இவ்வளவு விளக்கத்திற்கு பிறகும் புரியவில்லை என்றால் என்ன செய்ய.. பாமகவுக்கு முதல்வர் பதில்
Caste Census In Tamil Nadu: ஜாதி வாரி கணக்கெடுப்பு தொடர்பாக பா.ம.க சட்டமன்ற உறுப்பினர்கள் பேரவையிலிருந்து வெளிநடப்பு செய்தனர். அதற்கு பதில் அளித்தா முதலமைச்சர், `நாங்கள் ஒன்றும் எதிரிகள் அல்ல, சாதகமாக தான் இருக்கிறோம்` என்றார்.
தமிழக சட்டசபை செய்திகள்: சட்டப்பேரவையில் சாதிவாரி கணக்கெடுப்பு நடத்தாததை கண்டித்தும், 10.5 விழுகாடு வன்னியர் இட ஒதுக்கீட்டை நடைமுறை படுத்தாததை கண்டித்து பா.ம.க சட்டமன்ற உறுப்பினர்கள் பேரவையிலிருந்து வெளிநடப்பு செய்தனர்.
சாதிவாரி கணக்கெடுப்புக்கு எதிரானவர்கள் அல்ல -முதல்வர்
அப்போது அதற்கு பதிலளித்து முதலமைச்சர் மு.க. ஸ்டாலின், "சாதிவாரி கணக்கெடுப்பு தொடர்பாக அவையில் பலமுறை பேசப்பட்டு உள்ளது. பட்ஜெட்டிலும் அது குறித்து குறிப்பிடப்பட்டு இருக்கிறது. சட்டமன்றத்திலும் பதில் கூறியுள்ளோம். அதையும் தாண்டி பாமக நிறுவனர் மருத்துவர் ராமதாஸ், அன்புமணி ராமதாஸ் (எம்.பி), வேல்முருகன், ஜி.கே.மணி ஆகியோர் நேரில் சந்தித்து இந்த பிரச்சனை தொடர்பாக கேட்டதற்கு விளக்கமாக பதில் கொடுத்துள்ளோம். நாங்கள் ஒன்றும் எதிரிகள் அல்ல, சாதகமாக தான் இருக்கிறோம். இவ்வளவு விளக்கத்திற்கு பிறகும் நீங்கள் எந்த முடிவு எடுத்தாலும் அதற்கு எதுவும் சொல்லுவதற்கு இல்லை" எனப் பதில் அளித்தார்.
சட்டசபை பட்ஜெட் மீதான விவாதம்
தமிழ்நாடு சட்டசபை பட்ஜெட் கூட்டத் தொடர் இறுதி நாளான இன்று, தமிழக சட்டசபையில் தாக்கலான பொது பட்ஜெட் மற்றும் வேளாண் பட்ஜெட் மீதான விவாதங்கள் நடந்து வருகிறது.
தமிழக பட்ஜெட் எப்பொழுது தாக்கல் செய்யப்பட்டது?
இந்த ஆண்டுக்கான முதல் தமிழக சட்டசபைக் கூட்டத் தொடர் கடந்த பிப்ரவரி 12 ஆம் தேதி ஆளுநர் உரையுடன் தொடங்கியது. இதைத் தொடர்ந்து ஆளுநர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் மீது விவாதம் நடந்தது. பின்னர் கடந்த 19 ஆம் தேதி தமிழ்நாடு நிதியமைச்சர் தங்கம் தென்னரசு தமிழக நிதிநிலை அறிக்கை சட்டசபையில் தாக்கல் செய்தார்.
மேலும் படிக்க - மதுரை எய்ம்ஸ் போல் இல்லாமல்.. வானதி சீனிவாசனை சீண்டிய முதல்வர் மு.க. ஸ்டாலின்
சாதி வாரி யான கணக்கெடுப்பாக நடத்த வேண்டும் -ராமதாஸ்
முன்னதாக, பா.ம.க நிறுவனர் ராமதாஸ் 2021 மக்கள் தொகை கணக்கெடுப்பை சாதி வாரியான கணக்கெடுப்பாக நடத்த வேண்டும் எனக் கோரிக்கை வைத்து வருகிறார். அவர், "தேசிய அளவிலும், மாநில அளவிலும் இட ஒதுக்கீட்டிற்கு தொடர்ந்து அச்சுறுத்தல்கள் ஏற்பட்டுக் கொண்டிருக்கின்றன. இட ஒதுக்கீட்டுக்கு எதிராக உச்சநீதிமன்றத்திலும், பல்வேறு மாநில உயர்நீதிமன்றங்களிலும் வழக்குகள் தொடரப்பட்டுள்ளன. இட ஒதுக்கீட்டின் நியாயத்தை உச்சநீதிமன்றம் மற்றும் உயர்நீதிமன்றங்களில் நிருபிக்க சாதிவாரி மக்கள்தொகை புள்ளிவிவரங்கள் தேவை.
ஆனால், நம்மிடம் அது இல்லை. "இந்தியா விடுதலை அடைந்த பிறகு இதுவரை வழங்கப்பட்ட எந்தவொரு எந்தவொரு இட ஒதுக்கீடும் மக்கள்தொகை கணக்கெடுப்பின் அடிப்படையில் வழங்கப் படவில்லை. இட ஒதுக்கீட்டுக்கு எதிராக தொடரப்பட்டுள்ள வழக்குகளை எதிர்கொள்ள சாதிவாரி மக்கள்தொகை கணக்கெடுப்பு நடத்தப்பட வேண்டியது அவசியமாகும். இதை பல்வேறு தருணங்களில் உச்சநீதிமன்றமும், பல்வேறு மாநிலங்களின் உயர்நீதிமன்றங்களும் வலியுறுத்தியுள்ளன" என பிரதமர் நரேந்திர மோடிக்கு எழுதிய கடிதத்தில் கூறியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
மேலும் படிக்க - மக்கள் தொகை கணக்கெடுப்பை சாதி வாரி கணக்கெடுப்பாக நடத்த வேண்டும் -ராமதாஸ் கோரிக்கை
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ