மதுரை எய்ம்ஸ் போல் இல்லாமல்.. வானதி சீனிவாசனை சீண்டிய முதல்வர் மு.க. ஸ்டாலின்

MK Stalin Vs Vanathi Srinivaasan: மதுரை எய்ம்ஸ் போல இல்லாமல் கோவையில் நூலகம் 2026 ஆம் ஆண்டு திறக்கப்படும் என முதல்வர் சட்டபேரவையில் தெரிவித்துள்ளார். 

Written by - Shiva Murugesan | Last Updated : Feb 22, 2024, 01:45 PM IST
மதுரை எய்ம்ஸ் போல் இல்லாமல்.. வானதி சீனிவாசனை சீண்டிய முதல்வர் மு.க. ஸ்டாலின் title=

தமிழ்நாடு நியூஸ்: சட்டபேரவையில் கோவையில் நூலகம் விரைவாக அமைக்க வேண்டும் என வானதி சீனிவாசன் பேரவையில் பேசியதற்கு முதல்வர் மதுரை எய்ம்ஸ் போல் இல்லாமல் நூலகம் திறக்கும் ஆண்டையும் இப்போதே குறிப்பிடுகிறேன் என்றுக் கூறி, "கோவையில் நூலகம் 2026 ல் திறக்கப்படும் என உறுதி அளித்தார். மேலும் நூலகம் திறக்கும் நிகழ்விற்கு உங்களை சிறப்பு விருந்தினராக அழைக்கப்படும்" என பாஜக எம்.எல்ஏ வானதி சீனிவாசனுக்கு தமிழ்நாடு முதல் அமைச்சர் பதில் அளித்தார்.

தமிழ்நாடு சட்டசபை பட்ஜெட் கூட்டத் தொடர் இறுதி நாளான இன்று, தமிழக சட்டசபையில் தாக்கலான பொது பட்ஜெட் மற்றும் வேளாண் பட்ஜெட் மீதான விவாதங்கள் நடந்து வருகிறது. 

இந்த ஆண்டுக்கான முதல் தமிழக சட்டசபைக் கூட்டத் தொடர் கடந்த பிப்ரவரி 12 ஆம் தேதி ஆளுநர் உரையுடன் தொடங்கியது. இதைத் தொடர்ந்து ஆளுநர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் மீது விவாதம் நடந்தது. கடந்த 15 ஆம் தேதி ஆளுநர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் மீது முதல்வர் ஸ்டாலின் பதில் உரை ஆற்றினார். 

இதையடுத்து கடந்த 19 ஆம் தேதி தமிழக நிதிநிலை அறிக்கை தமிழ்நாடு நிதியமைச்சர் தங்கம் தென்னரசு தமிழக சட்டசபையில் தாக்கல் செய்தார். 

மேலும் படிக்க - சட்டப்பேரவையில் காரசார விவாதம்: வானதி சீனிவாசன், டிஆர்பி ராஜா, வேலுமணி இடையே சூடான கேள்வி பதில்கள்..!

சட்டப்பேரவையில் நிதிநிலை அறிக்கை மற்றும் வேளாண் நிதிநிலை அறிக்கை மீதான விவாதத்தின் போது பாஜக சட்டமன்ற உறுப்பினர் வானதி சீனிவாசன் கேள்விகளை எழுப்பினார்.

இன்று தாய் மொழி நாள்... பட்ஜெட்டை தாக்கல் செய்த இரண்டு அமைச்சர்களும் அற்புதமாக தமிழில் பேசினார்கள். தமிழ் ஆசிரியர் வகுப்பில் இருப்பது போல் இருந்தது. 

கோவையில் நூலகம் அமைப்பதற்கான அறிவிப்புக்கு நன்றி சொல்லி கொள்கிறேன். அது உடனடியாக செயலாக்கம் பெற வேண்டும். 

வங்கி , ரயில்வே பணிக்கு பயிலும் மாணவர்களுக்கும் ஊக்கத் தொகை வழங்குவது வரவேற்கத்தக்கது . ஆனால்  ஆயிரம் மாணவர்கள் என்பதை 10 ஆயிரமாக உயர்த்த வேண்டும் . 

மத்திய அரசு வேலைக்கு நம் ஆட்கள் இல்லை என்றால் , தமிழகத்திற்கு இந்தி பேசுவோர்தான் வேலைக்கு வருவார்கள் . அதன் பிறகு வேல்முருகன் போன்றவர்கள் ஒழிக என அங்கு கோசம் போடுவார்கள். நம் மாணவர்கள் தேர்ச்சி பெற்றால் உத்தர பிரதேசத்தில் கூட தமிழ் பேசலம் எனக் கேள்வி எழுப்பி இருந்தார்.

மேலும் படிக்க - திமுகவின் 17 அமைச்சர்கள் மீது ஊழல் வழக்குகள் இருக்கிறது - அண்ணாமலை கொடுத்த சிக்னல்

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..

முகநூல் - @ZEETamilNews

ட்விட்டர் - @ZeeTamilNews

டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 

வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r

அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News