்கும் பொது சுகாதாரத் தயார்நிலை குறித்து விவாதிக்கப்படும்.
முன்னதாக ஜனவரி 10 ஆம் தேதி, மாண்டவியா மகாராஷ்டிரா, மத்தியப் பிரதேசம், ராஜஸ்தான், குஜராத், கோவா, தாத்ரா & நாக்ரா ஹவேலி மற்றும் டாமன் & டியுவின் சுகாதார அமைச்சர்கள் மற்றும் மூத்த அதிகாரிகளுடன் கலந்துரையாடி அப்பகுதிகளின் தொற்று நிலையை கண்டறிந்தார்.
நாடு முழுவதும் உள்ள சுகாதார உள்கட்டமைப்பை வலுப்படுத்த ECRP-II இன் கீழ் வழங்கப்பட்ட நிதியை திறமையாகப் பயன்படுத்துமாறு மாண்டவியா இந்த மாநிலங்களுக்குக் கூறியதுடன், உள்கட்டமைப்பின் அடிப்படையில் வலுவான ஏற்பாடுகளைச் செய்யுமாறு மாநிலங்களை வலியுறுத்தினார்.
இதற்கிடையில், திங்களன்று இந்தியாவில் கோவிட் 19 (Covid-19) நோய்த்திற்றால் புதிதாக பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கையில் கணிசமான சரிவு ஏற்பட்டது. நேற்று 3,06,064 பேர் புதிதாக பாதிக்கப்பட்டனர். கடந்த 24 மணி நேரத்தில் 439 பேர் இறந்தனர். இதன் மூலம் நாட்டின் ஒட்டுமொத்த கோவிட் இறப்பு எண்ணிக்கை 4,89,848 ஆக உயர்ந்துள்ளது.
ALSO READ | Omicron Alert: இவற்றின் காரணமாகவும் தொற்று பரவலாம், அதிகபட்ச கவனம் தேவை
உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews மற்றும் டிவிட்டரில் @ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR