திருவெற்றியூரில் சாலை பணிகளை மேற்கொண்ட அதிகாரியை வேலையை நிறுத்துமாறு எம்.எல்.ஏ சங்கர் வலியுறுத்தியுள்ளார். அதற்கு அதிகாரி ஒத்துகொள்ளாதாதால் அவரை அடித்துள்ளார் எம்.எல்.ஏ சங்கர்.  இதனால் திமுக (DMK Party) அவரை கட்சி பொறுபிலிருந்து விடுவித்துள்ளது.  சென்னை மாநகராட்சியின் சார்பாக 3 கோடி ரூபாய் செலவில் திருவெற்றியூரில் சாலை போடும் பணி நடைபெற்று வருகிறது.  அதில் நடராஜன் வீதியில் 30 லட்சம் ரூபாய் செலவில் சாலை பணிகள் நடைபெற்று வந்தது.  


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

ALSO READ | தமிழகத்தில் ஊரடங்கு ரத்து, பள்ளிகள் திறப்பு - முழுவிவரம் இதோ..!


கடந்த புதன்கிழமை இரவு மாநகராட்சியை சேர்ந்த உதவி பொறியாளர் தலைமையில் நடராஜன் வீதியில் பணிகள் நடைபெற்று வந்தது. அப்போது அங்கு வந்த திமுக எம்எல்ஏ சங்கர் மற்றும் அவருடைய உதவியாளர்கள் நான்கு பேர் உதவி பொறியாளரை தாக்கியுள்ளனர்.  இந்த விவகாரம் தொடர்பாக தனது சீனியர் அதிகாரிகளிடம் உதவி பொறியாளர் புகார் அளித்தார்.



இந்நிலையில் சென்னை திருவொற்றியூர் மேற்கு பகுதி திமுக செயலாளர் பொறுப்பிலிருந்து எம்எல்ஏ கே.பி. சங்கரை நீக்கியுள்ளது திமுக.  திருவெற்றியூர் சட்டமன்ற உறுப்பினர் கே.பி சங்கர் கழக கட்டுப்பாட்டை மீறி வருவதால் திருவொற்றியூர் மேற்கு பகுதி கழக செயலாளர் பொறுப்பிலிருந்து விடுவிக்கப்படுவதாக அக்கட்சியின் பொருளாளர் துரைமுருகன் (Duraimurugan)அறிக்கை வெளியிட்டுள்ளார். திருவொற்றியூர் தொகுதியிலிருந்து முதல்முறையாக சட்டப்பேரவைக்கு தேர்வாகிய இவர்,  மறைந்த முன்னாள் அமைச்சர் கே.பி.பி சாமியின் சகோதரர் என்பது கவனிக்கத்தக்கது. 


கட்சிப் பதவியில் இருந்து விலக்கப்பட்ட கே.பி.ஷங்கர் முதல்வர் மற்றும் திமுக தலைவர் மு.க.ஸ்டாலினை அறிவாலயத்தில் சந்தித்து விளக்கம் அளித்தார். தான் யாரையும் தாக்கவில்லை என்றும் தன்னுடைய உதவியாளர்தான் சாலையை சரியாக போடவில்லை என ஒப்பந்ததாரரை தாக்கினார் என்றும் விளக்கம் அளித்திருக்கிறார்.


ALSO READ | உண்ணாவிரத போராட்டத்தின் இடையே பேட்டி அளித்த பாஜக தலைவர் அண்ணாமலை


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.


முகநூலில் @ZEETamilNews மற்றும் டிவிட்டரில் @ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!


Android Link - https://bit.ly/3hDyh4G


Apple Link - https://apple.co/3loQYeR