சென்னை மெரினா கடற்கரையில் முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் நினைவிடத்தை தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி அவர்கள் திறந்து வைத்தார். காலை முதலே இந்த நினைவிடத்திற்கு மக்கள் வந்த வண்ணம் உள்ளனர்.
மறைந்த முன்னாள் முதல்வர் ஜெ.ஜெயலலிதாவின் நினைவிடம் சென்னை மெரினாவில் அமைந்துள்ள எம்ஜிஆர் நினைவிடம் அருகே அமைக்கப்பட்டுள்ளது. இந்த நினைவிடத்தின் வடிவமைப்பு மிகவும் வித்தியாசமான முறையில் மனதைக் கவரும் வகையில் அமைந்துள்ளது.
80 கோடி ரூபாய் செலவில் அமைக்கப்பட்டுள்ள இந்த நினைவிடம் பீனிக்ஸ் பறவையின் வடிவில் அமைக்கப்படுள்ளது. மெரினாவில் அமைக்கப்படுள்ள இந்த நினைவிடம் 15 மீட்டர் உயரமும், 43 மீட்டர் அகலமும் கொண்டது. மிகவும் நேர்த்தியான முறையில் இந்த நினைவிடம் அமைக்கப்பட்டுள்ளது.
ALSO READ: ஜெயலலிதா நினைவிடம் திறப்பு- மெரினாவில் அலையாக குவிந்த தொண்டர்கள்!
இன்று தமிழக முதலமைச்சர் பழனிசாமி அவர்கள் ஜெ.ஜெயலலிதாவின் (J Jayalalitha) இந்த நினைவிடத்தை திறந்து வைத்தார். இந்த விழாவில் துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம், சட்டப்பேரவைத் தலைவர், அதிமுக அமைச்சர்கள், நாடாளுமன்ற உறுப்பினர்கள், வாரியத் தலைவர்கள், முக்கிய பிரமுகர்கள், பொதுமக்கள், அதிமுக தொண்டர்கள் ஆகியோர் கலந்து கொண்டனர்.
கொரோனா தொற்று காரணமாக, விழா நடந்த இடத்தில் கூட்டம் சேராமல் இருக்க, சாலைகளில் பெரிய திரை அமைக்கப்பட்டிருந்தது. முன்னரே ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது போலவே, தொண்டர்கள் சாலைகளில் அமர்ந்து அமைக்கப்பட்டிருந்த பெரிய திரைகளில் இந்த விழாவை கண்டு களித்தனர்.
முதல்வர் எடப்பாடி பழனிசாமி (Edappadi K Palaniswami), துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம், சபாநாயகர் ஆகியோர் ஜெயலலிதாவின் நினைவிடத்தில் மலர் வளையம் வைத்து முன்னாள் முதல்வருக்கு அஞ்சலி செலுத்தினர்.
ALSO READ: ஜெயலலிதா நினைவிட திறப்பு விழா இன்று: மெரினா சாலையில் போக்குவரத்து மாற்றம்!
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR