திருப்பூர் நகரில் சிறுத்தை தாக்குதல்! தீவிரமாகும் கண்காணிப்பும் வேட்டையும்
திருப்பூரில் குடோன் பணியாளரை சிறுத்தை தாக்கியதில் காயமடைந்தவர் அரசு மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பெற்றுவருகிறார். சிறுத்தையை பிடிக்கும் பணிகள் தீவிரம்...
திருப்பூர்: இன்று திருப்பூர் - அம்மாபாளையம் பனியன் வேஸ்ட் குடோன் ஒன்றில் புகுந்த சிறுத்தை, அங்கு பணியில் இருந்த ராஜேந்திரன் என்பவரை தாக்கியது.
உடனடியாக அருகில் இருந்தவர்கள் அவரை திருப்பூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், காவல்துறையினர் மற்றும் வனத்துறையினர் அப்பகுதிக்கு சிறுத்தையை பிடிக்கும் பணியை தீவிரப்படுத்தியுள்ளனர். திருப்பூர் மாநகர் பகுதிக்குள் சிறுத்தை புகுந்துள்ளதால் பரபரப்பு அதிகரித்துள்ளது.
அவிநாசி அருகே பாப்பான்குளத்தில் இருந்து 25 கி.மீ. தொலைவில் உள்ள பொங்குபாளையத்தில் சிறுத்தையின் காலடித்தடம் மற்றும் கழிவு கண்டெடுக்கப்பட்டதைத் தொடர்ந்து, 20 கிராமங்களில் சிறுத்தையின் நடமாட்டத்தை கண்காணிக்கும் பணி தீவிரப்படுத்தப்பட்டுள்ளதாக வனத்துறை அதிகாரிகள் கூறுகின்றனர்.
அவிநாசி அருகே பாப்பான்குளம் கிராமத்தில் கடந்த 24-ம் தேதி தோட்டத்துக்குள் புகுந்த சிறுத்தை தாக்கியதில், வன ஊழியர் உட்பட 3 பேர் காயம் அடைந்தனர்.
Also Read | என்னைய பார்த்து குரைக்கிரயா.. நாயை கவ்விய சிறுத்தை
சிறுத்தையை தேடும் பணியில் தொடர்ந்து மூன்று நாட்களாக வனத்துறை அலுவலர்கள் மற்றும் ஊழியர்கள் ஈடுபட்டுள்ள நிலையில் பாப்பான்குளத்தில் இருந்து சிறுத்தை வெளியேறிவிட்டது.
ஆனால், சுமார் 25 கி.மீ. தொலைவில் உள்ள பொங்குபாளையம் பகுதியில் தென்பட்டதாக வந்த தகவலை அடுத்து, அப்பகுதியில் வனத்துறையினர் தீவிரத் தேடுதல் வேட்டையில் ஈடுபட்டுள்ளனர்.
பெருமாநல்லூர் தேசிய நெடுஞ்சாலையை கடந்ததாக, அவ்வழியாக காரில் சென்றவர்கள் போலீஸாருக்கு தகவல் அளித்தனர். அதையடுத்து அந்தப் பகுதியில் எச்சரிக்கை விடுக்கப்பட்டது. மாவட்ட வன அலுவலர் தேஜஸ்வி தலைமியிலான வனத்துறையினர் நேற்று அப்பகுதியில் தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர்.
தேசிய நெடுஞ்சாலை - பொங்குபாளையம் ஊராட்சிக்கு செல்லும் வழியில் உள்ள துரை என்பவரது தோட்டத்தில், சிறுத்தையின் கால்த்தடம் மற்றும் கழிவுகளை வனத்துறையினர் கண்டறிந்தனர். அவற்றின் மாதிரிகள் சேகரிக்கப்பட்டு, மரபணு பரிசோதனைக்கு சென்னைக்கு அனுப்பப்பட்டுள்ளது.
ALSO READ | வால்பாறையில் ஆட்டை வேட்டையாடும் சிறுத்தை புலி
நேற்று அதிகாலை 5 மணி வாக்கில் பொங்குபாளையம் கிராமத்தில் சிறுத்தையை பார்த்ததாகவும், அதனை நாய் துரத்தியதாகவும் தெரியவந்ததையடுத்து, வனத்துறையினர் கால்த்தடம் மற்றும் எச்சம் ஏதேனும் உள்ளதா என்பதை ஆராய்ந்தனர்.
எனவே, சிறுத்தை நடமாட்டம் உள்ளது உறுதி செய்யப்பட்டுள்ளது என்று கூறும் வனத்துறை மூத்த அலுவலர்கள், ஒரேநாளில் பாப்பான்குளத்தில் இருந்து பொங்குபாளையத்துக்கு 25 கி.மீ. தூரம் பயணித்துள்ள சிறுத்தை இரவில் நடமாடுவதால் கண்டுபிடிக்கமுடியவில்லை.
ஏற்கனவே இப்பகுதியில் பல மாதங்களாக இந்த சிறுத்தை வாழ்ந்திருக்கலாம் என சந்தேகிக்கிறோம். தொடர்ந்து விசாரித்து வருகிறோம் என்று கூறுகின்றனர்.
ALSO READ | தீவிரமாகும் சிறுத்தை கண்காணிப்பும் வேட்டையும்
20 கேமராக்களை பொருத்தி பொங்குபாளையம் பகுதியிலும், பாப்பான்குளத்தில் தொடர்ந்து கண்காணிப்புப் பணிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.
இதுதொடர்பாக அவிநாசியில் செய்தியாளர்களிடம் பேசிய திருப்பூர் மாவட்ட துணை வன பாதுகாப்பு அலுவலர் கிருஷ்ணசாமி, பாப்பான்குளம், பொங்குபாளையம், ஈட்டிவீரம்பாளையம், பரமசிவம்பாளையம், அய்யம்பாளையம், மங்கலம் உட்பட 20 கிராமங்களில் கண்காணிப்பு பணியை தீவிரப்படுத்த உள்ளதாக தெரிவித்தார்.
8 குழு அமைத்து 50 பேர் சுழற்சி முறையில், இரவு மற்றும் பகல் என 24 மணிநேரமும் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.
அதேபோல் சிறுத்தை நடமாட்டம் இருப்பதாக சந்தேகப்படும் இடங்களில் கேமராக்கள் பொருத்தி, நடமாட்டத்தை கண்காணிக்க உள்ளதால், பொதுமக்கள் யாரும் அச்சப்படத் தேவையில்லை.
ALSO READ | பொதுமக்களை அச்சுறுத்தி வந்த சிறுத்தை சுற்றிவளைப்பு
வனத்துறையினர் 24 மணிநேரமும் தயார் நிலையில் இருப்பார்கள் பொங்குபாளையம் கிராமத்தில் கண்டறியப்பட்ட சிறுத்தையின் எச்சம், கழிவுகளை சென்னை ஆய்வகத்துக்கு அனுப்பி அதன் மரபணு விஷயங்களை கண்டறிய உள்ளனர்.
Read Also | வால்பாறை நகருக்குள் உலா வரும் சிறுத்தை: பீதியில் மக்கள்!
உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.
முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூகம், வேலைவாய்ப்பு என உள்ளூர் முதல் உலகம் முழுவதும் அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் வாசிக்க, இப்போதே ஜீ இந்துஸ்தான் பயன்பாட்டைப் பதிவிறக்குங்கள்.
Android Link: https://bit.ly/3hDyh4G
Apple Link: https://apple.co/3loQYeR