Crime: குவாட்டருக்காக ஒரு கத்திக்குத்து; குடிமகனின் வெறிச்செயல்
கோவை கத்திக்குத்து சம்பவம் தொடர்பாக ரத்தினபுரி காவல் நிலைய போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
கோவை காந்திபுரம் 100 அடி சாலை நாயுடு லேயவுட் முதல் வீதி பகுதியை சேர்ந்தவர் குணா. தனியார் பைனான்ஸ் நிறுவனத்தில் பணியாற்றும் இவரும் அதே பகுதியைச் சேர்ந்த தற்காலிக ஓட்டுநரான சந்தோஷ் என்பவரும் நேற்றிரவு காந்திபுரம் பகுதியில் உள்ள டாஸ்மாக் மதுபானக் கடையில் ஒன்றாக மது அருந்தியுள்ளனர்.
பின்னர் 10 மணிக்கு டாஸ்மாக் பார் மூடியதால் அங்கிருந்து மீண்டும் மது வாங்கி வந்து காந்திபுரம் பகுதியில் வைத்து அருந்திய போது இருவருக்கும் இடையே திடீரென வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது.
இந்த வாக்குவாதத்தில் குணா திடீரென தான் மறைத்து வைத்திருந்த கத்தியை எடுத்து சந்தோஷை சரமாரியாக குத்தி தாக்கியுள்ளார். இதனிடையே அவ்வழியே ரோந்து பணியில் ஈடுபட்டிருந்த ரத்தினபுரி காவல் நிலைய தலைமைக் காவலர் சுகந்த ராஜா மற்றும் முத்துப்பாண்டி ஆகியோர் சப்தம் கேட்டு விரைந்து சென்று இருவரையும் விலக்கி கத்தி குத்து காயங்களுடன் இருந்த சந்தோஷ் மற்றும் லேசான காயங்களுடன் இருந்த குணா ஆகிய இருவரையும் கோவை அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர்.
மேலும் படிக்க | கடத்தப்பட்ட 3 மணிநேரத்தில் மீட்கப்பட்ட பள்ளி மாணவி; அசத்திய சென்னை போலீஸ்
பின்னர் இந்த கத்திக்குத்து சம்பவம் தொடர்பாக ரத்தினபுரி காவல் நிலைய போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். நள்ளிரவு நேரத்தில் சாலையில் வைத்து ஒருவரையொருவர் கத்தியால் குத்திக் கொண்ட சம்பவம் காந்திபுரம் பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
மேலும் படிக்க | மதுபோதையில் தாயிடம் தகராறு - அண்ணனை தீர்த்துக்கட்டிய தம்பிகள்!
மேலும் படிக்க | போதையில் போலீசையே கல்லால் அடித்த பெண் -வீடியோ!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துக்களைப் பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, டிவிட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR