கரூர் பாராளுமன்ற உறுப்பினர் ஜோதிமணியை இந்த 5 ஆண்டுகளில் பார்த்தீர்களா? அழுதார்களா எதற்கு அழுகிறார்கள்? வரமாட்டோம் என்று அழுதார்கள், அழுது கொண்டே இருக்க வேண்டியதுதான். இன்னும் ஐந்து வருடம் நீங்கள் வரவே வேண்டாம், வீட்டிலேயே ஓய்வெடுங்கள்.. மக்கள் சொல்வது காதில் கேட்கிறது என திரைபட நடிகை கழக மகளிர் அணி துணைச் செயலாளர் செல்வி காயத்ரி ரகுராம் கரூரில் பேசியுள்ளார். கரூர் நாடாளுமன்ற தொகுதி அதிமுக வேட்பாளர் தங்கவேலுவை ஆதரித்து கழக மகளிர் அணி துணைச் செயலாளர் செல்வி காயத்ரி ரகுராம் கரூர் அருகே பசுபதிபாளையம் பகுதியில் வாக்கு சேகரிப்பில்  ஈடுபட்டார். அப்பொழுது அருகில் உள்ள தேநீர் கடைக்கு சென்று பொதுமக்களுக்கு துண்டு பிரசுரங்களை வழங்கினர். அப்பொழுது பெண்கள் அவரிடம் செல்பி எடுத்துக் கொண்டு மகிழ்ந்தனர்.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

மேலும் படிக்க | வேலூரில் பிரதமர் மோடி கலந்துகொள்ளும் பிரச்சார கூட்டத்திற்கு அனுமதி தந்ததே திமுக அரசு தான்: நடிகை விந்தியா


தொடர்ந்து பொதுமக்களிடையே கழக மகளிர் அணி துணைச் செயலாளர் செல்வி காயத்ரி ரகுராம் பேசுகையில், ஜோதி மணியை இந்த 5 ஆண்டுகளில் பார்த்தீர்களா அழுதார்களா எதற்கு அழுகிறார்கள் வரமாட்டோம் என்று அழுதார்கள் அழுது கொண்டே இருக்க வேண்டியதுதான் இன்னும் ஐந்து வருடம் நீங்கள் வரவே வேண்டாம் வீட்டிலேயே ஓய்வெடுங்கள் மக்கள் சொல்வது காதில் கேட்கிறது. மக்களுக்கு எதுவும் செய்யவில்லை, பாராளுமன்றத்திற்கு சென்று எதுவும் மக்களுக்காக கேட்கவில்லை. குறிப்பாக கரூர் மக்களை அப்படியே புறக்கணித்து விட்டனர். ஆட்டுக்குட்டி தகரப் பெட்டி எடுத்து கரூரில் ஜெயிக்க மாட்டோம் என்று கோவைக்கு ஓடிவிட்டார், அங்கேயும் ஜெயிக்க மாட்டார்கள் என்று தெரியும். அங்கே இருந்து திரும்பி கர்நாடகாவிற்கு அனுப்பி வைப்பார்கள். 


அது கூடிய விரைவில் நடக்கும், பாஜக பத்தாண்டுகளாக மத்தியில் ஆட்சியில் இருக்கின்றனர், எதுவும் செய்யவில்லை. கடந்த முறை தேர்தலுக்கு பிரச்சாரத்திற்கு வந்த பொழுது எப்படி இருந்ததோ, அதே அப்படியே தான் கரூர் மக்கள் அவதிப்பட்டு கொண்டிருக்கின்றனர், கண்கூடாக பார்க்க முடிகிறது. அம்மா அவர்கள் பெண்களுக்காக பார்த்து பார்த்து பல்வேறு நலத்திட்டங்களை கொண்டு வந்துள்ளார். அது எல்லாம் இந்த திருட்டு திமுக வினர் அனைத்தையும் நிறுத்தி விட்டார். தாலிக்கு தங்கம் திட்டம் அதை நிறுத்தாமல் தொடர்ந்து செயல்படுத்தியவர் எடப்படியார் என்றும், பெண்களுக்கு திருமண உதவித்தொகை, கல்லூரி மாணவர்களுக்கு 50 ஆயிரம், பள்ளி முடித்த மாணவர்களுக்கு 25000 தற்பொழுது இந்த திட்டங்களை நிறுத்திவிட்ட திருட்டு திமுகவினர் அந்த காசு எல்லாம் எங்கே போனது? அனைத்தும் ஸ்டாலின் மகன் மருமகன் வீட்டிற்கு போனது இதுதான் உண்மை.


மகளிர் உரிமைத் தொகை ஆயிரம் ரூபாய் பணம் அனைத்து இருக்கும் கிடைக்கவில்லை, அது மிகப்பெரிய ஏமாற்றம். விதைவைகள், ஊனமுற்றோர், முதியோர் பென்ஷன் வாங்கும் நபர்களுக்கு இந்த ஆயிரம் ரூபாய் கிடையாது. 30 சதவீத பெண்களுக்கு மட்டுமே இந்த ஆயிரம் ரூபாய் சென்று இருக்கிறது, அதுவும் பெண்களுக்கு போய் சென்று சேர்கிறதா என்பது தெரியவில்லை. பெண்களுக்கு எதிரான ஆட்சி என்பதை நினைத்துப் பாருங்கள். அந்த ஆயிரம் ரூபாய் என்பது பெண்களிடம் பேரம் பேசி உள்ளனர், தாலிக்கு தங்கம் என்பது ஒரு பவுன் தங்கம் 50,000 க்கு மேல் விற்பனை செய்யப்படுகிறது. ஆயிரம் ரூபாய் எங்கே 50 ஆயிரம் ரூபாய் எங்கே? மக்களே ஞாபகம் வைத்துக் கொள்ளுங்கள், இந்த திருட்டு திமுகவை விரட்டி அடிக்க வேண்டும் இந்த தேர்தலில். 


மேலும் படிக்க | பெண்களுக்கு அரசியல் அதிகாரத்தை வழங்கியவர் பிரதமர் மோடி - வானதி ஸ்ரீநிவாசன்!


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..


முகநூல் - @ZEETamilNews


ட்விட்டர் - @ZeeTamilNews


டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 


வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r


அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ