ஓசூரில் பட்டாசு கடையில் தீ விபத்து ஏற்பட்டுள்ளது. இதனால் அந்த இடத்தில் லட்சக்கணக்கான மதிப்புள்ள பட்டாசுகள் எரிந்து நாசம் ஆனது.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூரில் பெங்களூர் செல்லும் சாலை அருகே வடிவேல் என்பவருக்கு சொந்தமான பட்டாசு கடை உள்ளது. அங்கு அந்த கடையில் திடீர் தீ விபத்து ஏற்பட்டதுள்ளது. இந்த சம்பவமானது இன்று அதிகாலை 4 மணி அளவில் ஏற்பட்டு உள்ளது. 


மேலும் படிக்க | CBI-ல் பணிபுரிய விருப்பமா? உடனே விண்ணப்பியுங்கள்!


இந்த நிலையில் தற்போது இந்த திடீர் தீ விபத்தால் கடை முழுவதும் பட்டாசுகள் வெடித்தது. இதனால் அந்த இடம் மிகவும் புகை மூட்டமாக காணப்பட்டது. மேலும் இந்த சம்பவம் தொடர்பாக தகவல் அறிந்து உடனே சம்பவ இடத்திற்கு தீயணைப்புத் துறையினர் புறப்பட்டு வந்தனர். மேலும் நான்கு தீயணைக்க தண்ணீரைக் கொண்டு தீயை கட்டுக்குள் கொண்டு வந்தனர்.


மேலும் படிக்க | பஞ்சாப் வங்கியின் முக்கிய அறிவிப்பு; செப்டம்பர் 1 முதல் உங்கள் கணக்கு மூடப்படும்


சுமார் 2 மணி நேரம் மேலாக தீயை அணைத்தனர். இந்த வரிசையில் பட்டாசு கடை உரிமையாளர் வடிவேலு சிவகாசிக்கு சென்று பார்த்தபோது பட்டாசு கடையில் இருந்த பட்டாசுகள் நாசமாகி பட்டாசுகளின் மதிப்பு தெரியவில்லை. முதற்கட்ட விசாரணையில் பட்டாசு கடை உரிமையாளர் வந்த பிறகே பட்டாசுகளின் முழு மதிப்பு தெரியவரும் என்றும், மின் கசிவு காரணமாக தீப்பிடித்திருக்கலாம் என்றும் தெரியவந்துள்ளது. இந்த தீ விபத்தால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.


மேலும் படிக்க | இந்த அஞ்சலக திட்டத்தின் மூலம் பணத்தை இரட்டிப்பாக்கலாம்! முழு விவரம்!


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.


முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ