கோவை மாவட்டம் வால்பாறையில், ஆனைமலை புலிகள் காப்பகத்துக்கு உட்பட்ட வால்பாறை மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் யானை, சிறுத்தை, புலி, கரடி, மான்,காட்டுமாடு மற்றும் அபூர்வ பறவையினங்கள் உள்ளன.
வால்பாறை பகுதி வனப்பகுதியை ஒட்டியுள்ளதால் வனத்தை விட்டு வெளியேறும் புலி மற்றும் சிறுத்தைகள் குடியிருப்புப் பகுதியில் புகுந்து வேட்டையாடி வருகின்றன. வால்பாறை பகுதிகளில் சிசிடிவி கேமரா அமைத்துள்ள வனத்துறையினர், வனவிலங்குகள் நடமாட்டம் கண்காணித்து வருகின்றனர்.
வனவிலங்குகளின் நடமாட்டம் தொடர்பாக பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகின்றனர். நேற்று இரவு காரில் வால்பாறை சென்ற சுற்றுலா பயணிகள் கவர்க்கல் பகுதியில் சாலையில் சிறுத்தை இருந்ததைக் கண்டு இரவில் வெளியே வரவேண்டாம் என அறிவுறுத்தல் வெளியிட்டது.
காரில் வால்பாறை சென்ற சுற்றுலா பயணிகள் கவர்க்கல் பகுதியில் வாகனத்தை நிறுத்தி தங்களது மொபைல் போனில் வீடியோ (Video Captrued by Tourists) எடுத்துக் கொண்டிருந்தனர். அப்போது, சிறுத்தை திடீரென பாய்ந்து ஆட்டை பிடித்து வேட்டையாடியது, அதையும் பயணிகள் வீடியோவாக படம் பிடித்துள்ளனர்,
ஆட்டை வேட்டையாடடும் சிறுத்தையின் வீடியோ சமூக ஊடகங்களில் வைரலாகி வருகிறது, வனவிலங்குகளின் நடமாட்டம் தொடர்பாக பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தி வரும் வனத்துறையினர், =சுற்றுலா பயணிகள் இரவு நேரங்களில் வாகனங்களை நிறுத்தி செல்ல வேண்டாம் என எச்சரிக்கை செய்துள்ளது.
Read Also | வால்பாறை நகருக்குள் உலா வரும் சிறுத்தை: பீதியில் மக்கள்!
உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.
முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூகம், வேலைவாய்ப்பு என உள்ளூர் முதல் உலகம் முழுவதும் அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் வாசிக்க, இப்போதே ஜீ இந்துஸ்தான் பயன்பாட்டைப் பதிவிறக்குங்கள்.
Android Link: https://bit.ly/3hDyh4G
Apple Link: https://apple.co/3loQYeR