பஞ்சாப் வங்கியின் முக்கிய அறிவிப்பு; செப்டம்பர் 1 முதல் உங்கள் கணக்கு மூடப்படும்

PNB வாடிக்கையாளர்களுக்கு ஒரு முக்கிய செய்தி. செப்டம்பர் 1 முதல் உங்கள் கணக்கு மூடப்படும். உங்களால் பரிவர்த்தனை செய்ய முடியாது. ஏன் தெரியுமா?  

Written by - S.Karthikeyan | Last Updated : Aug 26, 2022, 06:21 PM IST
  • பஞ்சாப் நேஷனல் வங்கி முக்கிய அறிவிப்பு
  • அறிவிப்பை புறகணித்தால் கணக்கு மூடப்படும்
  • வங்கிக் கணக்கை தக்க வைக்க உடனே செய்ய வேண்டியது இதுதான்
பஞ்சாப் வங்கியின் முக்கிய அறிவிப்பு; செப்டம்பர் 1 முதல் உங்கள் கணக்கு மூடப்படும்  title=

PNB customer alert: உங்கள் வங்கி கணக்குPNB வங்கியில் இருந்தால், கண்டிப்பாக இந்த செய்தி உங்களுக்கானது தான். பஞ்சாப் நேஷனல் வங்கி தங்களுடைய டிவிட்டர் பக்கத்தில் பெரிய அறிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. இந்த அறிவிப்பை நீங்கள் தவறவிடும்பட்சத்தில், உங்களின் வங்கிக் கணக்கு சிக்கலை எதிர்கொள்ள வேண்டியிருக்கும். 

PNB வாடிக்கையாளராக இருந்து நீங்கள் இதுவரை KYC அப்டேட் செய்யவில்லை என்றால், உடனடியாகச் செய்யுங்கள். KYC-ஐ புதுப்பிக்குமாறு வாடிக்கையாளர்களுக்கு பஞ்சாப் வங்கி வேண்டுகோள் விடுத்துள்ளது. அனைத்து வாடிக்கையாளர்களும் ஆகஸ்ட் 31, 2022-க்குள் KYC புதுப்பித்துக் கொள்ள வேண்டும் என்று பஞ்சாப் வங்கி டிவிட்டரில் தெரிவித்துள்ளது. கடந்த பல மாதங்களாக, KYC (know your customer) புதுப்பிக்குமாறு வங்கி தனது வாடிக்கையாளர்களுக்கு வேண்டுகோள் விடுத்திருந்தது. KYC அப்டேட் செய்வதன் மூலம், வாடிக்கையாளர்களின் வங்கிக் கணக்கு செயலில் இருக்கும் இல்லையெனில் வாடிக்கையாளர் பணப் பரிவர்த்தனை செய்ய முடியாது.

பஞ்சாப் வங்கியின் டிவிட்டர்

பஞ்சாப் நேஷனல் வங்கி ட்விட்டரில், "ஆர்பிஐ வழிகாட்டுதல்களின்படி, அனைத்து வாடிக்கையாளர்களுக்கும் KYC புதுப்பிப்பு கட்டாயமாகும். 31.03.2022-க்குள் உங்கள் கணக்கு KYC புதுப்பிப்புக்காக நிலுவையில் இருந்தால், 31.08.2022-க்கு முன் உங்கள் KYC-ஐப் புதுப்பித்துக் கொள்ளுங்கள். உங்கள் கிளையைத் தொடர்புகொள்ளுங்கள். புதுப்பிக்கவில்லை என்றால் உங்கள் கணக்குப் பரிவர்த்தனைகளைத் தடை செய்யக்கூடும்" எனக் கூறியுள்ளது.

KYC என்றால் என்ன தெரியுமா?

KYC-யின் முழு வடிவம், உங்கள் வாடிக்கையாளரை அறிந்து கொள்ளுங்கள் என்பது தான். இதன் கீழ், வாடிக்கையாளர்கள் தங்களைப் பற்றிய தேவையான அனைத்து தகவல்களையும்  கொடுக்க வேண்டும். வங்கித் துறையில், ஒவ்வொரு 6 மாதங்கள் அல்லது 1 வருடத்திற்கு ஒருமுறை, வங்கி தனது வாடிக்கையாளர்களிடமிருந்து KYC படிவத்தை நிரப்ப வேண்டும். இந்த KYC படிவத்தில், உங்கள் பெயர், வங்கி கணக்கு எண், பான் கார்டு எண், ஆதார் அட்டை எண், மொபைல் எண் மற்றும் முழு முகவரியை நிரப்ப வேண்டும். இதன் மூலம் வாடிக்கையாளரின் அனைத்து தகவல்களையும் வங்கி பெற்றுக் கொள்கிறது. KYC செய்வது மிகவும் எளிதானது. வீட்டில் அமர்ந்து கூட எளிதாக செய்யலாம்.

நீங்கள் வங்கிக்குச் சென்று கூட அப்டேட் செய்ய முடியும். அதற்கு முதலில் நீங்கள் உங்கள் வங்கிக் கணக்கு வைத்திருக்கும் வங்கியின் கிளைக்குச் செல்லுங்கள். அங்கு சென்று KYC படிவத்தை எடுத்து, அந்த படிவத்தை பூர்த்தி செய்து தேவையான அனைத்து ஆவணங்களையும் அதில் இணைத்த பிறகு சமர்ப்பிக்கவும். KYC படிவத்தைச் சமர்ப்பித்த 3 நாட்களுக்குள் உங்கள் KYC புதுப்பிக்கப்படும்.

kyc வீட்டில் உட்கார்ந்தும் செய்யலாம்

நீங்கள் வீட்டில் உட்கார்ந்து KYC செய்ய விரும்பினால், அதையும் செய்யலாம். இதற்காக உங்கள் ஆவண வங்கிக்கு மின்னஞ்சல் அனுப்பலாம். அல்லது ஆதார் மூலம் மொபைலில் OTP கேட்டு KYC ஐயும் முடிக்கலாம். பல வங்கிகள் நெட் பேங்கிங் மூலம் KYC வசதியையும் வழங்குகின்றன. உங்கள் வங்கியும் இந்த வசதியை அளித்து, நீங்கள் நெட் பேங்கிங் செய்தால் வீட்டில் இருந்தபடியே KYC-ஐ எளிதாக முடிக்கலாம்.

மேலும் படிக்க | ஒரிஜினல் டிரைவிங் லைசென்ஸ் தொலைந்து விட்டதா? ஆன்லைனில் டூயூபிளிகேட் பெற்றுக்கொள்ளலாம்

மேலும் படிக்க | 7th Pay Commission: அகவிலைப்படியில் 4% அதிகரிப்பு, ஊதியத்தின் முழு கணக்கீடு இதோ

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ 

Trending News