இந்திய வரலாற்றை மறுபரிசீலனை செய்யும் அளவுக்கு அதிசயத்து வியக்கும் அளவிலான தகவல்களும், பொருட்களும கீழடியில் கிடைத்து வருகின்றன. தொல்லியல் துறையின் ஆய்வு கீழடியில் இருந்து விரிந்துகொண்டே செல்கின்றன. ஆதிச்சநல்லூர் போன்ற இடங்களைத் தாண்டி தற்போது அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் அருகே கங்கை கொண்ட சோழபுரம் பகுதியிலும் அகழாய்வுப் பணிகள் நடந்து வருகின்றன. 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

குறிப்பாக, கங்கை கொண்ட சோழபுரம் பகுதியைச் சுற்றியுள்ள பகுதிகளில் தொல்லியல் ஆய்வுகள் நடந்து வருகின்றன. கீழடி, ஆதிச்சநல்லூர், கங்கை கொண்ட சோழபுரம் தாண்டி கிட்டத்தட்ட 7 மாவட்டங்களில் தொல்லியல் துறை ஆய்வுகளை நடத்தி வருகிறது. 


மேலும் படிக்க | கி.பி 9ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த செக்கு கல்வெட்டு - திருச்சியில் கண்டுபிடிப்பு.!


கடந்த ஜனவரி மாதம்  ஆளில்லா சிறிய ரக விமானத்தின் மூலம் கங்கை கொண்ட சோழபுரத்தைச் சுற்றியுள்ள பொன்னேரி, கல்குளம், ஆயுதக்களம், மண்மலை, மாளிகைமேடு உள்ளிட்ட 6 இடங்களில் ஆய்வு செய்வதற்காக தொழில்நுட்ப கருவிகள் மூலம் புகைப்படம் மற்றும் வீடியோக்கள் எடுக்கப்பட்டன. முதலில் ஹெலிகாப்டர் மூலம்தான் ஆய்வு செய்ய வேண்டிய இடம் தேர்வு செய்யப்பட்டது. அதன்படி, தொல்லியல் ஆய்வாளர்கள் மளிகைமேட்டைத் தேர்வு செய்தனர். 



முன்னேற்பாடாக கடந்த பிப்ரவரி மாதத்தில் மண்டிக்  கிடக்கும் புல் புதர்களை அகற்றி சுத்தம் செய்யும் பணி நடைபெற்றது. பின்னர், பத்துக்கு பத்து என்ற அளவில் குழிகள் தோண்டப்பட்டு அந்த இடத்தில் பணி மேற்கொள்ளப்பட்டது. அந்த இடத்தில் சுவர் ஒன்று தென்பட்டதால் தோண்டும் பணி மேலும் தீவிரமடைந்தது. தோண்டத் தோண்ட அந்த இடத்தில் பானை, ஓட்டு வில்லைகள்,  கூரை ஓடுகள், ஆணி வகைகள் மற்றும் செப்புக்காசு ஆகியவை கண்டெடுக்கப்பட்டுள்ளன. 



இந்நிலையில், இரண்டாம் கட்ட அகழ்வாராய்ச்சிப் பணிகள் கடந்த பிப்ரவரி 14 ஆம் தேதி முதல் துவங்கப்பட்டன. கடந்த 2021 ஆண்டில் 17 குழிகள் தோண்டப்பட்டு ஆய்வு மேற்கொள்ளப்பட்டன. பின்னர், இரண்டாம் கட்டமாக 14 குழிகள் தோண்டப்பட்டு ஆராய்ச்சிப் பணிகள் நடைபெற்று வருகின்றன. தற்போது அந்த இடத்தில் புதிய சுவர் ஒன்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. 9 அடி ஆழத்தில் 25 செ.மீ நீளமும், 13 செ.மீ அகலமும், 4.5 செ.மீ உயரமும் கொண்ட செங்கல்லால் ஆன சுவர் அது.! 



அதாவது, மேல்புறம் 34 வரிசைகளும், வடபுறம் 32 வரிசைகளும் உள்ளன. தென்புறத்தில் 14 வரிசைகள் இருக்கின்றன. கிட்டத்தட்ட ஒரு காம்பவுண்ட் சுவர் பாணியில் அதன் வடிவமைப்பு இருக்கிறது. இந்தப் பணியில் சிறிய ஆணிகள், கிளிஞ்சல்கள், கண்ணாடி மணி உள்ளிட்ட பொருட்கள் கிடைக்கப் பெற்றன.


மேலும் படிக்க | கீழடி அகழாய்வு உலக அளவில் கவனத்தை பெற்றுள்ளது: சட்டப்பேரவையில் மு.க. ஸ்டாலின் உரை


தொடர்ந்து இன்னும் அரியப் பொருட்கள் கிடைக்கிறதா என்று தொல்லியல் ஆய்வாளர்கள் எதிர்பார்த்துள்ளனர். இந்தப் பணியில் 40 தொழிலாளர்கள், அலுவலர்கள்,  பயிற்சி மாணவர்கள் ஆகியோர் கலந்துகொண்டு பணியாற்றி வருகின்றனர். அதுமட்டுமல்லாமல், மளிகைமேட்டில் நடைபெற்று வரும் தொல்லியல் ஆய்வை சுற்றுவட்டாரத்தைச் சேர்ந்த கிராம மக்களும் வந்து பார்த்துச் செல்கின்றனர். 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.


முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link - https://bit.ly/3hDyh4G


Apple Link - https://apple.co/3loQYeR