தமிழ் தேச தன்னுரிமை கட்சி நடத்திய தமிழக மக்கள் தன்னாட்சி மாநாடு நெல்லை மாவட்டம் பாளையங்கோட்டையில் நடந்தது. அதில் நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் உள்பட பலர் கலந்துகொண்டனர். அப்போது பேசிய சீமான், “தெற்காசியா முழுதும் பரவி வாழ்ந்தவர்கள் தமிழர்கள் என்று ஆய்வறிக்கைகள் சொல்கிறது. நம் தமிழ் முன்னோர்கள் வைத்திருந்த வாளை பீட்சா, பர்கர் சாப்பிடும் நம்மால் இப்போது தூக்கக்கூட முடியாது. ஆனால் அந்த காலத்தில் அவர்கள் வாளைதூக்கி குதிரை மேல் நின்று வீசியுள்ளனர். தமிழனுடைய அறிவு நெற்களஞ்சியம் போல்  உலகம் முழுவதும் கொட்டி கிடக்கிறது. தமிழில் எழுதிவைத்த பாக்களை படித்து பார்த்து திட்டம் போட்டால் நாடு நலனாக இருக்கும். ஆனால் 6 லட்சம் கோடி ரூபாய் கடன் தமிழக  அரசுக்கு கடனிருக்கும் போது 80 கோடி ரூபாயில் பேனா வைக்க திட்டம் போடுகிறார்கள்.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

இலங்கையில் அதிகாரமும் இல்லை அரசும் இல்லை. இந்த நிலையிலும் தமிழ் மீனவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். எல்லை தாண்டி வந்ததாக கேரள மீனவர்கள் ஒருவர்கூட இதுவரை கைது செய்யப்பட்டது கிடையாது. அதற்கு காரணம் கேரளாவின் ஆட்சியாளர்கள் அந்த மண்ணை சார்ந்தவர்கள். தமிழகத்தை வெளியே இருந்து வந்தவர்களே ஆட்சி செய்கிறார்கள். இந்த மண்ணை சேர்ந்த 2 பேர் அடிமையாகி இருக்கிறார்கள்.



காமராஜர் பல்லாயிரம் படிப்பகங்களை திறந்து படிக்கவைத்தார். திராவிட மாடல் பல்லாயிரம் குடிப்பகங்களை திறந்து குடிக்க வைக்கிறது. நீரை தேக்கிவைக்க பல வழிகள் இருந்தும் அதனை செய்யாமல் 50 ஆயிரம் கோடி செலவு செய்து கடல் நீரை குடிநீராக்கும் திட்டத்தை அமைக்க இருக்கிறார்கள். அதிகபட்சமாக 4 அல்லது 5 ஆண்டுகளில் தமிழகத்தை நான்தான் ஆட்சி செய்வேன். தமிழகத்தில் இருந்து கிடைக்கும் அனைத்து வளமும் நமக்குதான்.


மேலும் படிக்க | எம்.பி இளையராஜாவுக்கு ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜன் வாழ்த்து


மின்சாரம் உற்பத்தி செய்யும் அதானி வளம் பெறவேண்டும் என்ற நோக்கில் தான் மின்சாரத்தின் கட்டணத்தை உயர்த்த மத்திய அரசு வற்புறுத்துகிறது. நிலக்கரியை தனியாரிடம் வாங்க மத்திய அரசு வற்புறுத்தி வருகிறது என சந்திரசேகர ராவ் சொல்கிறார். யார் அந்த தனியார் என்று பார்த்தால் அதானி. ஒற்றை கட்சி ஆட்சி முறையை ஒளித்து கூட்டாட்சி முறையை கொண்டுவர வேண்டும். எல்லோருக்குமான அரசு என்பது இந்தியாவில்  இல்லை. மக்களுக்கான அரசு உருவாக வேண்டும் அது நாம் தமிழர்கட்சியின் அரசாக இருக்கும்” என்றார்.


மேலும் படிக்க | மாற்றுத்திறனாளிகளுக்கான சமநிலைதான் முழுமூச்சு - முதல்வர் ஸ்டாலின்


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.


முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ