மதுரை: தமிழக முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் பெயர் முன்னெப்போதையும்விட கடந்த ஒரு வாரத்தில் அதிகம் பேசப்படுகிறது. அதற்கு காரணம், மெரீனாவில் ஜெயலலிதாவின் சமாதியில் அமைக்கப்பட்ட நினைவிடம், அவரது வீடு வேதாநிலையம் நினைவு இல்லமாக மாற்றப்பட்டது என்று அடுத்தடுத்த நாட்களில் இரண்டு முக்கிய நினைவிடங்கள் திறந்து வைக்கப்பட்டது தான். இவை இரண்டும் சென்னையில் அமைக்கப்பட்ட நினைவிடங்கள்.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

மூன்றாவதாக இன்று திறந்துவைக்கப்பட்டதோ ஜெயல்லிதாவுக்கு பிரம்மாண்டமான கோயில். அன்னை மீனாட்சி அரசாட்சி செய்யும் மதுரையில் ’அம்மா’ என்றே அறியப்படும் ஜெயல்லிதாவுக்கு கட்டப்பட்டு வந்த ஆலயம் இன்று குடமுழுக்கு செய்யப்பட்டு மக்களின் வழிப்பாட்டிற்காக திறந்துவைக்கப்பட்டது.


Also Read | மெரினாவில் ஜெ.ஜெயலலிதாவின் நினைவிடத்தை திறந்து வைத்தார் எடப்பாடி பழனிசாமி


அன்னையர் சக்தி, லட்சுமி, சரஸ்வதி என மூன்று தெய்வங்களை முப்பெரும் தேவியர் என்று இந்து மதத்தில் குறிப்பிடுவார்கள். ஆனால், தமிழகத்தின் ஒற்றை தேவியாக ஜெயலலிதா (Jayalalitha) மதுரையில் கோவில் கொண்டுவிட்டார். இந்த கோவிலில் ஆன்மீகம் என்பதை விஞ்சி நிற்பது அரசியல் என்றும், பக்தியை எஞ்சி நிற்பது வாக்குவங்கி என்பதும் பலரின் கருத்தாக இருக்கிறது.
 
ஜெயலலிதா தெய்வமாக பிரதிஷ்டை செய்யப்பட்ட ஆலயத்தை இன்று தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி திறந்துவைத்தார். ஆலயக் கலசங்களில் புனித நீர் அபிஷேகம் செய்யப்பட்டு, சாஸ்திர சம்பிரதாயங்களின்படி குடமுழுக்கு விழா நடத்தப்பட்டது. 



மதுரை குன்னத்தூரில், முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவிற்காக அமைக்கப்பட்ட கோவிலை, இந்நாள் முதலமைச்சர் பழனிசாமி துவக்கி வைத்தார். இந்த நிகழ்ச்சியில் துணை முதல்வர் ஓபிஎஸ், அதிமுக அமைச்சர்கள் மற்றும் ஏராளமான தொண்டர்கள் கலந்து கொண்டனர்.  


அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் (AIADMK) பொதுச்செயலாளர் ஜெயலலிதா தான், தமிழகத்தில் மட்டுமல்ல இந்தியாவிலேயே அதிக நாட்கள் ஆட்சியில் இருந்த பெண் முதலமைச்சர் என்பது குறிப்பிடத்தக்கது. 
ஜெயலலிதாவுக்கான இந்தக் கோவில், திருமங்கலம் குன்னத்தூரில் அமைச்சர் உதயகுமார் மேற்பார்வையில் உருவானது.   12 ஏக்கர் பரப்பளவில் பிரம்மாண்டமாக கட்டப்பட்டிருக்கும் அந்த கோவிலில் 400 கிலோ எடை கொண்ட ஜெயலலிதா மற்றும் எம்.ஜி.ஆர் சிலைகள் அமைக்கப்பட்டுள்ளன.


ஆலய திறப்பு விழா நிகழ்ச்சியில் பேசிய முதல்வர் பழனிசாமி (Edappadi Palaniswami), எம்.ஜி.ஆர்., ஜெயலலிதா என்ற இரு தெய்வங்களும், மக்களின் இதயக்கோவிலில் குடியிருந்தார்கள், மக்களுக்காகவே வாழ்ந்தவர்கள் என்று குறிப்பிட்டார். அதிமுக ஆட்சியமைக்க இந்த நாளில் உறுதியேற்போம் என்றும் முதலமைச்சர் கோரிக்கை விடுத்தார்.  இந்த கோயில் திறப்புவிழா நிகழ்ச்சியில் 120 பேருக்கு, பசுக்கள் தானமாக (கோ தானம்) வழங்கப்பட்டன. அத்துடன் 234 பேருக்கு தலா 10 ஆயிரம் ரூபாய் நிதியுதவியும் வழங்கப்பட்டது.


Also Read | DMK ஆட்சிக்கு வந்தால் முழுமையாக உள்ளாட்சி தேர்தல் நடத்தப்படும்: MKS


தேசம், சர்வதேசம், கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!


Android Link - https://bit.ly/3hDyh4G


Apple Link - https://apple.co/3loQYeR