புதுக்கோட்டை : பெண்களுக்கு எதிராக நடக்கும் பாலியல் வன்கொடுமைகள் நாளுக்கு நாள் அதிகரித்த வண்ணம் இருக்கிறது.  அதிலும் குறிப்பாக பெண் குழந்தைகள் ஒவ்வொரு நாளும் கொடூரர்கள் பிடியில் சிக்கி சின்னாபின்னமாகின்றனர்.  சட்டங்கள் கடுமையாக்கப்பட்டாலும், காம கொடூரர்களின் வெறிச்செயல் அதிகரித்து கொண்டு தான் வருகிறது.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

ALSO READ மனைவியின் தொந்தரவால் திருமணமான 1 வாரத்தில் தற்கொலை செய்த வாலிபர்!


புதுக்கோட்டை மாவட்டம் பொன்னமராவதியை அடுத்த கங்காணிப்பட்டி அருகேயுள்ள பரவாமதுரையை பகுதியை சேர்ந்தவர் சின்னாண்டி என்பவரது மகன் ராஜ்குமார் (34). இவருக்கு ஏற்கெனவே இரண்டு பெண்களுடன் திருமணங்கள் நடைபெற்று உள்ளது . இவர் கடந்த  ஆண்டு மார்ச் மாதத்தில், தான் வசிக்கும் பகுதிக்கு அருகேயுள்ள பதினொன்றாம் வகுப்பு படிக்கும் சிறுமிக்கு குளிர்பானத்தில் மயக்க மருந்து கலந்து கொடுத்து, இளம் வயது சிறுமியை, அந்த கொடூரன் பாலியல் பலாத்காரம் செய்துள்ளான்.  


இந்த சம்பவத்தை தொடர்ந்து அந்தச் சிறுமி கர்ப்பம் அடைந்தார்.  இந்நிலையில் ராஜ்குமார் இதுகுறித்து வெளியில் யாரிடம் சொல்லக்கூடாது என்று மிரட்டியதோடு, அந்த கருவையும் கலைக்க சொல்லி அந்த சிறுமியை மிரட்டியுள்ளார்.  இதனையடுத்து இந்த சம்பவம் குறித்து போலீசில் புகார் அளிக்கப்பட்டது.  கொடுக்கப்பட்ட புகாரின் அடிப்படையில், ராஜ்குமார் மீது போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்து, கீரனூர் அனைத்து மகளிர் காவல்நிலைய போலீஸார் அதிரடியாக கைது செய்து சிறையில் அடைத்தனர் .



அதனை தொடர்ந்து மாவட்ட மகளிர் நீதிமன்றத்தில், இந்த வழக்கு நடைபெற்று வந்தது.  இந்த வழக்கை விசாரித்த நீதிபதி ஆர். சத்யா தீர்ப்பளித்துள்ளார்.  அதன்படி, பாலியல் குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டு இருக்கும், ராஜ்குமாருக்கு மரணம் வரை ஆயுள் தண்டனையும், அபராதமாக  ரூ. 50 ஆயிரம் பணமும் , மேலும் சிறுமிக்கு குளிர்பானத்தில் மயக்க மருந்து கலந்து கொடுத்த குற்றத்துக்காக 10 ஆண்டுகள் சிறைத் தண்டனையும், அபராதமாக ரூ. 20 ஆயிரம் பணமும் செலுத்த வேண்டும் என்று கூறப்பட்டுள்ளது.


மேலும் சிறுமிக்கு கொலை மிரட்டல் விடுத்த குற்றத்திற்காகவும், 2 ஆண்டுகள் சிறைத் தண்டனையோடு ரூ. 5 ஆயிரம் அபராதமும் விதித்தார்.  பாதிக்கப்பட்ட அந்த சிறுமிக்கு தற்போது ஒரு ஆண் குழந்தை உள்ளது, இந்த விவகாரத்தில் ஏற்கனவே அந்த சிறுமிக்கு ரூ.4 லட்சம் ரொக்கம் கொடுத்த நிலையில், தற்போது கூடுதலாக ரூ.1.50 வழங்க கோரியும் நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.


ALSO READ திருமணம் செய்ய மறுத்ததால் வாலிபர் மீது ஆசிட் வீசிய பெண்!


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.


முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!


Android Link - https://bit.ly/3hDyh4G


Apple Link - https://apple.co/3loQYeR