சிதம்பரம் அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தின் கீழ் இயங்கி வந்த ராஜா முத்தையா மருத்துவக் கல்லூரி கடலூர் அரசு மருத்துவக் கல்லூரியாக மாற்றம் செய்யப்பட்டு இயங்கி வருகிறது. இந்த கல்லூரியில் தற்போது முதலாமாண்டு சேர்ந்த மாணவர்களுக்கு அரசு கல்லூரிகளைப் போன்று கட்டணம் வசூலிக்கப்பட்டுள்ளது. இரண்டாமாண்டு, மூன்றாமாண்டு உள்ளிட்ட மாணவர்களுக்கு ரூ 4 லட்சம்  கட்டணமாக வசூலிக்கப்படுகிறது.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING


இந்த கட்டணத்தை குறைக்க வலியுறுத்தி இரண்டாமாண்டு, மூன்றாமாண்டு உள்ளிட்ட சுமார் 300க்கும் மேற்பட்ட மாணவர்கள் கடந்த 5 தினங்களாக வகுப்புகளை புறக்கணித்து தொடர் போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில் இன்று சிதம்பரம் அண்ணாமலை பல்கலைக்கழக பதிவாளர் டாக்டர் சீத்தாராமன் வெளியிட்டுள்ள ஒரு அறிவிப்பில் சிதம்பரம் அண்ணாமலைப் பல்கலைக்கழக மருத்துவக் கல்லூரியில் இளநிலை படிக்கும் முதலாமாண்டு மற்றும் பயிற்சி மருத்துவர்களைத் தவிர மற்ற மாணவர்களுக்கு காலவரையற்ற விடுமுறை அறிவிக்கப்படுகிறது. மேலும் மாலை 4 மணிக்குள் விடுதிகளையும் காலி செய்ய வேண்டும் என உத்தரவிட்டு இருந்தார்.


மேலும் படிக்க | தனியார் சொகுசு ஓட்டல் அதிபரை கடத்திய கும்பல் போலீசில் சிக்கியது எப்படி ?



மேலும் படிக்க | மனிதர்கள் ரத்தத்தில் பிளாஸ்டிக் நுண்துகள்கள் - அமைச்சர் மெய்யநாதன் வருத்தம்


இந்நிலையில் இந்த அறிவிப்பைக் கேட்ட பிறகும் மாணவர்கள் கலைந்து செல்லாமல் போராட்டப் பந்திலேயே போராட்டத்தை தொடர்ந்து வருகின்றனர். இதுபற்றி கூறிய மாணவர்கள், அரசு கல்லூரிகளைப்போல இந்த கல்லூரியிலும் அரசு கட்டணம் வேண்டும் என்றுதான் போராடி வருகிறோம். நாங்கள் வேறு என்ன பாவம் செய்தோம். தற்போது பல்கலைக்கழக நிர்வாகம் கல்லூரிக்கு காலவரையற்ற விடுமுறை அறிவித்து விடுதிகளையும் காலி செய்ய உத்தரவிட்டுள்ளது. இனி உணவு, குடிநீர், இருப்பிடத்திற்கு எங்கே செல்வோம் எனக்கூறியவர்கள், இதுகுறித்து தமிழக முதலமைச்சர் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். எங்களது கோரிக்கை நிறைவேறும் வரை போராட்டத்தை கைவிட மாட்டோம் எனவும் தெரிவித்தனர்.


மேலும் படிக்க | போலீஸ் தாக்கியதால் ரயில் முன் பாய்ந்து இளைஞர் தற்கொலை செய்துகொண்டதாக புகார்


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துகொள்ளவும், உங்கள் கருத்துகளை பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைதளங்களில் எங்களை பின்தொடருங்கள்.


ஃபேஸ்புக்கில் @ZEETamilNews, டிவிட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!


Android Link - https://bit.ly/3hDyh4G


Apple Link - https://apple.co/3loQYeR