முக்கியத் தருணங்களில் உடல்நலக்குறை ஏற்பட்டால் என்ன செய்வதென்றே புரியாத ஒரு சூழ்நிலை வந்துவிடும். அதுவும், திருணம் போன்ற நற்காரியங்களின் போது ஏற்படும் துக்க சம்பவங்கள் திருமண வீட்டின் மகிழ்ச்சியையே உடைக்கக் கூடியது. திருவாரூரிலும் திருமண வீட்டை கவலையுறைச் செய்யும்படி தந்தைக்கு திடீர் உடல்நலக்குறைவு ஏற்பட்டுள்ளது. ஆனாலும், மணமேடையில் தாலி கட்டிமுடித்தவுடன் மகன் செய்த செயல் அனைவரையும் நெகிழ்ச்சியடையச் செய்துள்ளது. 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

மேலும் படிக்க | கியூட்டா ஒரு டாட்டா, இணையவாசிகளின் இதயங்களை கவர்ந்த மணப்பெண்: வைரல் வீடியோ


திருவாரூர் மாவட்டம் குடவாசல் தாலுக்கா குடவாசல் பகுதியை சேர்ந்தவர் செல்வமணி. இவருடைய மகன் மணிகண்டனுக்கு நேற்று திருமணம் நடைபெற்றது. திருமணத்துக்கு முந்தைய நாளே மணிகண்டனின் தந்தை செல்வமணிக்கு திடீர் உடலக்குறைவு ஏற்பட்டது. ஒரு பக்கம் திருமண ஏற்பாடுகள் நடந்துகொண்டிருக்க, மறுபுறம்  தந்தையை திருவாரூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதித்தார். செல்வமணியை பரிசோதித்த மருத்துவர்கள் உடனடியாக அவரை அவசர சிகிச்சைப் பிரிவில் அனுமதித்து, தொடர்ந்து சிகிச்சை அளித்து வருகின்றனர். தந்தை செல்வமணி இல்லாமல் திருமணம் எப்படி நடக்கப்போகிறது என்று அந்த நாள் முழுவதுமே மணிகண்டன் விரக்தியிலும், மன வருத்தத்திலும் சுற்றியுள்ளார். இதையடுத்து, நாச்சியார்கோவிலில் உள்ள மண்டபத்தில் மணிகண்டனுக்கும், சுஜாலினி என்ற பெண்ணுக்கும் திருமணம் நடந்துமுடிந்தது. தாலி கட்டி முடித்ததும், மனைவி சுஜாலினியை அழைத்துக்கொண்டு மணிகண்டன் நேராக திருவாரூர் அரசு மருத்துவமனைக்கு வந்தார். அங்கு அவசர சிகிச்சைப் பிரிவில் சிகிச்சைப் பெற்றுக்கொண்டிருந்த தந்தை செல்வமணியிடம் புதுமணத் தம்பதி ஆசீர்வாதம் வாங்கியது. நோயாளியாக கட்டிலில் அமர்ந்தபடி இருந்த செல்வமணி, தனது மகன் மணிகண்டனையும், சுஜாலினியையும் ஆசீர்வதித்தார். இந்த சம்பவம், திருவாரூர் அரசு மருத்துவமனையில் இருந்த பலரையும் நெகிழ்ச்சி அடையச் செய்தது.


மேலும் படிக்க | இக்னோர் செஞ்ச மணமகன், வெச்சி செஞ்ச மணமகள்: வீடியோ வைரல்


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.


முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link - https://bit.ly/3hDyh4G


Apple Link - https://apple.co/3loQYeR