தமிழகத்தின் தனிப்பெருமைகளை உலகுக்கு உரக்க உரைத்துக்கொண்டிருக்கும் கீழடி அகழ்வாராய்ச்சிகளின் பெருமையைப் பற்றி முதல்வர் மு.க.ஸ்டாலின் சட்டப்பேரவையில் பேசினார்.
“இந்தியத் துணைக் கண்டத்தின் வரலாறு இனி தமிழ் நிலப்பரப்பில் துவங்கித்தான் எழுதப்பட வேண்டும்” என தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின், கீழடி அகழாய்வு குறித்து தமிழ்நாடு சட்டப்பேரவையில் தெரிவித்தார். கீழடி மூலம் சங்ககால தமிழர்களின் வாழ்க்கை முறையை உலகமே அறிந்துள்ளது என முதல்வர் மு.க. ஸ்டாலின் தனது உரையில் கூறினார்.
கீழடி (Keezhadi) அகழ்வாராய்ச்சி பணிகளை மத்திய அரசு பாதியிலேயே கைவிட்டது என்பதையும் முதல்வர் மு.க.ஸ்டாலின் குறிப்பிட்டார்.
நெல்லையில் ரூ.15 கோடி செலவில் நவீன வசதிகளுடன் பொருநை அருங்காட்சியகம் அமைக்கப்படும் என சட்டப்பேரவையில் முதலைமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார்.
கீழடி அகழாய்வு
மௌரியப் பேரரசர் அசோகர் காலத்துக்கு முந்தைய #கீழடி வெள்ளிக்காசு. pic.twitter.com/dOx3pXT4kj
— TNPSC Updates (@Tnpsc_updates) September 9, 2021
ALSO READ: கீழடியின் கொடை குறைவதில்லை: அமைச்சர் தங்கம் தென்னரசு உருக்கம்
சட்டப்பேரவையில் விதி எண் 110-ன் கீழ் அறிவிப்பு வெளியிட்டு பேசிய முதல்வர் மு.க.ஸ்டாலின் (MK Stalin), “அகழாய்வு நடைபெறும் ஆதிச்சநல்லூரில் முதுமக்கள் தாழி கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. கீழடி அகழாய்வுகளில் நான்காம் நூற்றாண்டைச் சேர்ந்த வெள்ளிக்காசு கண்டறியப்பட்டுள்ளது. கீழடி நாகரிகம் கி.மு. ஆறாம் நூற்றாண்டு நாகரிகம் என தெரியவந்துள்ளது. கொற்கை துறைமுகம் கி.மு. ஆறாம் நூற்றாண்டுக்கு முந்தையது என ஆய்வாளர்கள் கூறுகின்றனர்.
கேரளாவின் பட்டணம், ஆந்திராவின் வேங்கி, கர்நாடகாவின் தலைக்காடு, ஒடிசா உள்ளிட்ட இடங்களில் ஆய்வு மேற்கொள்ளப்படும். கீழடி அகழாய்வு உலக அளவில் கவனம் பெற்றுள்ளது. தமிழர் பண்பாட்டு அடையாளங்களைத் தேடி இனி உலகெங்கும் பயணம் செல்வோம். பொருநை ஆற்றங்கரை நாகரிகம் 3200 ஆண்டுகள் பழமையானது என அமெரிக்க ஆய்வு நிறுவனத்தின் முடிவுகள் தெரிவிக்கின்றன. நெல்லை நகரில் ரூ.15 கோடியில் நவீன வசதிகளுடன் பொருநை அருங்காட்சியகம் அமைக்கப்படும். அகழாய்வு பணிகளுக்கு ஏற்கனவே ரூ.5 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.”
கீழடி மற்றும் பிற இடங்களில் நடக்கும் அகழ்வாராய்ச்சிகளின் வெளிப்பாடுகள் மூலம் தமிழகத்தின் தொன்மையை உலகம் வியந்து நோக்கி வருகிறது. கீழடி குறித்து முதல்வர் ஸ்டாலின் சட்டப்பேரவையில் ஆற்றிய உரையை பலரும் பாராட்டி வருகின்றனர்.
தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலினின் பல்வேறு அறிவிப்புகளை வரவேற்று நன்றி தெர்வித்த மதுரை நாடாளுமன்ற மக்களவை உறுப்பினர் சு. வெங்கடேசன், தனது ட்விட்டர் பதிவில், “தமிழ்ப்பண்பாட்டின் வேர்களைத் தேடி கடல் கடந்து தொல்லியல் ஆய்வு நடைபெறும்.யாதும் ஊரே யாவரும் கேளிர் என வாழ்ந்த குடியின் வரலாறு அறிவியலின் துணையோடு மீட்டெடுக்கப்படும். வரலாறு பற்றிய, வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த அறிவிப்புகளை வெளியிட்ட முதல்வருக்கு நன்றியும் பாராட்டும். விதி 110 இன் கீழ் சமர்பிக்கப்பட்ட அறிக்கை, இந்திய வரலாற்றின் விதிகளை மாற்றும் அறிக்கையாகும்.புராணங்களை வரலாறு என பொய்யர்கள் சொல்லிக் கொண்டிருக்கும் நேரத்தில் வைகை, பொருநை என்று ஆற்றங்கரை தோறும் அறிவியல் துணையோடு உண்மையான வரலாறு மீட்டெடுக்கப்படுகிறது. ழடியில் கண்டறியப்பட்ட வெள்ளி முத்திரை நாணயம் மெளரியர் காலத்திற்கு முற்பட்டது. பாண்டியனின் கொற்கை துறைமுகம் கி.மு எட்டாம் நூற்றாண்டுக்கு முற்பட்டது. பொருநை நதி நாகரிகத்தின் காலம் 3200 ஆண்டுகளுக்கு முற்பட்டது. உரத்துச் சொல்வோம்! இந்திய வரலாறு தெற்கில் இருந்து எழுதப்பட வேண்டும்” என்று எழுதியுள்ளார்.
விதி 110 இன் கீழ்
சமர்பிக்கப்பட்ட அறிக்கை,
இந்திய வரலாற்றின் விதிகளை மாற்றும் அறிக்கையாகும்.புராணங்களை வரலாறு என பொய்யர்கள் சொல்லிக் கொண்டிருக்கும் நேரத்தில்
வைகை, பொருநை என்று ஆற்றங்கரை தோறும் அறிவியல் துணையோடு உண்மையான வரலாறு மீட்டெடுக்கப்படுகிறது. @CMOTamilnadu #கீழடி pic.twitter.com/0tFjkScXDr
— Su Venkatesan MP (@SuVe4Madurai) September 9, 2021
ALSO READ: கீழடி 5-ம் கட்ட அகழ்வாராய்ச்சி பணி நீட்டிப்பு -பாண்டியராஜன்!
உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.
முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR