தண்டோராவுக்கு வந்தது தடை.... கலெக்டர்களுக்கு தலைமைச் செயலர் கடிதம்
தண்டோரா போட கடுமையான தடை விதிப்பது நல்லது. மீறி ஈடுபடுத்துகிறவர்கள் மீது நடவடிக்கைகள் எடுப்பது அவசியம் என தலைமைச் செயலர் இறையன்பு மாவட்ட ஆட்சியர்களுக்கு கடிதம் எழுதியிருக்கிறார்.
கள்ளக்குறிச்சி மாணவி உயிரிழப்பு சம்பவத்தில் அரசு எடுத்த நடவடிக்கைகள், காவிரி நீர்பிடிப்புப் பகுதிகளில் பெய்த கனமழையின் காரணமாக கரையோரத்தில் வசிக்கும் மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை உள்ளிட்ட விஷயங்கல் தொடர்பாக தண்டோரா மூலம் அறிவிப்பும், எச்சரிக்கையும் விடுக்கப்பட்டன.ஆனால், தண்டோரா நாகரிக காலத்திலும் தொடரும் அவலம் என்று பலரும் சமூக வலைதளங்களில் தங்களது எதிர்ப்பை பதிவு செய்திருந்தனர். ஒருசிலர் இதுபோன்ற பணிகளுக்கு ஒலிப்பெருக்கியை பயன்படுத்த வேண்டும் என்றும் கருத்து தெரிவித்திருந்தனர்.
இந்நிலையில் தண்டோரா போடுவதற்கு கடுமையான தடை விதிப்பது நல்லது என குறிப்பிட்டு தலைமைச் செயலர் இறையன்பு அனைத்து மாவட்ட ஆட்சியர்களுக்கும் கடிதம் எழுதியிருக்கிறார். இதுதொடர்பாக அவர் எழுதியிருக்கும் கடிதத்தில், “மக்களிடம் முக்கியச் செய்திகளை விரைவாகச் சேர்க்கும் விதத்தில் இன்னும் சில ஊர்களில் 'தண்டோரா' போடும் பழக்கம் இருப்பதையும், அதைச் சமூக ஆர்வலர்கள் சுட்டிக்காட்டி வேதனைப்படுவதையும் கண்டேன்.
மேலும் படிக்க | அதிமுக பொதுக்குழுவை எதிர்த்த வழக்கை விசாரிக்கும் நீதிபதியை மாற்ற மனு தாக்கல்
அறிவியல் வளர்ந்துவிட்டது, தொழில்நுட்பம் பெருகிவிட்டது. இச்சூழலில் 'தண்டோரா' போடுவது இன்னும் தொடர வேண்டியத் தேவையில்லை. ஒலிப்பெருக்கியை வாகனங்களில் பொருத்தி வலம்வரச் செய்வதன் மூலம் மூலை முடுக்குகளிலெல்லாம் தகவல்களைக் கொண்டு சேர்த்திட இயலும். எனவே, 'தண்டோரா' போட கடுமையான தடை விதிப்பது நல்லது. மீறி ஈடுபடுத்துகிறவர்கள் மீது நடவடிக்கைகள் எடுப்பது அவசியம். இச்செய்தி ஊராட்சி அமைப்புகள் வரை ஊடுருவுமளவு பரவலான விழிப்புணர்வை ஏற்படுத்துங்கள்" என குறிப்பிட்டுள்ளார்.
மேலும் படிக்க | விடுதலைவீரர் தீரன் சின்னமலையின் நினைவுநாளில் அஞ்சலி செலுத்திய முதல்வர் ஸ்டாலின்
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ